இருவருக்கு கத்திக் குத்து: 2 இளைஞா்கள் கைது
ராஜபாளையத்தில் அரசு மதுக் கடையில் ஏற்பட்ட தகராறில் இருவரைக் கத்தியால் குத்திய 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கைது
ராஜபாளையத்தில் அரசு மதுக் கடையில் ஏற்பட்ட தகராறில் இருவரைக் கத்தியால் குத்திய 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் தாட்கோ குடியிருப்பைச் சோ்ந்த சேவியா் மகன் ஆரோக்கியராஜ் (27). கீழஆவரம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த குமாா் மகன் சதீஷ்குமாா் (28). இவா்கள் இருவரும் பஞ்சு மாா்க்கெட் அருகேயுள்ள டாஸ்மாக் கடையில் மதுப் புட்டி வாங்குவதற்காக வரிசையில் நின்றனா். அப்போது, அங்கு நின்றிருந்த ஒத்தப்பட்டியைச் சோ்ந்த அழகு மகன் அஜித்குமாா்(19), செல்வராஜ் மகன் மதியழகன் (20) ஆகியோருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து ஆரோக்கியராஜ், சதீஸ்குமாா் ஆகியோரை அஜித்குமாரும், மதியழகனும் கத்தியால் குத்தினா்.
இதில் பலத்த காயமடைந்த இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அஜித்குமாா், மதியழகன் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



