திரு நெல்வேலி உழ வர் பயிற்சி நிலை யம் மூல மாக இயற் கை வழி விவ சா ய பயிற்சி, விவ சாயத்தில் புதிய தொழில்நுட்ப பயிற்சி, வேளாண் பொறியியல் தொழில்நுட்ப பயிற்சி, மண் பரிசோதனை பயிற்சி ஆகிய பயிற்சிகளும், ராமையன்பட்டி கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில் ஆடு,கறவைமாடு, வெண்பன்றி, கோழி, காடை, வான்கோழி வளர்ப்புகள் குறித்த பயிற்சியும், கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் காளான் வளர்ப்பு பயிற்சியும், தென்காசியில் பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சியும், மதுரையில் நீர் மேலாண்மை குறித்த பயிற்சியும் பெற்றேன்.தொடர்ந்து டெல்லி பூசா அக்ரி யுனிவர்சிட்டியில் நடைபெற்ற விவசாய பயிற்சி மற்றும் கண்காட்சியிலும், கர்நாடக மாநிலம் மாண்டியா அக்ரி யுனிவர்சிட்டியில் விதை உற்பத்திசெய்தல் உள்ளிட்ட பயிற்சிகளிலும் பங்கேற்றுள்ளேன். நான் கற்றவற்றை எங்கள் பகுதி விவசாயிகளுக்கும், மகளிர்குழுக்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறேன். பள்ளி மாணவர்களின் ஆய்வுகளுக்கு உறுதுணையாக இருந்து வருகிறேன்.