/

சாதனை: சாதிக்கத் தேவை நம்​பிக்கை!

பள் ளிப் படிப்பை முடித் து விட் டால் அடுத்து திரு ம ணம், மகப் பேறு, குழந்தை வளர்ப்பு என்று பெண் களை ஒரு வட் டத் துக் குள் வைத் துப் பார்க் கும் நம் சமூ கத் தில், திரு ம ண மா கிய பின் படித்து உயர் பத வ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:51 pm

வே.சுந்தரேஸ்வரன்

பள் ளிப் படிப்பை முடித் து விட் டால் அடுத்து திரு ம ணம், மகப் பேறு, குழந்தை வளர்ப்பு என்று பெண் களை ஒரு வட் டத் துக் குள் வைத் துப் பார்க் கும் நம் சமூ கத் தில், திரு ம ண மா கிய பின் படித்து உயர் பத வி களை அடை வது என் பது பெண் க ளுக் குக் குதி ரைக் கொம்பு என் று தான் சொல்ல வேண் டும்.

"அதெல் லாம் உண் மை யில்லை; முயன் றால் முடி யா தது எது வு மில்லை. தன் னம் பிக் கை யு டன் முயன் றால் வெற் றிக் கனி கைக்கு எட் டும் தூரம் தான்...'என்று மன தி டத் து டன் சொல் வ து டன் அதற்கு உதா ர ண மா க வும் திகழ் கி றார் மதுரை மாவட்ட தொடக் கக் கல்வி அதி காரி அ.ஞான கெ ளரி (45).

வெறும் 10}ம் வகுப் பு டன் டிப் ளமோ படிப்பை முடித் து விட்டு திரு ம ண மாகி 25 ஆண் டு க ளைக் கடந்த பிற கும் மாவட்ட கல் வித் துறை யில் உயர் அதி கா ரி யாக வந்து தன் னம் பிக் கைக்கு எடுத் துக் காட் டாக இருக் கி றார் இவர்.

பள் ளிப் ப டிப்பை முடித் து விட்டு தனி யார் நிறு வ னங் க ளில் வேலை செய் து கொண்டே தொலை நி லைக் கல்வி வாயி லாக பல் வேறு பட் டப் படிப் பு க ளைப் படிப் ப டி யாக பயின்று ஆசி ரி ய ரா கப் பணி யாற்றி, தமிழ் நாடு அர சுப் பணி யா ளர் தேர் வா ணை யம் நடத் தும் குரூப்} 1 தேர் வில் வெற்றி பெற்று இன் றைக்கு மாவட்ட அள வில் கல்வி அதி கா ரி யா கப் பொறுப்பு வகித்து வரும் அவ ரி டம் பேசி னோம்.

இனி, அவர் கடந்து வந் த பாதை....:

""எனது சொந்த ஊர் மதுரை மாவட் டம் பேரை யூர் தாலு கா வில் உள்ள பி.சுப் பு லா பு ரம். அங்கு 5}ம் வகுப்பு வரை படித் து விட்டுப் பிறகு 10}ம் வகுப்பு வரை பாப் பு நா யக் கன் பட் டி யில் உள்ள எஸ்.கே.வி. பள் ளி யில் படித் தேன். தொடர்ந்து மது ரை யில் உள்ள மக ளிர் பாலி டெக் னிக் கல் லூ ரி யில் எலெக்ட் ரா னிக்ஸ் என் ஜி னீ ய ரிங் கில் டிப் ளமோ படித் தேன்.

அதன் பி றகு 1983}ம் ஆண்டு ஒரு வருட டேட்டா புரா ச ஸிங் கில் முது நிலை டிப் ளமோ படித் தேன். இந் தப் படிப் புக்கு மாநில அள வில் 5 பேர் தேர் வான நிலை யில் மதுரை மாவட் டத் தில் நான் உள் பட இரு வர் மட் டுமே தேர் வா னோம். தொடர்ந்து படிக்க நினைத்த எனக்கு வீட் டில் மூத்த மகள் என் ப தால் பெற் றோர் திரு ம ணம் செய் து வைத்து விட் ட னர். அப் போது, எனது வயது 21.

அதன் பி றகு, திரு மங் க லத் தில் உள்ள ஒரு பள் ளி யில் கணினி பயிற் று ந ரா கப் பணி யாற் றி னேன். சில நிறு வ னங் க ளுக்கு கணினி புரோ கி ரா மிங் கும் செய் து கொ டுத்து வந் தேன்.

ஆனா லும், தொடர்ந்து படிக்க வேண் டும் என்ற எண் ணம் என் மன தில் இருந்து கொண்டே இருந் தது. இது பற்றி, எனது கண வ ரி டம் தெரி வித் தேன். அவ ரும் எனது விருப் பத் துக்கு இசைந் தார்.

திரு ம ணம் முடிந்து 6 ஆண் டு க ளுக் குப் பிறகு 1988}ம் ஆண் டில் மதுரை காம ரா ஜர் பல் க லைக் க ழ கத் தில் அஞ் சல் வ ழி யில் பி.எஸ்சி. (கணி தம்) படிப் பில் சேர்ந் தேன்.

முன் ன தாக, 6 முதல் 12}ம் வகுப் பு கள் வரை யுள்ள கணக் குப் பாடங் க ளைப் பயின்று என்னை இதற் கா கத் தயார் ப டுத் திக் கொண் டேன்.

பி.எஸ்சி. படித் த போதே மேல் நி லைக் கல்வி பயி லும் மாண வர் க ளுக்குக் கணக் குப் பாடம் டியூ சன் எடுக்க ஆரம் பித் தேன். அதன் மூலம் கணி ச மான வரு வா யும் கிடைத் தது. அதைக் கொண்டு எனது படிப் புக் குத் தேவை யா ன வற்றை சமா ளித் தேன்.

தொடர்ந்து, கோவை பார தி யார் பல் கலைக் கழ கத் தில் அஞ் சல் வழி மூலம் பி.எட். படித் தேன். தொடர்ந்து மது ரைக் காம ரா ஜர் பல் கலைக் கழ கத் தில் அஞ் சல் வ ழிக் கல்வி மூலம் எம்.எஸ்சி. (கணி தம்) , படித் தேன். அதன் பி றகு ஒரு ஆண்டு பிஜி டி சிஏ முடித் தேன். அப் போ தெல் லாம் நான் சொல் லிக் கொ டுக் கும் மாண வர் க ளு டன் சேர்ந்து நானும் கணி னித் தேர்வு எழு தி ய துண்டு.

தொலை நி லைக் கல் வி யில் படிக் கும் போதே கல் லூரி மாணவ, மாண வி ய ருக் கும் கணி தம் டியூ சன் எடுத் தேன். வீட் டில் சில ஆண் டு கள் கணினி மையம் வைத் தி ருந் தேன். இது த விர, மது ரை யில் டிவி எஸ் பள் ளி யில் கம்ப் யூட் டர் முது நிலை பட் ட தாரி ஆசி ரி ய ரா க வும் பணி யாற் றி னேன்.

1999}ல் எம்.பில். (கணி தம்) படித் தேன். இந் தப் படிப் பெல் லாம் முடித் த போது எனக்கு வயது 35. இனி யும் அரசு வேலைக் குப் போக முடி யுமா? என்ற கேள்வி என் மன தில் ஒலித் தது. ஆனா லும், தன் னம் பிக்கை எனக்கு ஊக் க மூட் டி யது.

இந் நி லை யில் தான் 2001}ல் நடை பெற்ற ஆசி ரி யர் தேர்வு வாரிய தேர் வில் கணித ஆசி ரி யர் பணி யி டத் திற் காக தேர்வு எழுதி வெற் றி பெற் றேன்.

மதுரை மேல வ ளவு உயர் நி லைப் பள் ளி யில் கணி தப் பட் ட தாரி ஆசி ரி ய ராக சேர்ந் தேன். சில மாதங் க ளி லேயே தேர்வு வாரி யத் தின் கணி த வி யல் முது நி லைப் பட் ட தாரி ஆசி ரி யர் தேர்வு எழு தி னேன். இத் தேர் வுக்கு என் னி டம் படித்த மாணவி பரணி (விரு து ந கர் வி.வி.வி. கல் லூ ரி யில் விரி வு ரை யா ள ராக பணி யாற் று கி றார்) மற் றும் தோழி மோகனா (சிவ காசி மெப்கோ பொறி யி யல் கல் லூரி விரி வு ரை யா ளர்) ஆகி யோர் தேவை யான புத் த கங் கள் கொடுத்து உத வி னார். அத் தேர் வி லும் வெற்றி பெற் றேன். மேலும், ரேங்க் அடிப் ப டை யில் இத் தேர் வில் மாநில அள வில் 10 ஆவ தாக வந் தேன். இத னால், எனக்கு தன் னம் பிக்கை மேலும் அதி க ரித் தது.

இதை ய டுத்து, ராம நா த பு ரம் மாவட் டம் நயி னார் கோ வில் அரசு மேல் நி லைப் பள் ளி யில் பணி யாற்றி, பின் னர் மாறு த லாகி, சிவ காசி நக ராட் சிப் மேல் நி லைப் பள் ளி யில் 4 ஆண் டு கள் பணி யாற் றி னேன்.

கல் லூரி விரி வு ரை யா ள ராக விரும்பி அதற் கான தேர் வு க ளை யும் எழு தத் தொடங் கி னேன். ஆனால், சில மதிப் பெண் கள் அடிப் ப டை யில் வெற் றி வாய்ப்பை இழந் தேன்.

அப் போ து தான், 2008}ம் ஆண் டில் தமிழ் நாடு அர சுத் தேர் வா ணை யம் குரூப்} 1 தேர்வு அறி விக் கப் பட் டது. அதில், மாவட் டக் கல்வி அதி காரி பணிக் காக விண் ணப் பித் தேன். பின் னர், இத் தேர் வுக் காக கடு மை யான பயிற் சி யில் ஈடு பட்டு எழுத் துத் தேர் வில் வெற் றி பெற்று நேர் மு கத் தேர் வி லும் தேறி னேன். இதை ய டுத்து, பிற் பட்ட வகுப் பி ன ருக் கான இருந்த ஒரே ஒரு பணி யி டத் தில் நான் மட் டுமே தேர் வா னேன்.

இதைத் தொ டர்ந்து 2009}ம் ஆண் டில் சிவ கங்கை மாவட் டத் தில் 6 மாதம் பயிற்சி பெற்று, தற் போது மதுரை மாவட் டத் தொடக் கக் கல்வி அலு வ ல ரா கப் பணி யாற்றி வரு கி றேன்.

எது வுமே நம் மால் முடி யும். நாம் தடைக் கற் க ளாக நினைக் கும் பல விஷ யங் க ளை யும் படிக் கல் லாக நினைத் தாலே போதும். அதுவே நமக்கு வெற் றிப் பா தைக்கு வழி காட் டும்.

நான் வேலை செய் து கொண்டே எனது படிப் பைத் தொடர்ந் தேன். கண வ ருக்கு மனை வி யா க வும், குழந் தை க ளுக்கு நல்ல தாயா க வும், மாண வர் க ளுக்கு நல்ல ஆசி ரி ய ரா க வும் என் னால் இருக்க முடிந் த தற்கு கார ணம் என் தன் னம் பிக் கை தான்.

மேலும், இந்த சமு தா யத் தில் மனை வி யா ன வள் தனக் குக் கீழ் இருக் க வேண் டும் என்ற எண் ணம் பர வ லா கவே உள் ளது. ஆனால், இந்த விஷ யத் தைப் பொருத் த மட் டில் கண வர் ஒரு முன் மா தி ரி யாக இருந் தார். அவர் தான் என்னை மேலும் ஊக் கப் ப டுத் தி னார்’’ என் கி றார் புன் மு று வ லு டன்.

ஞான கெ ள ரி யின் கண வர் சுய தொ ழில் செய் து வ ரு கி றார். இவ ரது மூத்த மகள் கணினி அறி விய லில் பொறி யி யல் பட் டம் பெற்று சென் னை யில் எச்.சி.எல். நிறு வ னத் தில் சாப்ட் வேர் என் ஜி னீ ய ரா கப் பணி யாற் று கி றார். மற் றொரு மகள் 10}ம் வகுப்பு படித்து வரு கி றார்.

""மாண வர் கள் பல் வேறு சூழ லில் படிக்க வரு கின் ற னர். அவர் க ளி டம் கொஞ் சம் அன்பு செலுத் தி னாலே போதும். முரட்டு மாண வ னும் அடங் கிப் போய் வி டு வான். இயல் பான அணு கு முறை மாண வர் க ளின் உள் ளத் தில் மாற் றத்தை ஏற் ப டுத் தி வி டும்.

இதை ஆசி ரி யர் கள் புரிந் து கொள்ள வேண் டும். ஆசி ரி யப் பணியை அறப் ப ணி யாக கருதி மாண வர் க ளுக் காக வருந்தி உழைக்க வேண் டும். அதன் மூ லம் கிடைக் கும் வரு மா னம் தான் வாழ் வில் நிலைத்து நிற் கும் என் பது என் ஆழ மான நம் பிக்கை’’ என் கி றார் இந்த தன் னம் பிக்கை பெண் அதி காரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.