விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

முகங்கள்: 110 வயது கொழும்புக்காரப் பாட்டி!

கொழும்புக்காரப் பாட்டி வீடு எங்கிருக்கிறது என்று கேட்டால் அந்த ஊரில் உள்ள சிறு குழந்தைகள்கூட காட்டிவிடும். 110 வயதாகும் அந்தப் பாட்டியைத் தெரியாதவர்கள் யாரும் அங்கு இருக்கமாட்டார்கள். அந்தப் பாட்டியின

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:23 am

வை. இராமச்சந்திரன்

கொழும்புக்காரப் பாட்டி வீடு எங்கிருக்கிறது என்று கேட்டால் அந்த ஊரில் உள்ள சிறு குழந்தைகள்கூட காட்டிவிடும். 110 வயதாகும் அந்தப் பாட்டியைத் தெரியாதவர்கள் யாரும் அங்கு இருக்கமாட்டார்கள். அந்தப் பாட்டியின் பெயர் ஞானவடிவு. திருநெல்வேலி காளத்திமடத்தில் வசித்து வருகிறார்.

 ""எனது சொந்த ஊர் ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலை. எனக்குக் காளத்திமடத்தைச் சேர்ந்த பழனிவேல் என்பவருடன் திருமணம் ஆன உடன், நாங்கள் பிழைப்பிற்காக கொழும்பு சென்றுவிட்டோம். எனக்கு 2 ஆண்கள் உள்பட 9 பிள்ளைகள். தற்போது ஓர் ஆண் பிள்ளையும் 3 பெண் பிள்ளைகளும் மட்டுமே உயிருடன் உள்ளனர். நாங்கள் குடும்பத்துடன் காளத்திமடத்திற்கு வந்து குடியேறி சுமார் 50 ஆண்டுகள் இருக்கும். நாங்கள் கொழும்பில் வெகு காலம் இருந்து விட்டு இங்கு வந்து குடியேறியதால்,இங்கு எங்கள் வீட்டைக் கொழும்புக்காரர் வீடு என அழைப்பர். என்னைக் கொழும்புக்காரப் பாட்டி என்றும் அழைப்பார்கள்.

 இப்போது எனக்கு 110 வயதாகிறது. வீட்டில் சும்மா இருக்க எனக்குப் பிடிக்காது. தோசை சுட்டு தெருத்தெருவாக சென்று விற்று வந்துகொண்டிருந்தேன். மூன்று மாதத்திற்கு முன்பு தோசை விற்கப் போனபோது தெருவில் கீழே தவறி விழுந்து விட்டேன்.

 அதிலிருந்து சரியாக நடக்க முடிவதில்லை. இதனால் தோசை வியாபாரம் செய்யமுடியவில்லை. நன்றாகத் திடம் பெற்றதும் மீண்டும் வியாபாரத்தைத் தொடங்குவேன்'' என்கிறார் கொழும்புப் பாட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.