100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

இளசு... விரும்பும் புதுசு...

தமிழ்த் திரையுலகின் இளம் பெண் இயக்குநர் மதுமிதா. "வல்லமை தாராயோ' "கொல கொலயா முந்திரிக்கா' ஆகிய படங்களை இயக்கி அனைவருடைய கவனிப்புக்கும் உள்ளானவர். பிறந்தது சென்னையில். படித்தது இந்தோனேஷியா, சிங்கப்பூரி

Published On :

தமிழ்த் திரையுலகின் இளம் பெண் இயக்குநர் மதுமிதா. "வல்லமை தாராயோ' "கொல கொலயா முந்திரிக்கா' ஆகிய படங்களை இயக்கி அனைவருடைய கவனிப்புக்கும் உள்ளானவர். பிறந்தது சென்னையில். படித்தது இந்தோனேஷியா, சிங்கப்பூரில். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸில் உள்ள "நியூயார்க் ஃபிலிம் அகாடமி'யில் டைரக்ஷனுக்காகப் படித்திருக்கிறார்.

திரைத்துறையில் இவர் சிறகடிக்க ஊக்கம் தருபவர் கணவர் விஜய் வெங்கட்ராமன். தந்தை சுந்தர்ராமன் தொழிலதிபர். அம்மா நளினி சுந்தர்ராமன் சிறந்த நிர்வாகி. அறிமுகப் படலத்திற்குப் பின் அவரிடம் கேட்டோம்.

நவீன உலகில் நவீனப் பெண்ணாகிய நீங்கள் பயன்படுத்தும் நவீனம் என்ன? என்று.

""நான் ஒரு கேமரா வைத்திருக்கிறேன். கேனான் எஸ்எல்ஆர் கேமரா. எஸ்எல்ஆர் கேமரா என்றவுடன் ஃபிலிம் பயன்படுத்தும் கேமரா என்று நினைத்துவிடாதீர்கள்.

இது டிஜிட்டல் கேமரா. டிஜிட்டல் கேமராவில் அப்படியென்ன புதுசு என்று கேட்கிறீர்களா?

சாதாரணமாக, டிஜிட்டல் கேமராவில் எல்லாமே ஆட்டோமேடிக்காக இருக்கும். படத்தை வியூ ஃபைண்டரில் பார்த்து "கிளிக்'க வேண்டியதுதான். ஆனால் இந்தக் கேமராவில் நீங்கள் விரும்பியபடி ஷட்டர் ஸ்பீடு, அபெக்சர் எல்லாம் வைத்துக் கொள்ள முடியும். ஃபிலிம் கேமராவில் படமெடுத்தால் படத்தில் கிரெய்ன் தெரியும். இந்த கேமராவில் படம் படுசுத்தமாக, தெளிவாக இருக்கும்.

எந்தக் கேமராவில் படம் எடுத்தாலும் அந்தப் படம் ஒற்றைப் பரிமாணத்துடன்தான் இருக்கும். ஒருவரை அவரின் எதிரில் நின்று படம் எடுத்தால் அவர் முன்பக்கத்தை மட்டுமே சாதாரணக் கேமராவில் படம் பிடிக்க முடியும். என்னுடைய இந்தக் கேமராவில் ஒருவரின் எல்லாப் பக்கங்களையும் ஒரே நேரத்தில் படம் பிடிக்க முடியும். இதை 360 டிகிரி ஸ்டாப் மோஷன் என்பார்கள்.

இந்தக் கேமராவை வைத்து லட்சக்கணக்கான புகைப்படங்கள் எடுத்திருக்கிறேன்.

நான் டைரக்டர் என்பதால் ஏதோ சினிமா ஸ்டில் எடுப்பேன் என்று நினைத்துவிடாதீர்கள். எல்லாமே சினிமா தவிர்த்து வீட்டு விசேஷங்கள், டூர் போகும் போது எடுத்த படங்கள். சினிமாத்துறைக்கு இந்தக் கேமராவை லொக்கேஷன் பார்க்கப் போகும்போது மட்டும் பயன்படுத்தியிருக்கிறேன்'' என்கிறார் முகம் எல்லாம் மலர்ந்திருக்கும் சிரிப்புடன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.