பொங்கல் ஸ்பெஷல்: பொங்கலோ... பொங்கல்!

கல்கண்டு பொங்கல் தேவையான பொருட்கள்: அரிசி - 1/2 கிலோ கல்கண்டு - 1/2 கிலோ பால் - 1 லிட்டர் ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி குங்குமப்பூ - தேவையான அளவு முந்திரிப் பருப்பு - 10 உலர்ந்த திராட்சை - 10 நெய் - 4
பொங்கல் ஸ்பெஷல்: பொங்கலோ... பொங்கல்!

கல்கண்டு பொங்கல்

தேவையான பொருட்கள்:

அரிசி - 1/2 கிலோ

கல்கண்டு - 1/2 கிலோ

பால் - 1 லிட்டர்

ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி

குங்குமப்பூ - தேவையான அளவு

முந்திரிப் பருப்பு - 10

உலர்ந்த திராட்சை - 10

நெய் - 4 தேக்கரண்டி

செய்முறை: அரிசியுடன் பால் சேர்த்து நன்கு குழையும் வரை குக்கரில் வேக வைத்து கொள்ளவும். இத்துடன் கல்கண்டை கலந்து மசித்துக் கொள்ளவும். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றைச் சேர்க்கவும். ஏலக்காய், குங்குமப் பூ தூவி இறக்க, சுவையான கல்கண்டு பொங்கல் தயார்.

தக்காளி பொங்கல்

தேவைப்படும் பொருட்கள்:

தக்காளி தொக்கு - 1/2 கப்

மிளகாய் - 1

கறிவேப்பிலை - சிறிது

பச்சரிசி - 1 கப்

பயத்தம் பருப்பு - 1/2 கப்

மிளகு - 2 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

முந்திரி - 100 கிராம்

நெய் - 100 கிராம்

இஞ்சி - அரை துண்டு

உப்பு - தேவையான அளவு

பூண்டு - 2 பல்

பச்சை வேர்க்கடலை - 1/4 கப்

தயாரிக்கும் முறை: முதலில் பயத்தம் பருப்பை மிதமான பக்குவத்தில் வறுத்து கொள்ளவும். முந்திரி, மிளகு, சீரகம், தூளாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றை நெய்யில் தாளித்து கொள்ளவும். இதனுடன் வேர்க்கடலை, மிளகாய் போட்டு வதக்கிக் கொள்ளவும். இதில் பயத்தம் பருப்பு, அரிசி சேர்த்து குக்கரில் 5 கப் தண்ணீர் ஊற்றி, ஐந்து விசில் வரை வேக வைக்க அருமையான தக்காளி பொங்கல் தயார்.

சர்க்கரைப் பொங்கல்

தேவைப்படும் பொருட்கள்:

பச்சரிசி - இரண்டு கப்

சிறுபருப்பு - அரை கப்

வெல்லம் - ஒரு கப்(தூளாக்கியது)

நெய் - அரை கப்

முந்திரி - 10

திராட்சை - 20

ஏலக்காய்த் தூள் - அரை தேக்கரண்டி

தயாரிக்கும் முறை: முதலில் முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்து எடுத்து கொள்ளவும். இதனுடன் சிறுபருப்பையும், அரிசியையும் அடுத்தடுத்து கொட்டி வறுக்கவும். ஒரு பாத்திரத்தில் மூன்று பங்கு தண்ணீர் ஊற்றி, நன்கு கொதி வந்ததும் அரிசியையும், சிறுபருப்பையும் அதில் போட்டு வேகவிடவும். நன்கு வெந்தவுடன் வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி ஊற்றி கலக்கவும். பின்னர், முந்திரி, திராட்சை, ஏலக்காய்தூள், தூவி, நெய் ஊற்றி கிளறி இறக்கவும்.

ரவா பொங்கல்

தேவையான பொருட்கள்:

ரவை - 1 கப்

பயத்தம் பருப்பு - 1/2 கப்

முந்திரி பருப்பு - 10

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

இஞ்சி - சிறு துண்டு

பச்சை மிளகாய் - 2

உப்பு , நெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து கொள்ளவும். மிளகு, சீரகம் ஆகியவற்றை வறுத்து லேசாக தூளாக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் துண்டாக்கவும். இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும். நெய்யில் பதமாக வறுத்த பயத்தம் பருப்பை ஒன்றரை கப் நீரில் முக்கால் பாகம் வேக வைக்கவும். நெய்யில் தாளிக்கப்பட்ட இஞ்சி, பச்சை மிளகாயுடன் ரவை, தேவையான உப்பை சேர்த்து நன்றாக வேகும் வரை கிளறவும். இதனுடன் சுடு தண்ணீரை ஊற்றி, பயத்தம் பருப்பைக் கொட்டி கெட்டியாகாமல் கிளறி மூடி வைக்கவும். பின்னர், மிளகு, சீரகத்தூள், முந்திரி, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தூவி இறக்கவும். இதனைச் சூடாக தேங்காய் சட்னியுடன் பரிமாற சுவையாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com