தென்னாப்பிரிக்காவில் இந்தியர்க்கு எதிரான கறுப்புச் சட்டங்களை காந்தியடிகள் கொளுத்தியதால், சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அவர் செருப்புத் தைத்தார். முதல் இணைச் செருப்பே சிறப்பாக அமைந்தது. அதனை யாருக்காவது அன்பளிப்பாக அளிக்க விரும்பினார். அவர் நினைவிற்கு வந்த முதல் மனிதர் ஸ்மட்ஸ்.
அவர் காந்தியடிகளைச் சிறையிலடைத்த ஆளுநர். சிறையிலிருந்து விடுதலையானதும் ஸ்மட்ûஸ சந்தித்துத் தான் தைத்த காலணிகளை வழங்கினார். அதற்குப் பதிலாக ஸ்மட்ஸ், காந்திக்கு விவிலியம் சார்ந்த இரு நூல்களைப் பரிசாகக் கொடுத்தார். அவற்றைப் பொன்னைப்போல் போற்றித் தம்முடனே வைத்துக் கொண்டார் காந்தியடிகள்.
1948-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் முப்பதாம் நாள் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார். உலகமே இரங்கல் செய்தி விடுத்தது. ஸ்மட்ஸ் தம்முடைய இரங்கல் செய்தியில், ""காந்தி சிறையில் தாமே தயாரித்த காலணியை, எனக்கு அன்பளிப்பாக அளித்தார். அதனை ஆர்வத்தோடு வாங்கி அணிந்தேன்; என் கால்கள் நடுங்கின; நிற்க முடியவில்லை. உடனே அதனை எடுத்துச் சென்று என் பூசை அறையில் வைத்து வணங்கி வருகிறேன்'' என்று குறிப்பிட்டார்.
("காந்தியம்' என்ற நூலிலிருந்து)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்காலில் 3 நாள்கள் மதுக்கடைகளை மூட உத்தரவு
கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப். 17இல் தொடக்கம்

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


