இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வரதராஜன் வழங்கும் தியாகராஜர்!

குறுகிய காலத்தில் வெள்ளி விழாவைத் தாண்டிவிட்ட தமிழ் நாடகம் ஒன்று இப்போது சபா மேடைகளில் சக்கைப் போடு போட்டுக் கொண்டு இருக்கிறது.

News image
Updated On :1 ஏப்ரல் 2016, 12:47 pm

சாருகேசி

குறுகிய காலத்தில் வெள்ளி விழாவைத் தாண்டிவிட்ட தமிழ் நாடகம் ஒன்று இப்போது சபா மேடைகளில் சக்கைப் போடு போட்டுக் கொண்டு இருக்கிறது. நாடகம் சமூக நாடகமோ, அரசியல் நாடகமோ அல்ல. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கர்நாடக இசை மூவரில் ஒருவரான மகான் தியாகராஜர் வாழ்க்கைதான், அந்த நாடகம்.

இது எப்படி சாத்தியமாயிற்று?

யுனைடெட் விஷுவல்ஸ் குழுவின் டிவி வரதராஜன் மனத்தில் மகான் தியாகராஜர் இரண்டு வருடங்களாகவே இடம் பிடித்துக் கொண்டு அவரைத் தூங்க விடாமல் செய்து கொண்டிருந்தார் என்பது பலருக்கும் தெரியாது.

""சமூக நாடகங்களை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு, மேடையில் தியாகராஜராக உலா வர ஒரு விதத்தில் வீயெஸ்வி சார்தான் காரணம்'' என்று சொன்னார் வரதராஜன். ஆம். ""வீயெஸ்வி முன்பு எழுதியிருந்த தியாகராஜரின் வாழ்க்கைச் சரிதத்தை அடிப்படையாக வைத்து, அவரே நாடகமாக்கிக் கொடுத்திருக்கிறார். அவருடைய வாழ்க்கையில் ஏராளமான சம்பவங்கள் இருந்தன. அவை நாடகத்துக்கு உதவியாக இருந்தன'' என்றார் வரதராஜன்.

""முதலில் அச்சத்தோடுதான் இந்த நாடகத்தை அணுகினேன். சபா ரசிகர்கள் நாடகத்தை ஏற்க வேண்டுமே என்ற கவலை முதலில் எனக்கு இருந்தது. ஆனால் முதல் முறை மேடை ஏறிய உடனேயே எல்லாரும் பாராட்டத் தொடங்கிவிட்டார்கள். தியாகராஜர் நாரதரின் அவதாரம் என்று காண்பிக்க முதலில் ஒரு காட்சியை உருவாக்கினோம்.

பிறகு அவருடைய வாழ்க்கையை நாடகமாக்கத் தொடங்கும் முன், அவருடைய ஆரம்ப கால வாழ்க்கையை, எல்லாருக்கும் பரிச்சயமான "ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே' ராகத்திலேயே பிறைசூடனின் கவிதை வரிகளில் சொன்னோம். அதற்கு பிரபல ஓவியர் ஹிந்து கேசவ் நிறைய ஓவியங்கள் வரைந்து உதவினார்'' என்று ஒரு பின்னோக்குப் பார்வையில் நாடக அமைப்பை விளக்கினார் வரதராஜன்.

""வெறும் மேடையாகக் காண்பிக்காமல், தியாகராஜரின் படத்தை வைத்துவிட்டு, ஷோபனா ரவியின் குரலில் அவரைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்லிவிட்டு, தியாகராஜரின் வீட்டில் உள்ள அத்தனை பாத்திரங்களையும் அறிமுகம் செய்து வைத்த பின், பஞ்சரத்ன கீர்த்தனைகளில் ஒரு ரத்னமான ஜகதானந்த காரகாவுடன் நாடகத்தைத் துவக்குகிறோம்'' என்றார் வரதராஜன்.

கோவையிலும், மதுரையிலும் நல்ல வரவேற்பு இருந்ததாம். ""சபை நிறைந்த கூட்டம்'' என்றார் வரதராஜன், திருப்தி குரலில் வெளிப்பட. சரி, ஹைதராபாத், மும்பை, தில்லியில் எல்லாம் எப்படி?

""மும்பை தில்லியில் எல்லாம் தமிழ் தெரியாதவர்களும் புரிந்து கொள்வதற்காக, பி.சி. ராமகிருஷ்ணாவின் குரலில் நாடகத்தின் சுருக்கத்தைப் பதிவு செய்து கொண்டு போயிருந்தோம். அது மிக உதவியாக இருந்தது'' என்றார்.

""ஹைதராபாத்தில் நாடகம் முடிந்ததும் கவர்னர் ஈ.எஸ்.எல். நரசிம்மன் நெகிழ்ந்து போய்ப் பாராட்டினார். அவர் மனைவியையும் மேடைக்கு அழைத்து வந்து எங்களைப் பாராட்டினார். தில்லியில் மிகவும் ரசித்தார்கள். மும்பையில் இரண்டு சபாக்களில் நாடகம் போட்டுவிட்டோம். ஷண்முகானந்தாவில் அடுத்த ஜனவரிக்கு இப்போதே தேதி கொடுத்துவிட்டார்கள். (அது நூறாவது நாடகமாக இருக்குமோ?)

ஆனால் ஷண்முகானந்தா தலைவர் சங்கர், சென்னை தாம்பரம் பள்ளியில் மாணவர்கள் பார்ப்பதற்காகவே நாடகத்தைப் போடச் சொன்னார். கேரளாவில் திருச்சூரில் அழைத்திருந்தார்கள், மாநில சங்கீத நாடக அகாடமி சார்பில். இதில் தமிழ் நாடு இயலிசை நாடக மன்றமும் பங்கு கொண்டது. எங்களை எங்கோ வேறு உலகத்துக்கே அழைத்துக்கொண்டு போய்விட்டீர்கள் என்று மனம் திறந்து பாராட்டினார்கள்'' என்று மகிழ்ச்சி பொங்கக் கூறுகிறார் வரதராஜன்.

""அந்தக் காலச் சூழலைக் காட்ட வேண்டியிருப்பதால், செட் முதற்கொண்டு எல்லாவற்றையும் தனியே ஒரு டிரக்கில் எடுத்துக் கொண்டு போய்விடுகிறோம்'' என்றார் வரதராஜன்.

கர்நாடக இசைப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் பங்களிப்பும் நிறையவே இருக்கிறது. தியாகராஜருக்குக் குரல் கொடுக்க சேர்த்தலை ரங்கநாத சர்மா, ஓ.எஸ். அருண், குன்னக்குடி பாலமுரளி கிருஷ்ணா என்று மூன்று சிறந்த பாடகர்கள். சுமார் 30 பாடல்களின் பல்லவிஅனுபல்லவிகளை இவர்கள் செவி குளிரப் பாடுவதை இந்த இசை நாடகத்தில் கேட்டு ரசிக்கலாம். தியாகராஜரை கோபாலகிருஷ்ண பாரதி சந்திக்கும் கட்டம் இருவர் வாழ்க்கையிலும் முக்கியமானது. கோபாலகிருஷ்ண பாரதி பாடும் "சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா?' என்ற ஆபோகி ராகப் பாடலையும் விக்னேஷ் ஈஸ்வர் குரலில் செவி குளிரக் கேட்கலாம்.

தியாகராஜருக்கும் அவர் சகோதரர் ஜல்பேசனுக்கும் இடையே இருந்த சகோதரப் பிணக்கு நாடகத்தில் முக்கியமாக இடம் பெறுகிறது. தியாகராஜரின் பாடல் வரிகளை மட்டுமே கேட்டு ரசித்து வந்திருக்கிறோம். அவர் வாழ்க்கை எப்படி இருந்தது என்று அறிய டிவி வரதராஜனின் தியாகராஜர் ஓர் அரிய வாய்ப்பாக இருக்கிறது.

நாடகத்தை அரங்கேற்றும் முன், நேரடியாகத் திருவையாறுக்கே முழு குழுவும் சென்று, அவர் சமாதியில் வணங்கிவிட்டு வந்திருப்பது அவர்களுக்கு அந்த மண்ணின் மகிமையை உணர வைத்ததாம். ""ஜெயஸ்ரீ அங்கே சுமார் ஒரு மணி நேரம் தியாகராஜர் கிருதிகளைப் பாடினார்'' என்றார் வரதராஜன். ரிகார்டிங்கின்போது ஜெயஸ்ரீ எடுத்துக் கொண்ட கூடுதல் அக்கறையும் அவர் தந்த ஒத்துழைப்பும், பிரதி பலனாக எதையும் ஏற்றுக் கொள்ளாததும் குழுவை நெகிழ வைத்துவிட்டது.

""அந்த இசை மேதை மகான் தியாகராஜருக்கு நான் இதைக் கூட செய்ய வேண்டாமா?'' என்று திருப்பிக் கேட்கிறார் ஜெயஸ்ரீ. (அவர் மாணவிகள் பாடுவதும் நாடகத்தில் இருக்கிறது).

""ஸ்பான்ஸர்கள் வெகுவாக ஒத்துழைப்புத் தந்திருக்கிறார்கள். இப்போதே இருபத்தைந்து முறைகள் மேடை ஏற்றிவிட்டோம். இன்னும் சபாக்கள் சிலவற்றிலிருந்து அழைப்புகள்

வந்துகொண்டு இருக்கின்றன'' என்கிறார் வரதராஜன்.

""நாடகத்தின் வெற்றிக்கு என்ன காரணம்?''

என்று டிவி வரதராஜனையே கேட்டோம்.

""கதை, நடிப்பு எதையும் மிகைப்படுத்தாமல் ரசிகர்களுக்கு நாடகத்தை வழங்கியிருப்பதுதான் காரணமாக இருக்க வேண்டும்'' என்கிறார் வரதராஜன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.