சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

அவரைத் தெரியுமா?

தமிழ்த் திரைப்பட வசன உலகில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் இளங்கோவன். "கண்ணகி' உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் வசனம் எழுதியுள்ளார். பின்னாளில் செல்வாக்கு இழந்து ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டார்.

News image
Updated On :24 டிசம்பர் 2017, 7:18 am

வி.ந.ஸ்ரீதரன்

தமிழ்த் திரைப்பட வசன உலகில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் இளங்கோவன். "கண்ணகி' உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் வசனம் எழுதியுள்ளார். பின்னாளில் செல்வாக்கு இழந்து ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இதைக் கேள்விப்பட்ட நடிகர் எம். ஆர்.ராதா ஒரு கவரில் பணத்தை வைத்து அதைக் கொடுத்து அனுப்ப தன் உதவியாளர்களில் ஒருவரைக் கூப்பிட்டார்.
உதவியாளரிடம், ""உனக்கு அவரைத் தெரியுமா?'' என்றார்.
அவர், ""தெரியும்'' என்றார்.
""அப்போ நீ போக வேண்டாம்'' என்று சொல்லிவிட்டு மற்றொரு உதவியாளரைக் கூப்பிட்டு, ""உனக்கு அவரைத் தெரியுமா?'' என்றார்.
அவர்,""தெரியாது'' என்றதும், ""நீ தான் சரியான ஆள்'' என்று அவரிடம் பணத்தைக் கொடுத்தனுப்பினார்.
""வசனகர்த்தாவை தெரிந்தவரிடம் பணத்தைக் கொடுத்தனுப்பாமல், ஏன் தெரியாதவரிடம் கொடுத்தனுப்பினீர்கள்'' என்று கேட்டதற்கு எம்.ஆர்.ராதா சொன்ன பதில் இது:
""ஒரு காலத்தில் அவர் ஓஹோன்னு கொடிகட்டிப் பறந்தவர். தெரிஞ்சவரிடம் கொடுத்து அனுப்பினா கொடுப்பவருக்கும் தர்ம சங்கடம். வாங்கிக் கொள்ளும் வசனகர்த்தாவுக்கும் தர்ம சங்கடம் ஏற்படும். அதனால்தான் தெரியாதவரிடம் கொடுத்தனுப்பினேன்'' என்றாராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.