ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

திரைக்கதிர்

மாளவிகா மோகனன். "மாஸ்டர்' படம் வெளிவருவதற்கு முன்பு சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சிப் புகைப்படங்களைப் பதிவிட்டு வந்தார்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 12:30 am


மாளவிகா மோகனன். "மாஸ்டர்' படம் வெளிவருவதற்கு முன்பு சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சிப் புகைப்படங்களைப் பதிவிட்டு வந்தார். படம் வெளிவந்த பின் அவற்றிற்கு சிறிது ஓய்வு கொடுத்தார்.  இப்போது மீண்டும் கவர்ச்சிப் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார்.  இன்ஸ்டாகிராமில் அவரது ஒவ்வொரு புகைப்படத்திற்கும் கிட்டத்தட்ட 5 லட்சம் லைக்குகள் வரை கிடைத்துள்ளன.

---------------------------------------------------------------------


இயக்குநர் பாலா ஓடிடி தளத்திற்கு படம் இயக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார். நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக அவர் படம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. விரைவில் முறைப்படியான அறிவிப்பு வெளிவர இருக்கிறதாம். 
 

---------------------------------------------------------------------

தெலங்கானா மாநிலத்தில் தனது சொந்த ஊரான மெகபூப் நகரில் புதிதாக மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றைத் திறக்கவுள்ளார் விஜய் தேவரகொண்டா. ஏற்கெனவே சொந்தமாக "ரவுடி வேர்' என்ற ஆடை கம்பெனியையும், "கிங் ஆப் த ஹில்' என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் இவர்.
 

---------------------------------------------------------------------

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 40-ஆவது படம் உருவாகி வருகிறது. கடந்த மாதம் சூர்யா, கரோனா தொற்றுக்கு ஆளானதால் இதன் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. சூர்யா, துப்பாக்கியை நீட்டியபடி நிழல் மறைவாக தான் நிற்பது போன்ற  அதிரடியான  படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 

---------------------------------------------------------------------

2019-இல் மலையாளத்தில் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியான படம் "லூசிபர்'. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்கிறார். மோகன்ராஜா இயக்குகிறார். மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்த வேடத்தில் நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது நயன்தாராவிற்குப் பதில் திரிஷா நடிக்கவுள்ளாராம்.
 

---------------------------------------------------------------------


தமிழ்த் திரையுலகில் வித்தியாசமான, அதிலும் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உண்டு. குழந்தைகளைப் பெற்றோர்கள் தான் திரையரங்கிற்கு அழைத்து வரவேண்டும் என்பதால், அவர்களைக் கவர்வது மிகவும் கடினம். இந்தக் கவரும் யுக்தியை 
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலமாகவே செய்திருக்கிறது "ஆலம்பனா'. இந்தப் படத்தை  கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் சந்துரு இணைந்து தயாரிக்கின்றனர்.

---------------------------------------------------------------------

தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன், அடுத்தபடியாக சூர்யா நடிக்கும் "வாடிவாசல்' படத்தை இயக்குகிறார். மேலும், சூர்யா படத்தை முடித்ததும் விஜய் நடிக்கும் படத்தை தான் இயக்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளார் வெற்றிமாறன்.

---------------------------------------------------------------------

தனுஷ் ஹிந்தியில் நடித்துள்ள மூன்றாவது படம் "அத்ரங்கி ரே'. ஆனந்த் எல்.ராய் இயக்க, அக்ஷய் குமார், சாரா அலிகானும் நடித்துள்ளனர். ஏற்கெனவே தனது பகுதி படப்பிடிப்பை முடித்துவிட்டார் தனுஷ். இப்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. 

---------------------------------------------------------------------

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள அவரது 46-ஆவது பட அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தில் கதாநாயகியாக பெமினா "மிஸ் இந்தியா அழகி' பட்டம் பெற்ற அனுகிரீத்தி வாஸ் நடிக்கவிருக்கிறார்.

---------------------------------------------------------------------

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.