ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

திரைக்கதிர் 

"ஓ மை கடவுளே'  படத்திற்குப்  பிறகு வாணி போஜனுக்கு தொடர் வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.

News image
Updated On :21 மார்ச் 2021, 12:30 am

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே சீரியல்களில் நடித்து பிரபலமாகியிருந்தவர் ஷிவானி. இவர் தனது இன்ஸ்டாகிராமில் அதிரடியான கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வரவேற்பைப் பெற்று  வருகிறார்.

-----------------------------------------------------------
 

"ஓ மை கடவுளே'  படத்திற்குப்  பிறகு வாணி போஜனுக்கு தொடர் வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. விக்ரமின் 60-ஆவது படம், சசிகுமார், விக்ரம் பிரபு என அடுத்தடுத்த ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். இந்நிலையில் புதியவர் ஒருவர் இயக்கும் சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் படத்தில்  பரத்திற்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்க உள்ளார். 

-----------------------------------------------------------
 

"எங்கேயும் எப்போதும்' படத்தில் நடித்த சர்வானந்த் நடிப்பில், தெலுங்கில் விரைவில் வெளியாகவுள்ள படம் "ஸ்ரீகரம்'. இதன் விளம்பர   நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிரஞ்சீவி, சர்வானந்த் எனக்கு இன்னொரு  ராம்சரண் போன்றவர் என வாழ்த்திப் பேசியுள்ளார். 

-----------------------------------------------------------

நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்தி
கேயன், பிரியங்கா அருள்மோகன் மற்றும் பலர் நடிக்கும் படம் "டாக்டர்'. இப்படம் வரும் 26- ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். ஏப்ரல் 6- ஆம் தேதி தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. ஆகையால் "டாக்டர்' படத்தை வரும் மே மாதம் ரிலீஸ் செய்யவுள்ளார்களாம். 

-----------------------------------------------------------

இந்த கரோனா காலகட்டத்தில் வெளிநாடுகளுக்கு விமானப் பயணம் ஆரம்பமானதும், பல நடிகைகள் சுற்றுலா சென்ற ஒரே நாடு மாலத்தீவு. ஹிந்தி, தெலுங்கு, தமிழ் நடிகைகள் எனப் பலரும் தொடர்ந்து கணவர், காதலர், குடும்பத்தினருடன் அங்கு சுற்றுலா சென்றனர். அந்த வரிசையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்பத்தினருடன் மாலத்தீவிற்கு சுற்றுலா 
சென்றுள்ளார். 

-----------------------------------------------------------
 

"இந்தியன் -2', "அயலான்' படங்களில் நடித்து வருக்கிறார் ரகுல் பிரீத் சிங். கடந்த மகளிர் தினத்தையொட்டி இன்ஸ்டாகிராமில் ஒரு கருத்து பதிவிட்டுள்ளார். அதில், "ஒரு பெண் இருக்குமிடத்தில் மேஜிக் உள்ளது' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

-----------------------------------------------------------
 

"செக்' என்ற தெலுங்கு படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. பிரியா வாரியர்  ஓடி வந்து  நடிகர் நிதினின் முதுகில் ஏறுவதற்குப் பதிலாக தவறி கீழே விழுந்துள்ளார் . உடனே அங்கிருந்த நபர்கள் ஓடி வந்து பிரியாவுக்கு உதவியுள்ளனர். அந்த வீடியோவை பிரியா வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

-----------------------------------------------------------
 

"பிச்சைக்காரன்', "சிவப்பு மஞ்சள் பச்சை', "555', "டிஷ்யூம்', "சொல்லாமலே', "ரோஜாக்கூட்டம்' படங்களின் இயக்குநர் சசி. ஹரீஷ் கல்யாணை வைத்து முழு நீள காதல் படத்தை இயக்க இருக்கிறார். ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை.

-----------------------------------------------------------
 

மிஷ்கின் இயக்கத்தில் "பிசாசு 2', "மாளிகை', "கா' ஆகிய படங்களில் ஹீரோயினாக ஆண்ட்ரியா நடித்து வருகிறார்.  சின்னச் சின்ன வேடம் என்றால் அந்த படத்தின் கதையை கேட்கவே ஆண்ட்ரியா மறுத்து விடுகிறாராம்.

-----------------------------------------------------------
 

"மாஸ்டர்' படத்தைத் தயாரித்தவர் சேவியர் பிரிட்டோ. இவரது மகள் சினேகா பிரிட்டோ. இவர் "சட்டம் ஒரு இருட்டறை 2'- ஆம் பாகம் படத்தை இயக்கி 
உள்ளார். சினேகா பிரிட்டோவும், நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷும்
காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். தற்போது ஆகாஷ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

-----------------------------------------------------------

கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் "குட் லக் சகி'. இது விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள கதை. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வரும் ஜூன் 3-ஆம் தேதி வெளியாக
உள்ளது. 

-----------------------------------------------------------


ராஷ்மிகா நடித்த "பொகரு' கன்னடப் படம் சமீபத்தில் வெளிவந்தது. அதற்காக படத்தின் பேனர் ஒன்றை வைத்திருக்கிறார்கள். அந்த பேனரில் இருக்கும் ராஷ்மிகாவின் தலையில் இரண்டு முழம் மல்லிகைப்பூவை சூடி மகிழ்ந்திருக்கிறார் வெறித்தனமான ரசிகர் ஒருவர்.

-----------------------------------------------------------

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.