ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

திரைக்கதிர் 

சாய் பல்லவி, நாக சைதன்யாவுக்கு ஜோடியாக "லவ் ஸ்டோரி', நடிகர் ராணாவுடன் "விராட பருவம்' போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார்.

News image
Updated On :23 மே 2021, 12:30 am

மலையாளத்தில் விமர்சனரீதியாக வரவேற்பைப் பெற்ற படம் "ஜோசப்'. தமிழில் "விசித்திரன்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

இப்படத்தை இயக்குநர் பாலா தனது "பி ஸ்டூடியோஸ்' நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். "ஜோசப்' படத்தை இயக்கிய பத்மகுமார் தான், தமிழில் ரீமேக்கான விசித்திரனையும் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஆர்.கே. சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். பூர்ணா, மதுஷாலினி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படம் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய நடிகர் ஆர்.கே.சுரேஷ், ""முதலில் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதி, மாதவன் ஆகியோரின் பெயர்கள் தான் பரிசீலனையில் இருந்தது. இயக்குநர் பாலா தான் என்னை பரிந்துரைத்தார்'' என அவர் கூறி உள்ளார்.

---------------------------------------------------------------------------------------------------------

"மாஸ்டர்' படத்தின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து, தற்போது நெல்சன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கவுள்ளது. கரோனா முடக்கத்தால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு யூ டியூப்பில் வெளியான விஜய்யின் "தெறி' படம் 350 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. ஹிந்தியில் பல்வேறு சேனல்களிலும் வெளியாகியுள்ளது.

---------------------------------------------------------------------------------------------------------


திரையில் வில்லனாக இருந்தாலும், நிஜத்தில் பெரிய ஹீரோவாக இருந்து வருகிறார் நடிகர் சோனு.

கரோனா பிரச்னை தொடங்கியதில் இருந்து அவர் நிறைய உதவிகளைச்செய்து வருகிறார். இப்போது மக்களுக்கு தேவைப்படும் ஆக்சிஜனை வழங்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். தற்போது அவர் பிரான்ஸ் மற்றும் பல வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜனை இந்தியாவுக்குக் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார்.

அவற்றை சில மாநிலங்களுக்குக் கொடுத்து கஷ்டப்படுபவர்களுக்கு உதவ வழி செய்துள்ளார்.

---------------------------------------------------------------------------------------------------------

Story image

சாய் பல்லவி, நாக சைதன்யாவுக்கு ஜோடியாக "லவ் ஸ்டோரி', நடிகர் ராணாவுடன் "விராட பருவம்' போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2005- ஆம் ஆண்டு தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ரேயா நடிப்பில் வெளியான "சத்ரபதி' என்ற படத்தை தற்போது ஹிந்தியில் ரீ-மேக் செய்ய உள்ளனர்.

இதில் தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் நடிக்க, வி.வி.விநாயக் இப்படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தில் சாய் பல்லவியை நாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளத்தை தொடர்ந்து ஹிந்தியிலும் கால்பதிக்க உள்ளார் சாய் பல்லவி.

---------------------------------------------------------------------------------------------------------

தமிழ் சினிமா நடிகர்கள் என்றால் விஜய்-அஜித் தான் முன்னிலையில் இருக்கிறார்கள். அவர்கள் தொடர்பான விஷயங்கள் முகநூல், சுட்டுரை, இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் அதிகம் பேசப்படுகின்றன. அதிகம் பயன்படுத்தப்பட்ட டாக்குகளாக விஜய், அஜித் பெயர்கள் தான் இடம் பெறுகின்றன. இதில் அதிகம் பயன்படுத்தப்பட்ட நடிகர்களின் பெயர்களில் விஜய்யின் பெயர் முதல் இடத்திலும், அஜித்தின் பெயர் 5 ஆவது இடத்திலும் இடம் பெற்றுள்ளது.

---------------------------------------------------------------------------------------------------------

"அண்ணாத்த' மற்றும் "சாணி காயிதம்' உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

மேலும் மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ள "மரைக்காயர்' படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷின் பல புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் கீர்த்தி சுரேஷின் படம் வெளியாகியுள்ளது.

---------------------------------------------------------------------------------------------------------

ராதா மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் "மலேஷியா டூ அம்னீஷியா'.
இப்படத்தில் வைபவ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப் பூர்வமாக அறிவித்தது.

வருகிற மே 28-ஆம் தேதி ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக உள்ளது. இதற்கு முன் வைபவ் - வாணி போஜன் இணைந்து நடித்த "லாக்கப்' ஏற்கெனவே ஓடிடி-யில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.