திரைக்கதிர்

ஜோ ரூசோ இயக்கும் ஹாலிவுட் படமான "தி கிரே மேன்' படத்தில்  தனுஷ் நடிப்பது அனைவரும் அறிந்ததே. கடந்த 10-ஆம் தேதி பிரத்தியேகமாக அமெரிக்காவில் ஊடகங்களுக்காக "தி கிரே மேன்' திரையிடப்பட்டது.
திரைக்கதிர்
Updated on
1 min read

    
ஜோ ரூசோ இயக்கும் ஹாலிவுட் படமான "தி கிரே மேன்' படத்தில்  தனுஷ் நடிப்பது அனைவரும் அறிந்ததே. கடந்த 10-ஆம் தேதி பிரத்தியேகமாக அமெரிக்காவில் ஊடகங்களுக்காக "தி கிரே மேன்' திரையிடப்பட்டது. அப்போது தனுஷிடம் இந்தப் படம் நடிப்பதற்கான வாய்ப்பு எப்படி உங்களுக்குக் கிடைத்தது என்று கேட்கப்பட்டது. அதற்கு தனுஷ் "நான் எப்படி இந்தப் படத்தில் நடித்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு நாள் காஸ்டிங் ஏஜென்சி மூலம் இந்த வாய்ப்பு கிடைத்ததாக'' தெரிவித்திருக்கிறார் தனுஷ்.

----------------------------------------------------------------------------------------

பாலா - சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் படத்துக்கு "வணங்கான்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.  சூர்யாவின் 41-ஆவது படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. "பிதாமகன்' படத்திற்காக விக்ரமிற்கு தேசிய விருது வாங்கிக் கொடுத்த பாலா,  "நான் கடவுள்' படத்திற்காக ஆர்யாவிற்கு தேசிய விருதை எதிர்பார்த்தார். இந்த முறை சூர்யாவுக்குத் தேசிய விருதை வாங்கிக் 
கொடுத்துவிட வேண்டும் என்ற முனைப்போடு இருக்கிறார் பாலா.

----------------------------------------------------------------------------------------

அடுத்த மாதம் 10-ஆம் தேதி "ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தெரிகிறது. "அண்ணாத்த' வெளியாகி ஆறு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டதால், ரஜினியும் படப்பிடிப்புக்குக் கிளம்பத் தயாராகிவிட்டார். ஆனால், ஹீரோயின் அநேகமாக இந்த வாரத்தில் முடிவாகிவிடுவார். அது நிச்சயமாக ஐஸ்வர்யா ராய்தான் என்கிறார்கள்.  

----------------------------------------------------------------------------------------

""அன்மையில் இதயத்தில் சின்னதாக ஓர் அசெளகரியமான உணர்வு ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று நலமுடன் திரும்பி விட்டேன்.  நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். 20 வயதில் விபத்து ஏற்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். அப்போது காலை அகற்ற வேண்டும் என்ற நிலை ஏற்பட்ட போது, மன உறுதியுடன் போராடி, அதிலிருந்து மீண்டிருக்கிறேன். அதனால் தற்போது நடந்தவை எல்லாம் எனக்கு பெரிதாக தெரியவில்லை.  எப்போதும் சினிமாதான் என் உயிர்'' என நெகிழ்ந்திருக்கிறார் விக்ரம். 

----------------------------------------------------------------------------------------

"விக்ரம்' ரூ.400 கோடிக்கும் மேல் வசூலைக் குவித்திருப்பதால் மகிழ்ச்சியில் திளைக்கிறார் கமல். அடுத்து அவர் நடிக்கப் போவது "இந்தியன் 2'  படம்தான் எனச் செய்திகள் வெளியாகின. ஆனால், அது இல்லையாம். "விஸ்வரூபம் 2' படத்தின் எடிட்டரும், ஃபகத் ஃபாசில் நடித்த "மாலிக்' படத்தின் இயக்குநருமான மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்க உள்ளாராம். 

----------------------------------------------------------------------------------------

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com