'என்னங்க..! பழைய பொருள்களை பாலீஷ் போட்டு புதுசு போல விற்பதுதான் எங்கப்பாவின் வேலை..'
'அதுதான் உன்னைப் பார்த்தாலே தெரியுதே!'
-நெ.இராமகிருஷ்ணன்,
சென்னை.
'என்னம்மா. இது சாம்பாரா, ரசமா எப்படி கண்டுபிடிக்கிறது..'
'நல்லா கிண்டுங்க. காய்கறி கிடந்தா சாம்பார். இல்லைன்னா அது ரசம்..'
-எம்.அசோக்ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி.
'என்னங்க. நான் சுடிதார் வாங்கவா?, புடவை வாங்கவா? எது வாங்கினா அழகாயிருக்கும்..!'
'மாஸ்க்தான் உனக்கு அழகாயிருக்கும். அதையே வாங்கிக்கோ..?'
-சம்பத்குமாரி,
பொன்மலை.
'எதுக்கு நேத்து ராத்திரி நீங்க வேலைக்காரி வீட்டில் போய் படுத்தீங்க..?'
'நீதான் குடிச்சா வீட்டுக்கு வர்றக் கூடாதுன்னு சொன்னே. அதான்!'
-தீபிகா சாரதி,
சென்னை.
'என்ன.. புக் படிக்கிறே..!'
'குழந்தையை எப்படி வளர்ப்பதுங்கற புக்தான்..!'
'உங்கம்மா அதை படிச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்!'
- சிட்லப்பாக்கம் எஸ்.மாரிமுத்து,
சென்னை.
'சீரியலில் வர்ற மாதிரி மாமியார் வேணும்னு சொன்னே இல்லே?'
'ஆமாங்க. அதுக்கு என்ன இப்போ?'
'எங்க அம்மாவுக்கு சீரியலில் நடிக்க சான்ஸ் கிடைச்சிருக்கு. உன் கனவு நனவாகப் போகுது.'
'நீயும் அம்மாவும் கொஞ்ச நாளா சண்டை போடுறதே இல்லையே?'
'ஆமாங்க. நீங்கதான் அத்தையை முதியோர் இல்லத்துல சேர்த்துடுவேன்னு அடிக்கடி சொல்றீங்க! அதான்.'
-அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.
'எனக்கு நெருப்புல கண்டமுன்னு ஜோதிடர் சொல்றாங்க..?'
'அவர் டூபாக்கூரா இருப்பார். கிச்சன் பக்கமே வராத உனக்கு எப்படி நெருப்பில் கண்டம் இருக்கும்.'
'ஏன்டி. நேத்து ராத்திரி நான் தூங்கும்போது, யார்கிட்ட பேசிகிட்டு இருந்தே..?'
'ஆமாங்க,. சொல்ல மறந்துட்டேன். நம்ப வீட்டுல திருட வந்தவன்கிட்டதான் பேசினேன்.'
-வி.ரேவதி,
தஞ்சாவூர்.
'இந்த கிரைண்டர் மோசமுங்க..'
'ஏன்? என்ன செய்யுது..'
'அரைச்ச மாவையே அரைக்குது..'
'எதுக்குடி ஒரு கப் இட்லி மாவை குடிக்கிறே..?'
'லிக்விட் டயட் குடின்னு டாக்டர் சொன்னாரு...'
-பர்வதவர்த்தினி,
பம்மல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
2027 மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்தில் என்டிஎம்சி, தில்லி கண்டோன்மென்ட் பகுதிகளில் 63,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பட்டியலிடல்
பஜன்புரா மெட்ரோ நிலையம் அருகே தீப்பிடித்து எரிந்த வாடகை காா்

தில்லி மின் விநியோக நிறுவனங்களில் தீவிர தணிக்கையை தொடங்கிய: டிஇஆா்சி

பள்ளிச் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவரின் பிணையை ரத்து செய்ய உயா்நீதிமன்றத்தில் காவல்துறை வலியுறுத்தல்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

