பேல் பூரி

பேல் பூரி

கண்டது
(திருச்சி ஜங்ஷனில் ஆட்டோ ஒன்றில் காணப்பட்ட வாசகம்)
"100'-க்கு மேல் போனால் "108' தொடரும்.
-சம்பத்குமாரி, பொன்மலை.

(கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சில ஊர்கள்)
"சின்ன விழை'', "பெரிய விழை'', "சின்னபெரும் செல்வ விழை'',  "சின்ன அணைந்தான் விழை''.
-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

(ராமநாதபுரம் அருகேயுள்ள ஓர் கிராமம்)
"இல்லுமுள்ளி''
-இலக்கியவாணி, பாளையங்கோட்டை.


கேட்டது
(விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இரு முதியவர்கள் பேசியது)
"சார்.  நான் ஊருக்குப் புதுசு. முதியோர் இல்லத்துக்கு எப்படி போகணும்?''
"உங்க சொத்தையெல்லாம் பிள்ளைங்களுக்கு எழுதி வைச்சிட்டால் போதும். அவங்களே கொண்டு போய் விடுவாங்க?''
-கே.இந்து குமரப்பன், விழுப்புரம்.

(திருநெல்வேலியில் பிரபல ஜவுளி நிறுவன வாசலில் இரு பெண்கள் பேசிக் கொண்டது)
"இங்க புடவை வாங்கினேன். எனக்கு சமையல் குறிப்பு தருவாங்கன்னு பார்த்தேன்.  தரவில்லை.''
" யாருக்கு கொடுத்தாங்க?''
"என் வீட்டுக்காரர்தான் சமையல் செய்வாருன்னு எப்படி கண்டுபிடிச்சாங்களோ? அவருக்கு கொடுத்துட்டாங்க?''
 

-ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.
(பல்லாவரம் கண்டோன்மென்ட் பூங்காவில் இரு சிறுவர்கள்)
"எங்க பாட்டி ஆர்கானிக் லிப்ஸ்டிக் போடுவாங்கடா?''
"என்னடா சொல்றே?''
"வெற்றிலை பாக்கு போடுவாங்கடா?''
-நெ.இராமகிருஷ்ணன், சென்னை.


யோசிக்கிறாங்கப்பா!
ஆற்று நீர், ஊற்றுநீர், உபரிநீர்-இதுதான் கடல்நீர்.
செண்ணீர், கண்ணீர், கழிவுநீர்-இதுதான் உடல்.
-ஜா.தேவதாஸ், தஞ்சாவூர்


எஸ்எம்எஸ்
அவசர வேலை 
இரட்டிப்பு வேலையாகிவிடும்.
-மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com