சிரி... சிரி...

சிரி... சிரி...

'என்னம்மா. ஒரு வாரமா சாப்பாடு

சரியில்லை.'

'அவருக்கும் எனக்கும் சண்டை. அதான் ஓட்டலில் வாங்குறோம்..'

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

'நாளைக்கு என்னைப் பெத்தவங்க வர்றாங்க?'

'அதனால் என்னங்க?'

'அவங்க எதிரில் என்னை சமைக்கச் சொல்லாதே...'

-ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.

'ஏன்டி.. வேலைக்காரியை திடீர்னு நிறுத்திட்டே...'

'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் நம்ப சொத்து விவகாரத்தைக் கேட்டிருக்கா.. அதாங்க..'

-ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு.

'என்னடி... ஸ்லோகன் போட்டியில் பரிசு வந்த வாஷிங் மெஷினை ஏன் வேண்டாமுன்னு சொல்லிட்டே...'

'துவைக்க நீங்க இருக்கீங்க.. அதான் வேற வாங்கிக்கிறேங்க..'

-ப,.சோமசுந்தரம், கோவிலம்பாக்கம்.

'அண்ணா... தோசை மாவு வாங்கப் போனா எங்க வீட்டுக்காரரை ஒரு வாரமா காணலை..'

'என்னம்மா பண்ணே..'

'உப்புமா, பூரின்னு சாப்பிட்டு சமாளிக்கிறேன்...'

-நெ.இராமகிருஷ்ணன், சென்னை-7.

'நீ ஏன் ஒரு கையில் மட்டும் வளையல் போட்டுக்கிறே..'

'எனக்கு செகன்ட் ஹேண்ட் வளையல் பிடிக்காதே..'



'இது எங்க பாட்டி காலத்துக்கு குக்கர்..'

'அப்ப நல்ல ஆவி வந்த குக்கருன்னு சொல்லு...'

-வி.சாரதி டேச்சு, சென்னை-5.

'ஏன்டா முதல் மாச சம்பளத்தை அப்பா கையில் கொடுக்காமே டேபிள் மேல வைக்கிறே...'

'இல்லம்மா.. அவருகிட்டே வாங்கின கை.

கொடுக்கக் கூடாதுல்ல.. அதான்...'

-ஜி.மஞ்சரி, கிருஷ்ணகிரி.

'பள்ளிக்கூடத்துக்கு எதுக்கு சீப்பு கொண்டு போறே...'

'கேள்வி கேட்கும்போது தலையை சொறிய

கூடாதுன்னு மிஸ் சொன்னாங்கம்மா.. அதான்..'

-ச.அரசமதி, தேனி.

'கல்யாணத்துக்கு முந்தி யாரையாவது காதலிச்சியான்னா கேட்டா ஏன்டி பதிலே சொல்லலை..'

'இல்லைங்க... உண்மையைச் சொன்னா உங்க மனசு சங்கடப்படும். பொய் சொன்னா என் மனசு உறுத்தும்.. அதாங்க..'



'பொண்ணு கிளி மாதிரி இருந்திச்சேன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...'

'அதை ஏன் வருத்தமா சொல்றே...'

'கல்யாணமாகி வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையா.. எல்லா சாவிகளையும் வாங்கி இடுப்புல வச்சுக்கிட்டா...?'



'எல்லாத்துக்கும் பெண்டாட்டி பேச்சைக் கேட்டா வாழ்க்கையில் முன்னேற முடியாதுப்பா...?'

'நீங்க முன்னேற முடியாததுக்கும் அதான் காரணமாப்பா...?'

-வி.ரேவதி, தஞ்சாவூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com