சிரி... சிரி...

'சுனாமியை கண்டுபிடிக்க ஏதோ ஒரு டெக்னாலஜி வந்திருக்காம் தலைவா?''சுனாமியை கண்டுபிடிக்கதானே. பினாமிக்கு இல்லையே?'
சிரி... சிரி...


'எதற்காக ஆன்லைனில் 80 கர்சிப்புகள் ஆர்டர் போட்டே?'
'என் மனைவியும் அம்மாவும் டி.வி. பார்த்து அழுது கண்ணீர் வடிக்
கிறாங்க? அதை துடைச்சிக்கதான்!'

-சீ.பி.முகமது ஷபீ,
பெரம்பூர்.

'தலைவர் எதுக்காக 'பிளட் பாங்க்' பக்கம் வந்திருக்காரு?'
'கட்சிக்கு எப்படி புது ரத்தம் பாய்ச்சலாமுன்னு யோசனை கேக்க வந்திருக்காராம்..'

-டி.எஸ்.பாலு,
சென்னை.

'சுனாமியை கண்டுபிடிக்க ஏதோ ஒரு டெக்னாலஜி வந்திருக்காம் தலைவா?'
'சுனாமியை கண்டுபிடிக்கதானே. பினாமிக்கு இல்லையே?'



'கைப்பை சின்னத்துல நிற்கிற வேட்பாளர் வீட்டுக்கு வீடு கைப்பை கொடுத்துட்டு ஓட்டு கேட்டாராமே..'
'அவருக்கு அண்டா, குண்டா சின்னம் கொடுத்திருந்தா நல்லா இருந்திருக்குமே?'

-வி.ரேவதி,
தஞ்சாவூர்.

'கட்சிக் கூட்டங்களுக்கு கரை வேட்டி கட்டிட்டு வாங்கன்னு சொன்னது தப்பா போச்சு..'
'பான்பராக் கறை, காபி கறை, வெற்றிலை பாக்கு கறை படிஞ்ச வேட்டிகளெல்லாம் கட்டிட்டு வந்துட்டாங்க?'  

-அ.யாழினி பர்வதம்,
சென்னை-78.

'என் மனைவி சீரியல் பார்ப்பதை திடீருன்னு விட்டுட்டாள்.'
'அடப்பாவமே உனக்கு கஷ்டகாலம் தொடங்கிடுச்சி..'

-அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.

'ஆழமானதா இருக்கே. இந்தக் கதை எங்கே நடக்கிற மாதிரி எழுதியிருக்கீங்க?'
'சுரங்கத்தில்தான்..'

-ஜெ.மணிகண்டன்,
பேரணாம்பட்டு.

'ஓ.டி.டி.யில் உங்க படத்தைப் பார்த்துட்டு மக்கள் ரொம்ப கோபமா இருக்காங்க?'
'நிஜமாவா?'
'ஆமாம். நிறைய பேர் வீட்டில் இருந்த டி.வி.யை உடைச்சிட்டாங்க?'



 

'படத்துல பாட்டு சீனில் ஏன் ஹீரோ தூங்கி வழியுறாரு?'
'அதான் கனவு சீன் பாட்டாச்சே..'

-தீபிகா சாரதி,
சென்னை.

'தியேட்டரில்  படம் பார்த்த ரசிகர்கள் பணத்தில் பாதியை கேட்டு ஏன் போராட்டம் பண்றாங்க?'
'பாதி படம்தான் நல்லா இருந்துச்சாம். அதான்..'

-கு.அருணாசலம்,
திருச்சி.

'ராகவா லாரன்ஸ் பஞ்ச் டயலாக் பேசினா எப்படி பேசுவார்..'
'போடா பேயே நம்ப பக்கம் இருக்கு...'

-அ.பேச்சியப்பன்,
ராஜபாளையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com