ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புள்ளிகள்

அன்றைய பிரபல நடிகர் காளி என்.ரத்தினத்திடம் ஒரு இளைஞருக்கு நடிப்புப் பயிற்சியை எடுத்தார்.

News image

எம்.ஜி.ஆர்.

Updated On :27 ஜூலை 2024, 6:30 pm

DIN

அன்றைய பிரபல நடிகர் காளி என்.ரத்தினத்திடம் ஒரு இளைஞருக்கு நடிப்புப் பயிற்சியை எடுத்தார். அவர்தான் எம்.ஜி.ஆர் 'நல்ல தங்காள்' என்ற நாடகத்தில், எம்.ஜி.ஆரை ஏழாவது பையனாக நடிக்க வைத்தார்கள்.

தாயுடன் வாதாடும் கட்டம்,'என்னையாவது உயிருடன் விட்டு விடுங்கள் அம்மா. ஈமக்கடன்கள் செய்வதற்கு நான் ஒருவனாவது மிஞ்சட்டும்'' என்று கண்ணீர்விட்டு அழுது பேசும் கட்டம் வரும். இந்த வேடத்தில் எம்.ஜி.ஆர். உருக்கமாகப் பேசுவார்.

இதனால் நாடகம் பார்க்கிறவர்கள் மிகவும் பரவசப்படுவார்கள். இந்தக் கட்டம் இயல்பாக உருக்கமாக அமைய வேண்டும் என்பதற்காக, அந்தக் காட்சியில் நடிக்கத் தயாராகும்போது அடித்து உதைத்து அனுப்புவாராம் காளி என்.ரத்தினம். அவர் வாங்கிய அடி, உதையின் வலி நாடகம் முடிந்த பின்பும்கூட இருக்குமாம்.

ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் 2020ஆம் ஆண்டு செப்.5இல் மறைவுற்றார். கர்நாடகத் திரையிசை அபிமானிகளின் மனம் கவர்ந்த பாடகரான அவருக்கு, பெங்களூரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் தற்போது சிலையை வைத்துள்ளனர்.

விரைவில் அதை பொதுமக்கள் அதிகம் கூடும் பூங்கா அல்லது கந்தீரவா ஸ்டூடியோவில் வைக்கும் முயற்சியில் கன்னடத் தயாரிப்பாளரும் இயக்குநருமான டாக்டர் மதுசூதனன் ஹவில்தார் என்பவர் இறங்கியுள்ளார்.

ராஜி ராதா, பெங்களூரு.

2012ஆம் ஆண்டு பிப்.16இள் சென்னையில் ஜெயகாந்தனுக்கு ரஷியாவின் உயரிய விருதான'ஆர்டர் ஆப் பிரண்ட்ஷிப்' வழங்கப்பட்டபோது, அவர் ஒரு பேசியதாவது:

'கண்ணதாசன் தனது'கண்ணதாசன்' ஏட்டில் என்னைப் பற்றி (ஜெயகாந்தன்) ஒரு தலையங்கத்தை எழுதினார். அதில்,'வளைந்தும் குழைந்தும், நேரத்துக்குத் தக்கபடியும் அனுசரித்துப் போகும் உலகத்தில் ஒரு நிமிர்ந்த தென்னை!' என்று குறிப்பிட்டார். ஜெயகாந்தன் இலக்கியத் துறையில் கையாண்ட புதிய உத்திகளுக்கு முன்னுதாரணமே கிடையாது.

இன்னொருவருடைய பாணி இவருக்கு இருக்கிறதென்று எவரையும் சொல்ல முடியாது. அவருடை நிலத்தில் தோன்றிய விளைச்சலுக்கு அவரே விதை. அவரே நீர். அவரே உரம்' என்று தலையங்கத்தில் கண்ணதாசன் எழுதியிருந்தார். இதை என்னால் வாழ்க்கையில் மறக்க முடியாதது'' என்றார் ஜெயகாந்தன்.

தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.