நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் தனது காதலியான பாடகி சைந்தவியைக் 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 2020-ஆம் ஆண்டு இவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது. ஒரு ஆண்டுகள் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்த நிலையில், தற்போது இருவரும் பிரியவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஜி.வி. பிரகாஷ், 'ஆழ்ந்து யோசித்த பின்னர், நானும் சைந்தவியும் எங்களின் 11 ஆண்டுக்கால திருமண வாழ்வை முடித்துக் கொள்வதாக முடிவெடுத்திருக்கிறோம். இருவரின் மன அமைதியையும் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, பரஸ்பர மரியாதையை மனதில் வைத்தே இந்த முடிவை எடுத்துள்ளோம்'' என்றார். இதே கருத்தை பாடகி சைந்தவியும் பதிவு செய்துள்ளார்.
-------------------------------------------------------------------------------------
இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகியிருக்கிற திரைப்படம் 'ஹிட் லிஸ்ட்'. இத்திரைப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சமீபத்தில் நடிகர் சரத்குமார், '150 வருடங்களுக்கு நான் வாழ்வேன்' எனப் பேசிய காணொளிகள் வைரலானது. தற்போது மீண்டும் அது தொடர்பாக இந்த விழாவில் பேசியிருக்கிறார்.
'150 வயசு வரைக்கும் வாழ்வேன்னு சொன்னா சந்தோஷப்படுறதைவிட கிண்டல் பண்றவங்கதான் அதிகமாக இருப்பாங்க. எப்படி 150 வயசு வரைக்கும் வாழ்வார்னு எழுதுவாங்க. ரஜினி சார் பார்க்கிற பாபாவே 4000 வருஷம் வாழ்ந்திருக்கான். புரட்சித் தலைவரும், மக்கள் தலைவரும் இல்லைன்னாலும் இன்னைக்கும் வாழ்ந்துட்டு இருக்காங்க. அதுதான் வாழ்க்கை. மது பழக்கத்தையும் போதை பழக்கத்தையும் தேவையில்லாதது என நினைப்பவன் நான்' என முடித்துக் கொண்டார்.
-------------------------------------------------------------------------------------
வசந்தபாலன் இயக்கத்தில் 'தலைமை செயலகம்' இணையத் தொடர் ஜீ5 ஓடிடியில் வெளியாகியுள்ளது. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் வசந்தபாலன் பேசும் போது... ''2002-இல் என்னுடைய திரையுலக பயணத்தை தொடங்கினேன். 22 வருடங்களில் வெற்றி, தோல்வி, ஒன்றும் இல்லாமல் போவது என எல்லவாற்றையும் பார்த்துவிட்டேன். கரோனா காலத்தில் இந்த வெப் சீரிஸூக்கான முதல் புள்ளி தொடங்கியது. அரசியல் படங்கள் என்றாலே முதல்வர் கெட்டவர்தான்.
அப்படித்தான் படங்கள் வந்துள்ளன. ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலே குற்றவாளி என அர்த்தமல்ல. ஊழல் குற்றம் சுமத்தப்பட்ட ஒரு முதல்வரின் அக, மன, புற சிக்கல்களை பேச வேண்டும் என நினைத்தேன். அவர் நல்லவரா? கெட்டவரா? என்பது விஷயமல்ல. மக்கள் மீது கொண்டிருக்கும் காதல் தான் நீதி. அந்த நீதியை காப்பாற்றும் போது சில தவறுகள் நடக்கலாம். இவற்றை எல்லாம் இந்த வெப் சீரிஸில் பேசியிருக்கிறேன்' என்றார்.
-------------------------------------------------------------------------------------
ஸ்டார் படத்தின் வெற்றி நடிகர் கவினுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது. கனவுகளோடு தன் இளமையைக் கொண்டாடும் இளைஞனாக முதல் பாதியிலும், தோல்விகளின் நெருக்கடிகளுக்கு இடையே தன் கனவைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் கணவனாக இரண்டாம் பாதியிலும் தன் தேர்ந்த நடிப்பை வழங்கி, கலை என்ற மனிதனின் வாழ்க்கைப் பயணத்திற்கு உயிரூட்டியிருக்கிறார் கவின். முக்கியமாக, இறுதிக்காட்சி கவினின் நடிப்பிற்கு நல்ல தீனி. ஏக்கம், பாசம், கோவம், வைராக்கியம், தோல்வி என அழுத்தமாக நகரும் கதாபாத்திரத்தைத் தூக்கிப் பிடிக்கிறது லாலின் முதிர்ச்சியான நடிப்பு. எட்டு நிமிடத்திற்கு மேல் நீடிக்கும் உணர்வுபூர்வமான படத்தின் உச்சகட்ட காட்சி.. சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டிருப்பதை கண்டு ரசிகர்கள் ஆரவாரத்துடன் கரவொலி எழுப்பி பாராட்டுகின்றனர். தமிழ் சினிமாவில் சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்ட நீளமான கிளைமாக்ஸ் காட்சி இதுதான்' என்று குறிப்பிட்டிருக்கும் படக்குழுவினர், இதற்காக உழைத்த ஒட்டுமொத்த படக் குழுவினருக்கும், இதனைக் குறிப்பிட்டு பாராட்டிய ரசிகர்களுக்கும், விமர்சகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பா. இரஞ்சித் தயாரிப்பில் நடிக்கும் ஜிவி பிரகாஷ்!

2 மகள்களைக் கொன்று தாய் தற்கொலை

2017-இல் புறப்பட்ட விமானம் 2016-ஆம் ஆண்டில் தரையிறங்கியதா? எங்கே இந்த விநோதம்?

பூக்கி டிரைலர்!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


