ஸ்மார்ட் ஷாக் வாட்ச்...

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 'ஸ்மார்ட் ஷாக் வாட்ச்' எனும் கடிகாரத்தைத் தயாரித்து சென்னை மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டி.எம்.ராம்கிஷோர் தலைமையிலான விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
ஸ்மார்ட் ஷாக் வாட்ச்...
Updated on
2 min read

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 'ஸ்மார்ட் ஷாக் வாட்ச்' எனும் கடிகாரத்தைத் தயாரித்து சென்னை மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டி.எம்.ராம்கிஷோர் தலைமையிலான விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். இந்தக் கருவியின் காப்புரிமையானது பல்கலைக்கழகம் சார்பில் பதியப்பட்டுள்ளது.

ஸ்ரீ லலிதாம்பிகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அண்மையில் நடைபெற்ற விழாவில், இந்தக் கடிகாரத்தை வேந்தர் ஏ.சி. சண்முகம், தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்.

இதுகுறித்து ஏ.சி.சண்முகம் கூறியது:

'இன்றைய சூழ்நிலையில் வெளியே செல்லும்போது, பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கும், சோதனைகளுக்கும் ஆளாகிவருகின்றனர்.

அரசு என்னதான் நடவடிக்கை எடுத்தாலும், சில நேரங்களில் பெண்கள் பாதுகாப்பானது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

பெண்கள் தனக்குப் பாதுகாப்பில்லாதச் சூழலை உணரும்போது, அதை தெரிவிக்க பல்வேறு வழிகள் உள்ளன. மிளகாய் திரவம், டேசர், காவல் துறையின் ஸ்மார்ட் எஸ்.ஓ.எஸ்., அலர்ட் ரிங் போன்றவை பயனுள்ளவைதான். இருந்தாலும் அவற்றை விரைவாகச் செயல்படுத்த சில சூழ்நிலைகளில் போதிய நேரம் கிடைக்காது.

பெரும்பாலான பெண்கள் தங்கள் கைப்பையில் உள்ள பாதுகாப்புச் சாதனத்தை எடுக்க முடியாத நிலையும் ஏற்படும். சில சந்தர்ப்பங்களில் உடனடி செயல்பாடுகள் சாத்தியம் இல்லாத சூழ்நிலைகளை உருவாக்கும். தங்களது பாதுகாப்பைப் பற்றிய சிந்தனையில், பாதுகாப்புச் சாதனங்கள் குறித்த சிந்தனையே அந்த நேரத்தில் பெண்களுக்கு வராது.

இந்த நிலையில் அவர்களின் பாதுகாப்புக்கு நல்லதொரு பாதுகாப்புச் சாதனத்தை உருவாக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் முடிவு செய்து, பல மாதங்களாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தது.

இதன்படி, பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் 'ஸ்மார்ட் ஷாக் வாட்ச்' கண்டறியப்பட்டுள்ளது. இது பெண்களுக்கு பாதுகாப்பை அளிக்கும் வகையில் புதுமையாக அணியக் கூடிய சாதனமாகும். பெண்கள் எப்போது வேண்டுûôனாலும், எங்கும் இந்தக் கடிகாரத்தை அணிந்து, பாதுகாப்பைப் பெறலாம்.

இந்தக் கடிகாரமானது அதிக மின்னழுத்த ஆற்றல் உள்ளடங்கியுள்ளது. ஒரு பெண் தாக்குதலுக்கு உள்ளாகும்போது, அவர் தன்னை தாக்கியவரை ஸ்மார்ட் ஷாக் வாட்சால் தட்டினால் அதில் உள்ள அதிக மின்னழுத்த ஆற்றல் அவரை நிலைதடுமாறும் நிலைக்குத் தள்ளும். ஏன் சுயநினைவை இழக்கும் நிலைக்கும் தள்ளப்படலாம். இதில் சிறப்பு என்னவென்றால், அணியும் பெண்ணுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

பள்ளி, கல்லூரி மாணவிகள், பணிபுரியும் பெண்கள் என அனைத்துப் பெண்களும் இந்தக் கடிகாரத்தைத் தயக்கமின்றி அணியலாம். எளிய எடைதான். கூடுதலான வசதி உள்ளது என்பது பிறகுக்குத் தெரியவும் வாய்ப்பில்லை. அணிவதற்கு எந்த விதமான அச்சமும் அடையத் தேவையில்லை. 24 மணி நேரம் கூட அணியலாம். அனைத்துத் தரப்பினரும் வாங்கக் கூடிய விலையிலேயேதான் இருக்கும். வாட்ச்சுக்கு எளிதில் சார்ஜ் செய்யலாம்.

பாதுகாப்புச் சாதனத்தில், உயர்தரப் பாதுகாப்பு, பாதுகாப்பு மென்பொருள், எஸ்.ஓ.எஸ். அலர்ட் செய்திகள், ஜி.பி.எஸ். முறையில் இருப்பிடக் கண்காணிப்பு போன்ற கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்படும்.

பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவோரிடம் இந்தக் கடிகாரத்தின் நம்பகத்தன்மையையும், பயன்படுத்துவோரின் பாதுகாப்பையும் கள ஆய்வுக்கு உட்படுத்தி அதன் பாதுகாப்புத் தன்மையை சோதனையிட்டோம். கடிகாரத்தின் உயர் மின்னழுத்தமும், நம்பகத்தன்மையும் சென்னை ஐஐடி யின் எலக்ட்ரானிக்ஸ் சென்டரில் சோதிக்கப்பட்டு, உறுதி செய்யப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்புக்கு ஒரு மிகப் பெரிய மைல் கல்லாக அமையும்'' என்கிறார் சண்முகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com