சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

உங்கள் போட்டோக்கள் என்னவாகும்?

அறிதிறன்பேசிகளில் எடுக்கப்படும் போட் டோக்களை கணினியில் தானாகமாற்றம் செய்யும் சேவையை (பேக்கப்)கூகுள் டிரைவ் ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் நிறுத்தி உள்ளது.

Published On :23 ஆகஸ்ட் 2026, 4:06 am IST

அறிதிறன்பேசிகளில் எடுக்கப்படும் போட் டோக்களை கணினியில் தானாகமாற்றம் செய்யும் சேவையை (பேக்கப்)கூகுள் டிரைவ் ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் நிறுத்தி உள்ளது.

கூகுளின் ஜிமெயில், போட்டோஸ், வாட்ஸ்ஆப் போன்றவற்றில் வரும் புகைப்படங்கள், விடியோக்கள், டேட்டா பைல்கள் தானாக கூகுள் டிரைவில் சேமிக்கப்படும் வசதியை கூகுள் வழங்கி வந்தது. ஆனால், ஜிமெயிலின் 15 ஜிபி இலவச சேமிப்பில் இருந்து 5 ஜிபியாக அண்மையில் கூகுள் குறைத்தது.

15 ஜிபி இருக்கும்போதே பலர் ஜிமெயில் சேமிப்புக்கே இடமில்லாமல் கட்டணச் சேமிப்பு சேவைக்குத் தள்ளப்பட்டனர்.இதில் போட்டோஸ், வாட்ஸ்ஆப் தகவல்கள் ஆகியவை இணைந்ததால் கூகுள் டிரைவ் பெரும்பாலான பயன்பாட்டாளர்களுக்கு நிரம்பி, காலி செய்ய முடியாமல் கடைசியில் ஜிமெயில் முகவரியே பயன்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுவிட்டனர்.

இந்நிலையில், அறிதிறன்பேசியில் கூகுள் டிரைவில் உள்ள போட்டோக்கள், விடியோக்களை கணினியில் தானாக சேமிக்கும் சேவையை கூகுள் ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் நிறுத்தி உள்ளது. இந்தச் சேவையைத் தொடர்ந்து பெற, கூகுள் டிரைவுக்குப் பதிலாக கூகுள் போட்டோஸில் போட்டோக்களை சேமிக்கலாம். அதே நேரத்தில் ஏற்கெனவே கூகுள் டிரைவில் சேமிக்கப்பட்டுள்ள புகைப்படங்கள், விடியோக்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் வராது என கூகுள் உறுதி அளித்துள்ளது.

இதன்படி, கணினியில் உள்ள போட்டோ, விடியோக்களை கூகுள் போட்டோக்களில் பதிவேற்றம் செய்து சேமித்து வைத்துக்கொள்ள, கணினியில் உள்ள கூகுள் போட்டோஸ் செயலியில், ஆப்சன்ஸ், பேக்கப் போல்டர்ஸ் என்பதை தேர்வு செய்துவிட்டு நாம் சேமிக்க விரும்பும் போட்டோ, விடியோக்கள் அடங்கிய போல்டரை தேர்வு செய்யவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.