நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

குறையொன்றுமில்லை...!

மங்கோலியாவில் உலான்பாட்டார் நகரில் மே 23 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான 63 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கத்தை தமிழரான பிளெஸ்ஸிங் சஜு வென்றுள்ளார்.

News image
Updated On :6 ஜூன் 2026, 9:38 pm IST

மங்கோலியாவில் உலான்பாட்டார் நகரில் மே 23 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பதினொன்றாவது ஆசிய டேக்வாண்டோ சாம்பியன் போட்டிகளில், 63 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கத்தை தமிழரான பிளெஸ்ஸிங் சஜு வென்றுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்பட்ட பத்மநாபபுரம் அரண்மனை அருகே அமைந்துள்ள முட்டைக்காடு சரல்விளையைச் சேர்ந்த பிளெஸ்ஸிங் சஜு கூறியது:

'எனக்கு இருபத்தைந்து வயதாகிறது. எனது பெற்றோர் எலியாஸ் - கிரேஸ் மேரி. மூன்று அண்ணன்களுக்கும் திருமணமாகிவிட்டது. கடைக் குட்டியான நான் பிறக்கும்போது, கைகள் இரண்டும் இல்லை.

அருகிலேயே பள்ளி இருந்ததால் பத்தாம் வகுப்பு வரை நானே சென்று வருவேன். ஆசிரியர்கள் என்னைக் காலால் எழுதச் சொல்லி, கற்பித்தனர். காலால் விரைவாக எழுத முடியும். வீட்டில் கால்களை கைகளாகப் பழக்கிக் கொண்டேன். கால் விரல்களால் கரண்டிகளைப் பயன்படுத்தி, உணவை உண்பேன். டம்பளரைப் பிடித்து தேநீர், பழச்சாறுகளைக் குடிக்க முடியும். அலைபேசியையும் கையாளுவேன். செயற்கைக் கைகள் வைத்துக்கொள்வதைத் தவிர்த்தேன். கரோனா காலத்தில், தக்கலை நூருல் இஸ்லாம் கல்லூரியில் பி.காம். முடித்தேன்.

ஊரடங்கின்போது, இணையத்தில் காணொலிகளைப் பார்த்து, கால் பந்தை வைத்து கால்களால் வித்தைகள் செய்யக் கற்றேன். கால்பந்தாட்டத்தில் 'பை சைக்கிள் கிக்', அதாவது அந்தரத்தில் பல்டி அடித்து பந்தை உதைத்து தள்ளுதலை 'கத்தரிக்கோல் உதை' என்பார்கள். ரொனால்டோ இந்த 'கிக்' செய்வதில் புகழ் பெற்றவர்.

சாகசமுடைய இந்தக் கால்பந்து நகர்வில் ஆட்டக்காரர் காற்றில் எழும்பி, தலை கீழாக சைக்கிள் ஓட்டுவது போன்று கால்களை வீசி, பந்தை உதைக்க வேண்டும் . இந்த 'கிக்' செய்ய உடம்பை பேலன்ஸ் செய்ய கைகள் தேவைப்படும். விடாமல் பயிற்சி செய்து கத்தரி உதையை அநாயாசமாக கைகள் இல்லாத நான் செய்வேன்.

கால்பந்து வைத்து வித்தைகள் செய்வதை ரீல்ஸ் எடுத்து, முகநூலிலும், இன்ஸ்டாகிராமிலும் பதிவேற்றம் செய்துவருகிறேன். எனது ரீல்களைப் பார்த்தவுடன் பயிற்சியாளர் குலோத்துங்கன் எனக்கு டேக்வாண்டோ பயிற்சி அளிக்க முன்வந்தார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், டேக்வாண்டோ விளையாட்டைக் கற்கத் தொடங்கினேன். தொடக்கத்தில் சென்னையில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றேன். தற்போது சேலம் டால்பின் ஸ்போர்ட்ஸ் அகாதெமியில் பயிற்சி பெறுகிறேன். சேலத்தில் எனது அம்மா உடனிருக்கிறார்.

2025-இல் மலேஷியாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான டேக்வாண்டோ போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றேன். மலேசியாவில் அண்மையில் நடைபெற்ற போட்டிகளில் உஸ்பெக்கிஸ்தானைச் சேர்ந்த எதிராளியை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்று வந்தேன். சென்னையில் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைச் சந்தித்து வாழ்த்தும் பெற்றேன்.

மங்கோலியாவுக்குப் பயிற்சியாளருடன் விமானத்தில் சென்று வந்ததற்கான செலவுகளை ஏற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த்துக்கு நன்றி.

தங்கப் பதக்கம் வென்றவுடன் சொந்த ஊரில் பல இடங்களில் வரவேற்கின்றனர். இது எனக்குப் பெருமையாகவும் இருக்கு, கூச்சமாகவும் இருக்கு... எனது உடல் குறையை மறக்க வைக்கும் தருணங்கள் அவை'' என்கிறார் பிளெஸ்ஸிங் சஜு .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.