நெடுஞ்சாலைகளில் உள்ள வழிகாட்டிப் பலகைகள் பச்சை நிறத்தில்தான் இருக்கின்றன. எதற்காக இந்த நிறத்தில் இருக்கின்றன தெரியுமா?
அதிவேகத்தில் வாகனங்கள் செல்லும்போது, வாகன ஓட்டுநரோ, உடன் பயணிப்போரோ தகவல்களை விரைவாகப் படித்தாக வேண்டும். இதற்கு சிவப்பு, மஞ்சள், நீல நிறங்களில் இருந்தால், அவர்களின் கவனத்தைச் சிதறடிக்கலாம்.
அதேசமயம், கவனத்தைச் சிதறடிக்காமல் பார்க்க பச்சை சிறந்த நிறம். பச்சை நிறம் மற்ற நிறங்களைவிடக் குறைந்த கூச்சத்தைத் தருபவை. பார்வைத் திறனை மேம்படுத்தவும், கண் சோர்வைக் குறைக்கவும் செய்கிறது.
இதனை உணர்ந்து சர்வதேச தர நிர்ணயினர் பச்சை நிறத்தைப் பயன்படுத்தக் கோரினர். ஏனெனில், அது வெள்ளை எழுத்துகளுடன் வலுவான வேறுபாட்டை அளித்து, பகலிலும் இரவிலும் தகவல்களை எளிதாகப் படிக்க உதவுகிறது.
பச்சை ஓர் அமைதியான நடுநிலையான நிறமாகவும் கருதப்படுகிறது. இதுதவிர, பச்சை நிறமானது மனஅழுத்தம் அல்லது அவசரத்தை உருவாக்காமல் வழிகாட்டுதலையும், திசையையும் உணர்த்துகிறது.
மனிதப் பார்வையில் பச்சை நிறம், மனித கண்களால் எளிதாகப் பிரித்தறியக் கூடிய வண்ண வரம்புக்குள் வருவதால், சாலையில் கவனம் செலுத்தியபடியே ஓட்டுநர்கள் அடையாளப் பலகைகளை எளிதில் படிக்கமுடியும். இந்தக்காரணங்களால்தான் பச்சை நிறப் பின்னணியில் வெள்ளை நிற ஒளிரும் எழுத்துகள் தெளிவாகத் தெரிகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









