இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

மறக்கமுடியாத மாமனிதர்

பாரதமாதா ஆலயத்துக்கு வித்திட்ட விடுதலை வீரர் சுப்பிரமணிய சிவா, வத்தலக்குண்டில் ராஜம் ஐயர்- நாகலட்சுமி இணையருக்கு, 1884-ஆம் ஆண்டு அக்டோபர் 4-இல் பிறந்தார் .

விடுதலை வீரர் சுப்பிரமணிய சிவா

Published On :

பாரதமாதா ஆலயத்துக்கு வித்திட்ட விடுதலை வீரர் சுப்பிரமணிய சிவா, வத்தலக்குண்டில் ராஜம் ஐயர்- நாகலட்சுமி இணையருக்கு, 1884-ஆம் ஆண்டு அக்டோபர் 4-இல் பிறந்தார் . குடும்பம் பிழைப்புக்காகத் திருவனந்தபுரம் சென்றது. அங்கு பள்ளிப் படிப்பை முடித்த சிவாவுக்கு அந்த நாள் வழக்கப்படி, 1899-இல் மீனாட்சி என்ற பெண்ணை மணம் முடித்து வைத்தனர். ஆனால், அவருக்கு நாட்டு நலனில் அதிக ஆர்வம் இருந்தது. பாலகங்காதர திலகர் உரைகளைக் கேட்ட சிவா, விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றார்.

ஆங்கிலேயருக்கு ஆதரவாக இருந்த திருவனந்தபுரம் சமஸ்தானம் , சிவாவை வெளியேறும்படி உத்தரவிட்டது. நடைப்பயணமாகவே வெளியேறி திருநெல்வேலிக்கு வந்தார்.

'தென்னாட்டுத் திலகர்' எனப் போற்றப்பட்ட வ.உ.சிதம்பரனாரை தூத்துக்குடியில் சிவா சந்தித்தபோது, இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். ஆங்கிலேயரை எதிர்த்து நடத்தப்பட்ட கூட்டங்களில் சிவாவையே தலைமை வகித்து உரை நிகழ்த்தச் சொன்னார் வ.உ.சி.

வ.உ.சி., சிவா இருவரையும் தேசவிரோத குற்றச்சாட்டில் விஞ்ச் துரை வழக்கு தொடுத்து சிறையில் தள்ளினார். நீதிமன்றத்தில் வ.உ.சிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அரசைக் கவிழ்க்கும் வண்ணம் மேடைகளில் பேசியதற்காக சுப்பிரமணிய சிவாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சிவா விடுதலையானபோது அவருக்கு 'தொழுநோய்' தொற்று ஏற்பட்டிருந்தது.

1912-ஆம் ஆண்டில் சிவா சென்னை மயிலாப்பூரில் குடியேறினார். 1913-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 'ஞானபானு' என்ற பெயரில் பத்திரிகை ஒன்றை நண்பர்கள் உதவியுடன் சிவா வெளியிட்டார். அரசியல், மருத்துவம், சமயம், கலை எனப் பல பொருள்களைப் பற்றி படைப்பாளர்கள் அதில் எழுதினர். மகாகவி பாரதியாரும் கட்டுரைகளை எழுதினார்.

தொழுநோயால் பாதிக்கப்பட்ட அவர் ரயிலில் பயணம் செய்ய அனுமதியில்லை. பல ஊர்களுக்கும் அவர் நடந்து சென்று, பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார். நெருங்கிய நண்பரான சின்னமுத்து முதலியாரைச் சந்தித்தபோது அவர்தான் பாப்பாரப்பட்டியிலேயே தங்கும்படி வற்புறுத்தினார்.

'நோயோடு போராடும் நீங்கள் ஊர் ஊராகச் செல்வதைத் தவிருங்கள். பாப்பாரப்பட்டியிலேயே தங்கி, நீங்கள் விரும்பும் ஆலயத்தை அமையுங்கள். உதவுகிறோம்' என்று சின்னமுத்து கூறினார்.

அதன்பிறகுதான் பாப்பாரப்பட்டியில் பாரத ஆஸ்ரமம் அமைந்தது. சிவா உடல் நிலை மோசமடைந்ததால் 41-ஆவது வயதில் , பாரத ஆசிரமத்தில் 1925, ஜூலை 23-இல் மறைந்தார்.

திருவல்லிக்கேணி கடற்கரைக்குத் 'திலகர் திடல்' எனப் பெயரிட்டு, அங்கு திலகரின் பிறந்தநாள் விழாவைத் திறம்படக் கொண்டாடியவர் சுப்பிரமணிய சிவா. ஒரு சன்னியாசி போல வாழ்ந்து மறைந்தார்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.