சிரி... சிரி...
பெண் பார்க்கப் போனீங்களே... ஸ்வீட், காரம் வச்சாங்களா?
'பெண் பார்க்கப் போனீங்களே... ஸ்வீட், காரம் வச்சாங்களா?'
'காரம் வச்சாங்க. 'ஸ்வீட் எங்கே?'ன்னு கேட்டா, 'காபியில சர்க்கரை போட்டிருக்கிறோம்'கிறாங்க!'
-ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
'உங்களைத் தேடி நிறையப்பேர் வர்றாங்களே... உங்க நண்பர்களா?'
'அட! கடன் கொடுத்தவங்கய்யா!'
-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
'எந்த வேலையைக் கொடுத்தாலும் எங்க ஹெட் கிளார்க் பிரிச்சு மேய்ஞ்சிடுவார், சார்!'
'மாடு மாதிரி உழைப்பார்னு சொல்லுவீங்களே... அவரா சார்?'
'இதுல முப்பது மாத்திரை இருக்கு... வேளைக்கு ஒண்ணு வீதம் தினமும் மூணுவேளை சாப்பிட்டா பத்துநாள்ல சரியாப் போயிடும்...'
'மாத்திரைதானே டாக்டர்?'
-வி.ரேவதி, தஞ்சை.
'இந்த கிளீனிக்ல ஏன் ரெண்டு டாக்டர் இருக்காங்க?'
'செகண்ட் ஒப்பினியன் வேணும்னா இங்கேயே வாங்கிக்கலாம்னுதான்!'
-பர்வீன் யூனுஸ், சென்னை.
'ஏண்டா பத்து நாளா பள்ளிக்கூடம் வரலை?'
'நீங்க தானே சார் குளிக்காம பள்ளிக்கூடம் வரக்கூடாதுன்னு சொன்னீங்க!'
-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

