பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

கணினிகளுக்கு கூகுளின் ஜெமினி ஏ.ஐ.

விண்டோஸ் கணினிகளுக்காக கூகுளின் செயற்கை நுண்ணறிவுச் செயலியான ஜெமினி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Published On :

விண்டோஸ் கணினிகளுக்காக கூகுளின் செயற்கை நுண்ணறிவுச் செயலியான ஜெமினி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், கூகுளின் செயற்கை நுண்ணறிவு சேவைகளை நேரடியாகக் கணினிகளிலும், மடிக்கணினிகளிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். கணினிகளில் நாம் செய்யும் பணிகளுக்கு இடையூறு இல்லாமல் ஜெமினியைப் பயன்படுத்தி, நமது பணிகளை எளிதாகவும் வேகமாகவும் முடிக்கலாம். எப்படிக் கைப்பேசிகளில் ஜெமினி ஏ.ஐ. சேவைகளைப் பயன்படுத்துகிறோமோ, அதேபோல் தற்போது கணினியிலும் பயன்படுத்தலாம்.

இதற்காக ஜெமினி இணையப் பக்கத்துக்குச் சென்று, பதிவிறக்கம் செய்து கொண்டு, கீபோர்டில் அல்ட், ஸ்பேஸ் பொத்தான்களை ஒன்றாக அழுத்தி உடனடியாக ஜெமினியைப் பயன்படுத்தலாம்.

ஆவணத்தின் உண்மைகளைச் சரிபார்க்கவோ, புகைப்படத்தை உருவாக்கவோ ஜெமினி செயலியை உடனடியாகப் பயன்படுத்தலாம். பயனரின் ஜிமெயில் மற்றும் கூகுள் டிரைவிலிருந்து தொடர்புடைய தரவுகளைப் பெற்று தேவையான தகவல் சேர்க்கையை ஜெமினி செயலியே செய்யும்.

'நானோ பனானா' மூலம், பயனர்கள் படங்களை வடிவமைக்கவும், 'ஜெமினி ஓம்னி' மூலம் உயர்தர விடியோக்களை இயக்கவும் இந்த 'ஜெமினி டெக்ஸ்டார்' செயலி உதவும். பெரும்பாலான அலுவலகப் பயனர்கள் கணனியைப் பயன்படுத்துவதால், இந்தப் புதிய சேவை அவர்களைக் கவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.