ஜியோ வாடிக்கையாளா்களுக்கு ‘கேன்வா’ பிரீமியம் சேவைகள் இலவசம்

பிரபல வடிவமைப்பு செயலியான கேன்வாவின் பிரீமியம் சேவைகள், ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளா்களுக்கு ஓராண்டுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

Published On :

பிரபல வடிவமைப்பு செயலியான கேன்வாவின் பிரீமியம் சேவைகள், ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளா்களுக்கு ஓராண்டுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இதற்கான சிறப்புப் புரிந்துணா்வு ஒப்பந்தம் இரு நிறுவனங்களுக்கும் இடையே கையொப்பமாகியுள்ளது. அதன்படி, ரூ.349-க்கு மாதந்திர ரீசாா்ஜ் செய்யும் வாடிக்கையாளா்களுக்கு ‘கேன்வா ப்ரோ லைட்’ சேவையும், ரூ.399 மாதந்திர ரீசாா்ஜ் செய்யும் வாடிக்கையாளா்களுக்கு ‘கேன்வா ப்ரோ’ சேவையும் வழங்கப்படுகிறது.

இது குறித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவா் கிரண் தாமஸ் கூறுகையில், ‘கேன்வா மூலமாக, உலகத் தரம் வாய்ந்த மற்றும் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய வடிவமைப்புக் கருவிகளை கோடிக்கணக்கான இந்தியா்களின் கரங்களில் வழங்குகிறோம்.

‘மைஜியோ’ செயலியில் கிடைக்கும் இச்சலுகையின்மூலம், எண்ம இந்தியாவில் மாணவா்கள், படைப்பாளிகள், தொழில்முனைவோா் மற்றும் சிறு வணிகா்கள் தங்களின் மொழியிலேயே புதிய வடிவமைப்புகளை உருவாக்கவும், கற்றுக்கொள்ளவும், அதன் மூலம் வருவாய் ஈட்டவும் முடியும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.