பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

கோலிவுட் ஸ்டூடியோ!

நடிப்பில் அடுத்தடுத்த கட்டத்துக்கு முன்னேறி வரும் ராஷ்மிகா மந்தனா, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பயோபிக்கில் சுப்புலட்சுமியாக நடிக்க உள்ளார்.

ராஷ்மிகா

Published On :

டெல்டா அசோக்

எம்.எஸ்.சுப்புலட்சுமியாக நான்... ராஷ்மிகா நெகிழ்ச்சி!

நடிப்பில் அடுத்தடுத்த கட்டத்துக்கு முன்னேறி வரும் ராஷ்மிகா மந்தனா, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பயோபிக்கில் சுப்புலட்சுமியாக நடிக்க உள்ளார். கௌதம் தின்னூரி இயக்க, அல்லு அரவிந்த் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

எம். எஸ். சுப்புலட்சுமியின் 110-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அண்மையில் இந்தப் படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. சுப்புலட்சுமியாக நடிப்பதால் மிகவும் உருகிய ராஷ்மிகா பட விழா மேடையிலேயே நெகிழ்ந்துள்ளார்.

இந்த நிகழ்வில் ராஷ்மிகா, 'நீங்க எல்லாரும் இங்க வந்து எங்களோட சேர்ந்து அம்மாவோட இந்த ஸ்பெஷல் நாளை செலிப்ரேட் பண்ண வந்திருக்கீங்க. அதுக்கு ரொம்ப நன்றி. இன்னைக்கு நாங்க உங்களை செலிப்ரேட் பண்ணப்போறோம் அம்மா. உங்க குரல்ல ஒரு தனித்துவமான தெய்வீகச் சக்தி இருக்கு. அதைக் கேட்கும்போது இறைவனின் முன்னிலையில் உக்கார்ந்திருக்கிற மாதிரியான ஓர் உணர்வு ஏற்படுது.

அம்மா, உங்க வாழ்க்கையில ஒரு சின்ன பகுதியா இருக்குறதுக்கு என்னை தேர்ந்தெடுத்ததுக்காக நான் எப்பவுமே உங்களுக்குக் கடமைப்பட்டிருப்பேன். உங்களுடைய ஆசிர்வாதம், சதாசிவம் சார் ஆசிர்வாதம், சண்முகவடிவு அம்மா ஆசிர்வாதம் மற்றும் உங்க குடும்பத்தினர், நல

விரும்பிகளின் ஆசிர்வாதம் எப்போதும் என் கூடவே இருக்கட்டும். நான் கண்டிப்பா என்னோட சிறந்த பங்களிப்பைக் கொடுப்பேன்னு வாக்குறுதி தர்றேன். ஹாப்பி பர்த்டே அம்மா!' எனக் கொஞ்சும் தமிழில் பேசினார்.

இளையராஜா

இளையராஜா

இளையராஜாவுடன் கூட்டணி

கார்த்திக் சுப்பராஜின் 'டோரதி', தியாகராஜன் குமாரராஜாவின் 'பாக்கெட் நாவல்' என அடுத்தடுத்து எதிர்பார்க்கப்படும் படங்களுக்கும் இளையராஜாதான் இசையமைப்பாளர்.

'மாடர்ன் லவ் சென்னை' ஆந்தலஜிக்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா - இளையராஜா கூட்டணியில் உருவாகும் படம் பாக்கெட் நாவல். பிறகு, எஸ். ஏ. விஜயகுமார் இயக்கத்தில் சமுத்திரக்கனி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் இரா. முத்தரசன் நடித்துள்ள 'அரிசி' திரைப்படத்துக்கும் இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் ராப் பாடகர் வேடனும் ஒரு பாடல் பாடியிருக்கிறார். இத்துடன், இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள 'மனுஷி' திரைப்படத்துக்கும் இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

மேலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், பிரியங்கா மோகன், காயடு லோஹர் நடிப்பில் உருவாகவிருக்கும் 'மஞ்சணத்தி' திரைப்படத்துக்கும் இளையராஜா கமிட் ஆகியிருக்கிறார். மாரி செல்வராஜ் - இளையராஜா கூட்டணியில் உருவாகும் முதல் படம் இதுதான்.

v

v

ஜாக்கியாக துருவ் விக்ரம்!

விக்ரம் நடித்த 'பைசன்' வெற்றிப் படத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு சில நாள்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. இந்தப் படத்தை டோலிவுட்டின் 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. தமிழில், 'டியூட்', 'குட் பேட் அக்லி', 'மொத ராத்திரி' படங்களைத் தொடர்ந்து, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

'ஆதித்ய வர்மா' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கரண் அரவிந்த் குமார், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்துக்கு 'ஜாக்கி' எனத் தலைப்பிட்டிருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து டோலிவுட் இயக்குநர் ஒருவருடனும் துருவ் விக்ரம் கைகோத்திருக்கிறார். டோலிவுட் இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்திலும் துருவ் விக்ரம், ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். கமர்சியல் படமான இது தமிழ் - தெலுங்கு என இருமொழிகளில் உருவாகவிருக்கிறது.

நானி

நானி

வெற்றிமாறன், மாரி செல்வராஜ் படங்களில் நடிப்பேன் - நானி!

நானி நடிப்பில், ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தசரா'. இதனை தொடர்ந்து நானி - ஸ்ரீகாந்த் ஒடேலா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் 'தி பாரடைஸ்'. இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

அதில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த நானி, 'முதல்வர் சி.ஜோசப் விஜய் மிகப்பெரிய நட்சத்திரம். அவர் மீது தமிழ்நாடு மக்கள் வைத்துள்ள நம்பிக்கை என்பது வெறும் பாக்ஸ் ஆபீஸ் வசூல் அல்லது அவருடைய நட்சத்திர அந்தஸ்தினால் மட்டுமே வந்தது அல்ல. பல ஆண்டுகளாக விஜய்யை தங்கள் குடும்பத்தில் ஒருவராக உணர்வதாலும், அவர் மீது வளர்த்துக் கொண்ட நம்பிக்கையாலும்தான் இந்த ஆதரவை அளிக்கிறார்கள்.

இணையதளத்தில் வெளிவந்த சிறிய காணொலிகளைப் பார்த்தவரை அவர் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறார் என்று நினைக்கிறேன். எதிர்வரும் ஆண்டுகளில் அவரது செயல்பாடு சிறப்பாக இருக்கும். அவரைத் தேர்ந்தெடுத்த மக்கள் மற்றும் வாக்காளர்களின் நம்பிக்கை உண்மை என நிரூபிக்கப்படும்.

தென்னிந்தியப் படங்கள் மற்ற மொழிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே 'பான்-இந்தியன்' என்று அழைக்கிறார்கள். ஆனால், ஹிந்திப் படங்கள் தெற்கில் வெற்றி பெற்றால் அப்படி அழைப்பதில்லை. இந்த வார்த்தையில் எனக்கு உடன்பாடில்லை. என் படத்தை தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னட மக்களிடம் கொண்டு சேர்க்க விரும்புவேனே தவிர, அந்தப் பட்டத்தைப் பயன்படுத்த விரும்பவில்லை.

எனக்கு விருப்பமான வெற்றிமாறன், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்களுடன் இணைந்து விரைவில் நேரடித் தமிழ்ப் படத்தில் நடிப்பேன் என நம்புகிறேன். நல்ல கதைகள் அமைந்தால் கண்டிப்பாகத் தமிழில் படம் தயாரிப்பேன். சமூக வலைத்தளங்களில் தமிழ் ரசிகர்கள் பதிவிடும் கருத்துகளை இப்போது உள்ள மொழிபெயர்ப்பு வசதி மூலம் படித்துப் புரிந்து கொள்கிறேன்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.