பதிப்பகத்தில் மகாத்மாவின் சிலை

சின்ன அண்ணாமலை தியாகராயநகர் பனகல் பூங்கா எதிரே, பார்க்லாண்ட்ஸ் ஓட்டல் அருகே தமிழ்ப்பண்ணை என்ற நூல் வெளியீட்டகத்தைத் தொடங்கினார். அச்சிலும்,
பதிப்பகத்தில் மகாத்மாவின் சிலை

சின்ன அண்ணாமலை தியாகராயநகர் பனகல் பூங்கா எதிரே, பார்க்லாண்ட்ஸ் ஓட்டல் அருகே தமிழ்ப்பண்ணை என்ற நூல் வெளியீட்டகத்தைத் தொடங்கினார். அச்சிலும், அமைப்பிலும் உள்ளடகத்திலும் மிகச்சிறந்ததான நூல்களை வெளியிடுவதில் புதுமையைப் புகுத்தினார்.
 நூல்கள் விற்பனைக் கூடத்தையும் அமைத்தார். அதே கட்டடத்தின் ஒரு பகுதியில் வாடகை நூலகத்தையும் ஏற்படுத்தினார். சிறு இடம்தான் அது கலைவாணியின் கோயிலாகத் திகழ்ந்தது. நடுவே மகாத்மா காந்தி சிலை, அதைச் சுற்றிலும் வட்டவடிவில் நூல்களின் காட்சி. சின்னஞ்சிறிய விற்பனைக்கூடத்தில் 1942-ஆம் ஆண்டு காலகட்டத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படங்கள் சுவற்றின் நான்கு பக்கமும் கம்பீரமாக அலங்கரித்தன.
 (கலைமாமணி விக்கிரமனின் "இதழாசிரியர்கள் மூவர்' நூலிலிருந்து)
 -கோட்டை செல்வம், கோட்டைக்காட்டுவலசு
 காந்திஜிக்கு பசு, எருமை பால் குடிப்பதில் விருப்பமில்லை. அவற்றை இம்சைபடுத்துகிறோம் என்பது அவருடைய கருத்து. இருந்தாலும் அவருடைய மனைவியும், டாக்டரும் கட்டாயப் படுத்தி ஆட்டுப்பாலை குடிக்க வைத்தனர். அவர் இங்கிலாந்து சென்ற போது கூட அவருடன் பாலுக்காக இரண்டு ஆடுகள் பயணித்தன.
 -ராஜிராதா, பெங்களூரு
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com