ஸ்பெல் பவுண்ட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "மைக்கேல்பட்டி ராஜா'.
நிகேஷ்ராம், பெர்லின், கோவை சரளா, ரவிமரியா, "நான் கடவுள்' ராஜேந்திரன், தம்பி ராமையா, கெளசல்யா, ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் எஸ்.பிரான்ஸிஸ். படம் குறித்து இயக்குநர் பேசும் போது....
""2012-ஆம் ஆண்டு நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றை தழுவி இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. தன் காதலனுடன் அரபிகளை ஏமாற்றிப் போலியான ஆவணங்கள் மூலம் தமிழகம் வந்த ஒரு அரபுப் பெண், தன் வாழ்க்கையில் எதிர்கொண்ட சவால்களை மையமாகக் கொண்ட கதை இது.
அரபுப் பெண்ணை காதலித்த தமிழ் இளைஞனின் நிலைமையை விளக்கும் படம். அரபு நாட்டுக்கு வேலைக்காக செல்லும் கதாநாயகன், புரோக்கர்களால் ஏமாற்றப்படுகிறான். தமிழ் மட்டும் தெரிந்த அவர், அங்கேயே கஷ்டப்பட்டு முன்னுக்கு வருகிறான். அவன் வேலை செய்யும் இடத்தில் ஒரு அரபு பெண்ணால் ஈர்க்கப்படுகிறான். அதே வேளையில் ஒரு பேய் அவனை துரத்துகிறது. பேயிடம் இருந்து அவன் தப்பித்தானா?
அரபுப் பெண்ணுடன் காதல் கொண்டதால், மாட்டிக் கொண்டானா? அடுத்து என்ன நடக்கிறது எனபதை விறுவிறுப்பாகவும், நகைச்சுவையாகவும் சொல்லுவதே கதை. கதைக்களம் அரபு நாடு என்பதால், நிஜ அரபுப் பெண்ணையும் நிஜ அரபிகளையும், நிஜ பாகிஸ்தானிகளையும் நடிக்க வைத்திருக்கிறேன். இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் படம் திரைக்கு வரும் என்றார் இயக்குநர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!

ராமா் கோயில் நிதி முறைகேடு: அறக்கட்டளை நிா்வாகிகள் அயோத்தியைவிட்டு வெளியேற எஸ்ஐடி தடை

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 22) கடக ராசியா? செலவு யாருக்கு?

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 22 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு எப்படி?
விடியோக்கள்
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP




