FOLLOW US

ON GOOGLE DISCOVER

வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்: எடப்பாடி பழனிசாமிதஞ்சாவூரில் நம்மாழ்வார் வேளாண் பாலிடெக்னிக் கல்லூரி! பட்ஜெட்டில் அறிவிப்பு!எல் நினோவால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம்! அமைச்சர் வினோத் உரைதமிழக வேளாண் பட்ஜெட்! வெற்றி விவசாய விருதுகள் அறிவிப்புஉயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!‘கோட் சூட் அணிந்த விவசாயி’... விஜய்யை புகழ்ந்த அமைச்சருக்கு திமுகவினர் எதிர்ப்பு!பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டம்: ரூ. 648 கோடி ஒதுக்கீடு!கருப்பு சட்டை அணிந்து திமுக எம்.எல்.ஏக்கள் வருகை!மோடி விடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மெட்டா தலைவா் ஸூக்கா்பொ்க் மன்னிப்பு கோரினாா்முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்களில் கட்டணம் அதிகம்: ரயில்வே அமைச்சா்சாலைகளில் குறைபாடுகளா?: செயலி மூலம் புகைப்படம் எடுத்து அனுப்பலாம்காவல் நிலையங்களில் சானிடரி நாப்கின் விநியோக இயந்திரம் அமைக்க வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு அமெரிக்காவில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்கள் குடும்பத்தினா் கைது தமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்
/

தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை: முக்கிய அம்சங்கள்!

தமிழ்நாடு வேளாண் நிதிநிலையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பற்றி...

News image

தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கையை வியாழக்கிழமை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யும் வேளாண்துறை அமைச்சர் ஆர். வினோத் - டிஎன்எஸ்

Updated On :6 ஆகஸ்ட் 2026, 11:44 am IST

தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் ஆர். வினோத் வியாழக்கிழமை காலை தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசில் நேற்று (ஆக. 5) தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், இன்றைய வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆர். வினோத் இன்று (ஆக. 6) முதல்முறையாக தாக்கல் செய்தும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றி வருகிறார்.

உழுவார் உலகத்தார்க்கு ஆண்அஃ தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து எனும் திருக்குறளுடன் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார் அமைச்சர் வினோத்.

* வேளாண் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* எல் நினோவால் 12 மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

* விவசாயிகளுக்கான மும்முனை இலவச மின்சாரம் தொடரும். இந்த திட்டத்திற்காக ரூ.7,432 கோடி நிதி ஒதுக்கீடு

* தமிழ்நாடு மண்வளம் பாதுகாப்பு இயக்கம் அறிமுகம் செய்யப்படும்.

* உழவர் அடையாள அட்டை பெற்ற 3 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.6 கோடியில் மண்வள அட்டை வழங்கப்படும்.

* புதிய இயற்கை வேளாண் தொகுப்பை உருவாக்க ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு.

* நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோக மானியத்துக்கு மாநில அரசின் சிறப்பு திட்டத்துக்கு ரூ.34.72 கோடி நிதி ஒதுக்கீடு.

* 2026-27 ஆம் ஆண்டில் 131 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்திக்கு இலக்கு நிர்ணயம்.

* மண்வள பாதுகாப்பு இயக்கத்துக்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு

* உழவர் செய்யறிவு திட்டம்(ஏஐ) செயல்படுத்த ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

* சாமை, திணை, வரகு உள்ளிட்ட தமிழ்நாடு குறுதானிய இயக்கம் தொடங்கப்படும். இதற்காக ரூ.7.61 கோடி நிதி ஒதுக்கீடு.

* மக்காச்சோளம் உற்பத்தியை அதிகரிக்க ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு.

* பயறு வகைகள், எண்ணெய் வித்து பயிர்களில் தன்னிறைவு இயக்கத்திற்காக ரூ.203.64 கோடி நிதி ஒதுக்கீடு.

பருத்தி மறுமலர்ச்சி இயக்கம்

* தரமான பருத்தி உற்பத்தியைப் பெருக்கிட ஏதுவாக பருத்தி மறுமலர்ச்சி இயக்கம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.27.21 கோடி நிதி ஒதுக்கீடு.

* அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகள், உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில் 20 சதவீதம் வரை கூடுதல் மானியம் வழங்கப்படும்.

* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு மின்மோட்டார் சூரிய சக்தி பாம்புசெட்டுகள் 300 ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகளுக்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்படும். இந்த திட்டத்துக்காக ரூ.56.72 கோடி நிதி ஒதுக்கீடு.

* காட்டுப்பன்றிகளிகளால் ஏற்படும் பயிர் இழப்புகளை தடுக்க காட்டுப்பன்றி சேத தடுப்பு திட்டத்திற்கு ரூ.7.35 கோடி நிதி ஒதுக்கீடு.

நிரந்த பசுமைக்கான வேளாண் காடுகள் திட்டம்

* விவசாய நிலங்களில் நிரந்தர பசுமைக்கு வேளாண் காடுகள் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.17.70 கோடி நிதி ஒதுக்கீடு.

நம்மாழ்வார் விருது

* ஒவ்வொரு ஆண்டும் 5 விவசாயிகளுக்கு சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்படும். இந்த திட்டத்துக்காக ரூ.11 லட்சம் நிதி ஒதுக்கீடு.

* மூன்று புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.7.1 கோடி நிதி ஒதுக்கீடு.

* கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்காக கறும்பு சாகுபடி மேம்பாட்டு திட்டத்திற்காக ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு.

அஞ்சலை அம்மாள் விருது

* மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டிக்கான மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் பெயரில் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப்படும். முதல் பரிசு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 1 லட்சம் வழங்கப்படும்.

* திரவ உயிர் உர உற்பத்தி மையங்களின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.3.56 கோடி நிதி ஒதுக்கீடு.

* 17,315 ஏர்க்கர் விதைக்கரும்பு மானியம் வழங்க ரூ.9.36 கோடி நிதி ஒதுக்கீடு.

பனை பாதுகாப்பு இயக்கம்

* பனை நடுவோம்.. பலன் பெறுவோம் என்பதன் அடிப்படையில் பனை விதைகள், பனங்கன்றுகள் விநியோகம், பயிற்சி மற்றும் பனை பொருள் உற்பத்தி கூடாரங்கள் அமைப்பதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

வெற்றி விவசாயி விருது

* நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துகள், பருத்தி உள்ளிட்ட ஒன்பது பயிர்களை இரண்டு ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டு, அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு மாவட்ட அளிவில் வெற்றி விவசாயி விருது வழங்கப்படும்.

* முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாம் பரிசாக ரூ.25 ஆயிரம் என 90 பரிசுகள் வழங்கப்படும். இதற்காக ரூ.67.50 லட்சம் மாநில நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்படும்.

வெற்றி இல்லதரசி வீட்டு தோட்டம்

* வெற்றி இல்லதரசி வீட்டு தோட்டம் திட்டத்தில் மாடித்தோட்டம் அமைக்க இடுபொருள் தொகுப்புகள், காய்கறி விதை தொகுப்புகள், பழச்செடி தொகுப்புகள், நீரியல் தோட்டம். செங்குத்து தோட்டம், நிழல்வலை குடில்கள் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.

தமிழ்நாடு தளிர் கீரைகள் திட்டம்

* சிறிய தளிர்... பெரிய ஆரோக்கியம் என்ற அடிப்படையில் தமிழ்நாடு தளிர்கீரைகள் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்காக ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கீடு

* தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க உயர் தொழில்நுட்ப சாகுபடி முறைகளுக்கு ரூ.41 கோடி நிதி ஒதுக்கீடு. இதன்மூலம் சாமந்தி சாகுபடியை ஒளியூட்டி ஊக்குவித்தல், பழ உறைகள், குலை உறைகள், பசுமைக்குடில், நிழல்வலை குடில், நிரந்தர பந்தல் அமைத்தல், வாழை விழாமல் இருக்க முட்டு கொடுத்தல் உள்ளிட்டவை வழங்கி விவசாயிகளுக்கு உதவப்படும்.

நன்னெறி சாகுபடி

* நஞ்சற்ற உற்பத்தி மற்றும் உலகளாவிய ஏற்றுமதிக்காக ரூ.8.42 கோடி நிதி ஒதுக்கீடு.

* தென்னை சிறப்பு திட்டத்திற்காக ரூ.41 கோடி நிதி ஒதுக்கீடு.

* தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகம் தென்னை சார்ந்த பொருள்களுக்கு லாபகரமான விலை கிடைக்கச் செய்ய ஏதுவாக தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.5.30 கோடி நிதி ஒதுக்கீடு.

100 சதவீத மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகள்

* 100 சதவீத மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகள் உருவாக்குதல் மற்றும் 75 சதவீத மானியத்தில் 500 பண்ணைக் குட்டமைகள் தூர்வாருதல் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.8.5 கோடி நிதி ஒதுக்கீடு.

மருத்துவப் பயிர்கள் சாகுபடி ஊக்குவிப்பு திட்டம்

* 1,720 ஏக்கரில் ரூ.1.51 கோடியில் மருத்துவப் பயிர்கள் சாகுபடி ஊக்குவிப்பு திட்டம்

உயர் மதிப்ப கொண்ட பழ உற்பத்தியை அதிகரிக்க திட்டம்

* புளுபெரி அவகோடா, கிவி உள்ளிட்ட உயர் மதிப்பு கொண்ட பழ உற்பத்தியை அதிகரிக்க திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்திற்காக ரூ.1.87 கோடி நிதி ஒதுக்கீடு.

வெங்காய சேமிப்புக் கிடங்குகள்

* வெங்காய சேமிப்புக் கிடங்குகள் அமைப்பதற்காக ரூ.22 கோடி மதிப்பீட்டில் 57 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட நவீன சேமிப்பு வசதிகள் உருவாக்கப்படும்.

நீர் மேலாண்மைக்கான துளித் துளித் தண்ணீர் திட்டம்

* நீர் மேலாண்மைக்கான துளித் துளித் தண்ணீர் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.785 கோடி நிதி ஒதுக்கீடு.

* வேளாண் காடுகள் திட்டத்திற்காக ரூ.17.70 கோடி நிதி ஒதுக்கீடு.

* அரசு தோட்டக்கலைப் பண்ணைகளை மேம்படுத்த ரூ.2.3 கோடி நிதி ஒதுக்கீடு.

* வேளாண் இயந்திரங்களை பழுது நீக்கி பராமரிக்கும் 15 மையங்கள் அமைத்திட 50 சதவீத மானியம் வழங்கப்படும். இதற்காக 1.12 கோடி நிதி ஒதுக்கீடு.

வேளாண் இயந்திரங்கள், கருவிகள் கொள்முதல்

* இ-வாடகை 2.0 செயலி மூலம் வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களை வாடகைக்கு வழஹ்கும் சேவையா வலுப்படுத்த, 463 வேளாண் இயந்திரங்கள், கருவிகள் கொள்முதல் செய்யப்படும்.

1000 விவசாயிகளுக்கு சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்குகள்

* 1000 விவசாயிகளுக்கு மானியத்தில் அதிகபட்ச மானியம் 80 சதவீதத்தில் மின்கட்டமைப்புடன் சாராத சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைக்க ரூ.23 கோடி நிதி ஒதுக்கீடு.

Summary

Regarding the key features of the Tamil Nadu Agriculture Budget...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.