மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

இந்தக் கால இளைஞர்களுக்கு..!

தற்போது மணிஆர்டரின் வடிவமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது, படிவத்தின் பின்புறம் பல வாக்கியங்கள் அச்சடிக்கப்பட்டிருக்கின்றன.

News image
Updated On :9 டிசம்பர் 2015, 10:58 am

தற்போது மணிஆர்டரின் வடிவமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது, படிவத்தின் பின்புறம் பல வாக்கியங்கள் அச்சடிக்கப்பட்டிருக்கின்றன. நமக்குத் தேவையான ஒரு வரியின் எண்ணைத் தேர்வு செய்து முன்பக்கம் உள்ள கட்டத்தில் குறிப்பிட்டால் போதும். அத்தகைய வாக்கியங்களில் ஒன்று, பொருள் பொதிந்ததாகவும், முக்கியமானதாகவும் தோன்றியது. அது - "Do not waste money. Use cautiously' - இதுபோன்ற சில அறிவுரைகள்.

"ஆன்லைன்' மூலமாக, எல்லாவற்றையும் வாங்குவது இளைஞர்களுக்கு இயல்பாகிவிட்டது. ரெயில்வே டிக்கெட், சில கலை நிகழ்ச்சிகள் - இவற்றுக்கு இந்த ஆன்லைன் முறை பயனளிப்பதுதான். நேரம் மிச்சமாகிறது. ஆனால், மாதாந்திர மளிகைச் சாமான்களை இந்த வகையில் வாங்குவது வீண். நமக்கு அவசியமான ஆழ்ஹய்க்-கள் கிடைப்பது இல்லை. அதுமட்டுமல்ல, அவசர அவசரமாக, கடைக்காரர்கள் பொருள்களை இறக்கி வைக்கையில், ஏதேனும் விட்டுப்போக வாய்ப்புண்டு. (சிலவற்றுடன் இணைக்கப்பட்டிருக்கும் இலவசங்களும் தருவதில்லை).

ஒரு டயரியில் சில முக்கியச் செலவுகளைக் குறித்துக் கொள்வது நலம். ""அதுதான், டெபிட் கிரெடிட் அட்டையில் தெரிந்து விடுகிறதே'' என்ற முணுமுணுப்பு காதில் விழுகிறது. பணிப் பெண்மணியின் ஊதியம்; பால் போன்றவற்றுக்கு அட்டை உதவாது. மேலும், டயரியில் எழுதி வைத்தால் அந்தந்த மாதக் கூடுதல் செலவு என்னென்ன என்பது புலப்படும்; வருகிற மாதங்களில், குறைப்பதற்கான யோசனை செய்யலாம்.

பெற்றோரோ அல்லது பிற வயதானவர்களோ, உங்களை அடிக்கடி கேள்வி கேட்டுச் சலிப்படையச் செய்வார்கள்தான். ஆனால், அதற்காக எரிந்து விழ வேண்டாம். பணிவுடன் பதில் சொல்லப் பழகுங்கள். அவர்களும் இளைஞராக இருந்துதான் முதுமை நிலை அடைந்திருக்கிறார்கள்.

சில இளைஞர்களிடம் ஒரு தவறான மனோபாவம் முளைத்திருக்கிறது. போக்குவரத்து விதிகள் நடைமுறைச் சட்டங்களை மீறுவது! ""என்ன பிரமாதம்! லஞ்சம் போன்ற நினைப்பு சரியில்லை. நேர்மையான அதிகாரிகள் எல்லாத் துறைகளிலும் இன்றும் இருக்கிறார்கள்.

கணினி, செல்லிடப் பேசி இவை மூலம் எல்லாம் தெரிந்து கொள்ளலாம் என்பது ஓரளவு சரிதான். அதேசமயம், அஞ்சல் துறை, சில தனியார் குரியர்கள், ரெயில்வே விதிகள் இவற்றைப் பற்றி சிறிதாவது ஞானம் வளர்த்துக் கொண்டால் நலம். நெருங்கிய உறவினருக்குப் பார்சல் அன்பளிப்பு அனுப்புகையில் சஉஊப உதவாதே?

எந்த ஒரு விஷயத்திலும் ""முன்வடிவ எண்ணம்'' வேண்டாம், (Pre COnceived Notion) 'இந்தக் கம்பெனியில் இந்த ஊர்க்காரர்களைத்தான் சேர்த்துக் கொள்ளுவார்கள்' இந்தக் கம்பெனியா? குறிப்பிட்ட சாதிக்குத்தான் முக்கியத்துவம் போன்ற மனப் படிமங்களை வளர்த்துக் கொள்ளாதீர்கள்! நானறிந்த ஓர் இளைஞன், கல்லூரியில் படிக்கும்போதே, இதுபோன்ற நினைப்புக்களை வைத்துக்கொண்டு, இப்போது பட்டம் பெற்றபின், வீட்டில் வேலையின்றிப் பொழுது போக்குகிறான்.

உங்கள் குறிக்கோளில் ஒரு தெளிவு இருத்தல் அவசியம். கணினி வேலை; வங்கி உத்தியோகம்; சுய தொழில்; கலை உலகு - எதுவானாலும் சரி. அதிலேயே முனைப்புடன் முயற்சி செய்ய வேண்டும். எதிர்ப்படுகிற இடைஞ்சல்களை பொருட்படுத்தாதீர்கள்.

படிப்பு, வேலை தவிர வேறு பொழுதுபோக்குகளும் வாழ்க்கைக்குத் தேவைதான். ஆனால், அதற்காக உங்கள் தனிப்பட்ட நற்பண்புகளைப் பலி கொடுக்காதீர்கள். மது விருந்து, பிற கேளிக்கைகள் இவற்றை உறுதியாக மறுத்து விடுங்கள். மற்றவர்களிடையே இகழ்ச்சியை மதிக்காதீர்கள்.

மேம்போக்காகப் பார்த்தால் மேற்சொன்ன யோசனைகள் சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால், பின்பற்றினால் வாழ்வின் முன்னேற்றத்துக்குப் படிக்கட்டுகள் போன்று அமையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.