இந்திய அரசின் காதி கிராமத் தொழில் வாரியம் பதிவு பெற்ற காதி கிராமத் தொழில்களுக்குப் பயிற்சி, கடன், மானியம் தருவதோடு, ஏற்றுமதி வளர்ச்சிக் கவுன்சிலாகவும் செயல்படுகிறது. வெளிநாடுகளில் இந்தியப் பொருட்களின் அகில உலக விற்பனைக் கண்காட்சிகள் நடைபெற உள்ளன.
ஜனவரி 2016 - இரண்டாம் வாரத்தில் இண்டர்மோடா கண்காட்சி மெக்சிகோவின் குவலாஜராவில் நடைபெற உள்ளது. மார்ச் 2016 இல் பனாமாத் தீவுகளிலும், பிப்ரவரி 2016 இல் இங்கிலாந்தின் பர்மிங்ஹாமிலும், அடுத்த ஆண்டு அக்டோபரில் பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவிலும் கண்காட்சிகள் நடைபெற உள்ளன.
இவற்றில் கலந்து கொள்ள விரும்பும் பதிவு பெற்ற தயாரிப்பாளர்கள், மண்டல ஓயஐஇ அலுவலத்தில் விண்ணப்பிக்கலாம். கண்காட்சி நடைபெறும் நாடுகளுக்குத் தங்களுடைய தயாரிப்புப் பொருட்களைக் கொண்டு சென்று விற்பனை செய்யலாம். செலவுக்கு ரூ.1.25 லட்சம் வரை ஓயஐஇ தரத் தயாராக உள்ளது.
ஏற்றுமதிக்கு உகந்த பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். கண்காட்சிக்குச் செல்ல விரும்புபவர் தகுதியான பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். ஸ்டால் வாடகையில் 50% , விமானக் கட்டணத்தில் 75% வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வழங்கப்படும்.
இதில் கலந்து கொள்பவர்கள் ரூ.35 ஆயிரம் செஹக்யூரிட்டி டெபாஸிட் தொகையாகக் கட்ட வேண்டும். அதைத் திருப்பித் தந்துவிடுவார்கள்.
வெளிநாடுகளில் நடைபெறும் கண்காட்சியில் தங்களுடைய தயாரிப்புப் பொருட்களை விற்க விரும்பும் இளம் தொழில்முனைவோர்கள் கீழ்க்கண்ட இணையதளத்தைக் கூடுதல் விவரங்களுக்குப் பாருங்கள். http://www.kvic.org.in/
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்சிபிக்கு எதிரான போட்டி! குஜராத்துக்கு 156 ரன்கள் இலக்கு!

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


