இன்றையச் சூழலில், எந்த ஒரு வேலையிலும் இளைஞர்கள் பத்தாண்டுகள் (இதுவே அதிகம்) நிரந்தரமாக இருப்பது கிடையாது. குறிப்பாக நிதி ஆலோசகர்கள், தகவல் நுட்பப் பணியாளர்கள் எல்லாருமே "சட் சட்'டென்று பல காரணங்களுக்காக வேறு புதிய வேலைகளுக்குத் தாவி விடுகிறார்கள். அதுபோன்ற நிலைமை வரும்போது பழைய நிறுவனத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
இதோ சில குறிப்புகள்:
1. எப்படியும் விலகல் கடிதம் கொடுக்க வேண்டியிருக்கும். இரண்டு மாதம் அல்லது மூன்று மாத நோட்டீஸ். அந்த இடைப்பட்ட காலத்திலும், முழு ஈடுபாட்டுடன் பணியில் ஈடுபடுங்கள். இனிமேல்தான் இங்கே இருக்கப் போவதில்லையே என்கிற ஏனோதானோ மனப்பான்மை வேண்டாம்.
2. விடை பெறுகிற நேர்காணலில் (Exit Interview) பண்புடன் நடந்து கொள்வது முக்கியம். ""இனிமேல் என்ன செய்வதாக உத்தேசம்?'' என்று அதிகாரி கேட்டால், ""வீட்டிலிருந்து கொண்டு எம்.எஸ்.வி.யின் பழைய பாடலைக் கேட்கப் போகிறேன்'' என்று ஏதாவது ஜோக் அடிக்காதீர்கள். சுயதொழில் ஆரம்பிக்கிற பட்சத்தில், ஓரளவு அந்த ஸ்டேட்மென்டில் உண்மைகூட இருக்கலாம். ஆனால் அத்தகைய ஜோக்குகளுக்கெல்லாம் அது இடமல்ல. சீரியஸôக உங்கள் எதிர்காலத் திட்டத்தைத் தெரிவியுங்கள்.
3. வார்த்தைகளை அளந்து பேசுங்கள். இத்தனை வருட கால அனுபவத்தில், சில ஊழியர்கள் - அல்லது அதிகாரிகளுடன் மோதலும் உரசலும் ஏற்பட்டிருக்கக் கூடும். இதுதான் சாக்கு என்று உணர்வுகளுக்கு வடிகால் தேடாதீர்கள். ஏன் உங்களுக்கு அவர்களுடன் ஒத்து வரவில்லை? என்பதை மென்மையாகக் குறிப்பிடுங்கள்.
4. சில தருணங்களில், ஓரிரு அதிகாரியுடன் மிகத் தடித்த வார்த்தைகளை உதிர்த்திருக்கலாம். அப்படி தடித்த வார்த்தைகளைப் பேசுவதற்கான சூழ்நிலை எப்படி ஏற்பட்டது என்பதை "உள்ளதை உள்ளபடி', அதேசமயம் காட்டமான சொற்களைப் பயன்படுத்தாமல் சொல்லலாம்.
5. வேலையை விட்டு நீங்குவதற்கான காரணத்தை வெளிப்படையாகச் சொல்லுங்கள். ஊதியக் குறைவு, குடும்பச் சூழல், அங்கீகாரம் இல்லாமை... போன்ற பல. இதை விவரமாகக் கூறினால், மனிதவள மேம்பாடு அதிகாரி ஏதாவது தீர்வு கொடுத்தால், அது உங்கள் எதிர்காலத்துக்குப் பயன்படக் கூடும்.,
6. விடைபெறுகிற நேர்காணலில் அதிகாரி உங்கள் "மைனஸ் பாயிண்டுகளை' எடுத்துச் சொன்னால், அமைதியாகக் காது கொடுத்துக் கேளுங்கள். சில பலவீனங்கள் உங்கள் உள்ளுணர்வுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும். ""நேரத்துக்கு வருவதில்லை. நிறைய மானேஜர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்'' என்பது போன்ற சில நிர்வாகத் தரப்பு வாதமாக இருக்கலாம். எதுவானாலும் உணர்ச்சிவசப்படாமல், செவிமடுத்தால், புதிய வேலையில் சேர்ந்த பின் உங்களைத் திருத்திக் கொள்ள நல் வாய்ப்பாக அது இருக்கும்.
7. எந்த ஒரு காரணத்தாலும் பொய் சொல்லாதீர்கள். ஏனெனில், புது வேலைக்குச் சென்றால் உங்கள் வேலை ஜாதகத்தையே (Bio data) கேட்பார்கள். இன்னொன்று: இந்தக் காலகட்டத்தில் புதிய கம்பெனியில் உங்களைப் "படுத்தி' எடுத்த அதிகாரியே "ஆஞநந' ஆக வரக்கூடும். எனவே எச்சரிக்கை தேவை.
8. இத்தனை வருட காலம் உங்களுக்கு ஒத்துழைத்த ஊழியர்கள், மேலதிகாரிகள் எல்லாருக்கும் நன்றி சொல்லி விடை பெறுங்கள். உளப்பூர்வமான நன்றி தெரிவிப்பது ஒரு நற்பண்பு.
ஆல் த பெஸ்ட்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புளியங்குடியை தலைமையிடமாக கொண்டு தனி வட்டம்: உதயநிதி ஸ்டாலின்

ஆலங்குளம் அருகே நாய் கடித்து 8 போ் காயம்!

தென்காசி மாவட்டத்தில் 5,914 தபால் வாக்குகள் பதிவு

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான 2 - ஆம் கட்ட பயிற்சி வகுப்புகள்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


