இணையத்தில் எழுதிச் சம்பாதிக்கலாம்!
தொழில் முனைவோராக விரும்புவரா நீங்கள்? யாருக்குக் கீழும் வேலை செய்யாமல் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்?


தொழில் முனைவோராக விரும்புவரா நீங்கள்? யாருக்குக் கீழும் வேலை செய்யாமல் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்?
அப்படி என்றால் இணையத்தின் வலைப் பக்கத்தில் (க்ஷப்ர்ஞ்ஞ்ங்ழ்) எழுதத் தொடங்குங்கள்.
சரி ; அதில் எழுதத் தெரியும். ஆனால் என்ன எழுதுவது? எப்படிச் சம்பாதிப்பது? என்று யோசிக்கிறீர்களா?
அதற்கும் சில குறிப்புகள் இருக்கின்றன. வாருங்கள், என்னென்ன குறிப்புகள் என்று பார்க்கலாம்:
1. ஊக்கம், உத்வேகம்
ஆம் ; முதலில் ஒரு செயலைச் செய்வதற்கு ஊக்கம் தேவை. இரண்டாவது, அந்தச் செயலில் இறங்கிய பிறகு உத்வேகத்துடன் செயல்பட வேண்டும். பலரால் ஏன் புதிய செயலைத் தொடங்க முடியவில்லை என்றால், ஊக்கமும், உத்வேகமும் இல்லாததே அதற்கு முக்கிய காரணமாக இருக்கும்.
2. எழுதுவதின் நோக்கம்
எதைப் பற்றி எழுதுவது என்பதில் ஒரு தெளிவு வேண்டும்.
ஒரு தலைப்பில் அனைத்து விஷயங்களையும் ஒருவரால் எழுதி விட முடியாது. அதனால் எது படிப்பவருக்குத் தேவை? யாருக்காக நீங்கள் எழுதுகிறீர்கள்? என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும். இதன் பிறகு ஒரு குறிப்பிட்ட தலைப்பில் நீங்கள் எழுதத் தொடங்க வேண்டும்.
அது எந்தத் தலைப்பாக வேண்டுமானாலும் இருக்கலாம். உதாரணத்துக்கு ஜோக்ஸ், சமையல் குறிப்பு, பயணம், நிதி இதுபோன்று எந்த ஒரு தலைப்பையும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
3. குறைந்தபட்ச சாத்தியமான தயாரிப்பு
மூன்றாவதாக என்ன செய்ய வேண்டும்? வேர்ட் ப்ரஸ் போன்ற வலைப்பதிவை ரூ.1,000 கொடுத்து, உங்களுடைய பெயரில் ஓர் இணைய முகவரி (க்ஷப்ர்ஞ்) ஒன்றை வாங்க வேண்டும்.
ஏனெனில் எழுதுபவருக்கென்று தனிப்பட்ட இணைய முகவரி இல்லையென்றால் அந்த வலைப் பக்கத்தில் விளம்பரங்களைப் பிரசுரிக்க முடியாது.
உங்களுக்கு வருமானம் விளம்பரங்கள் மூலமே கிடைக்கிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இந்த வலைப் பக்கத்தில் இருக்கும் சில விஷயங்கள் உங்களுக்குப் பரிச்சயமாக சில நாள்கள் ஆகும்.
கவலைப்படாமல் அதை கற்றுக் கொள்ள வேண்டும்.
4. சந்தைப்படுத்துதலைக் கற்க வேண்டும்
இணைய முகவரியைப் பெற்ற பிறகு எழுதக் கூடிய விஷயங்கள் பலரால் பார்க்கப்படாமல் போவதும் உண்டு. அப்படிப் பார்க்கப்படவில்லை என்றால், உங்களுடைய வலைப் பக்கத்தில் பிரசுரிக்கப்படும் விளம்பரங்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும்.
எனவே, ஏற்கெனவே பலரால் இயக்கப்படும் வலைப் பக்கத்தை நீங்கள் பார்த்து தொழிலைக் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் எவ்வாறு தங்களது வலைப் பக்கத்தை செயல்படுத்துகிறார்கள் என்பதைப் பார்த்து நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
5. எப்படிப் பணம் சம்பாதிப்பது?
இக்கால கட்டத்தில் புத்தகங்கள், தொலைக்காட்சிகள், படங்கள்
என்பனவற்றையெல்லாம் தாண்டி உங்களுடைய வலைப் பக்கத்தை பார்வையாளர்களைப் படிக்க வைக்க வேண்டும். அப்படி, உங்களுடைய வலைப் பக்கத்தை நோக்கி உங்கள் பார்வையாளர்களை நீங்கள் கொண்டு வந்து விட்டால், விளம்பரங்களை அவர்கள் காண நேரிடும். எத்தனைபேர் பார்த்தார்கள் என்பதைப் பொருத்து, அதன் மூலம், உங்களுக்கு வருமானம் கிடைக்கும். எனவே உங்களுடைய வலைப் பக்கத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...