நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

ரோபோ அல்ல; இது ரூம்போட்

கைகளையும், கால்களையும் மெதுவாக அசைத்து அசைத்து நடந்து வருவதுதான் ரோபோ என்று நம்மில் பலர் இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அந்த

Published On :

கைகளையும், கால்களையும் மெதுவாக அசைத்து அசைத்து நடந்து வருவதுதான் ரோபோ என்று நம்மில் பலர் இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அந்த வடிவத்தைத் தவிர பல்வேறு வடிவங்களில் ரோபோக்கள் நம்மைச் சுற்றி தற்போது இயங்கி வருகின்றன.

அந்த முன்னேற்றத்தில் தற்போது நாற்காலிகளாகவும், மேசைகளாகவும் உருமாறும் புதிய ரோபோ ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஆய்வகம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை வீட்டில் பயன்படுத்தலாம் என்பதால் இதற்கு "ரூம்போட்' என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த ரூம்போட்களை வாங்கினாலே போதும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரின் உயரத்துக்கு தகுந்தவாறு ஓர் உத்தரவில் அதை நாற்காலியாக மாற்றி அமைத்துக் கொள்ளலாம். இந்த வசதி மேஜைக்கும் பொருந்தும். ஆக்டோஜன் வடிவத்தில் (பரமபதம் விளையாட்டில் உருட்டி விடும் கட்டை) இந்த ரோபோ உள்ளது. அதன் எடை சுமார் 1.3 கிலோ. வாகனம் நகர்வதுபோல, மெதுவாக நகரும் தன்மை கொண்ட இந்த ரோபோ, அதே வடிவில் உள்ள மற்றொரு ரோபோவுடன் இணைந்து நாற்காலியாகவும், மேஜையாகவும் வடிவம் பெறுகிறது.

பல்லியைப் போல, இந்த ரோபோ சுவரில் ஏறி ஒட்டிக் கொள்ளுமாம். அதனால் நாற்காலியோ, மேஜையோ வீட்டின் இடத்தை அடைத்துக் கொள்கிறது என்று முணுமுணுப்பு இனித் தேவைப்படாது. பயன்பாடு இல்லாதபோது, இந்த ரோபோக்களைச் சுவரில் ஏற்றி விடலாம். உறவினர்கள் வந்தால், அவர்களை வரவேற்பதுபோல, இந்த ரோபோக்களையும் வரவேற்று அதில் அவர்களை உட்கார வைக்கலாம்.

இந்த ரோபோக்களின் இயக்கத்தை இன்னும் வேகப்படுத்தும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். அன்றாட வாழ்வில் இந்த ரோபோ முழுமையாகப் பயன்பட இன்னும் சில ஆண்டுகளாகும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

பிரமிப்பை ஏற்படுத்தும் இந்த ரோபோக்கள் மூலம் நமது வீட்டையும் நாம் வடிவமைத்துக் கொள்ளும் நாளும் வெகு தொலைவில் இல்லை. அவ்வாறு ரோபோ வீடு உருவாகும்போது, வாஸ்து சரியில்லை என்று வீட்டை இடிக்கத் தேவையில்லை. ஓர் உத்தரவே போதும், வீட்டை மாற்றி அமைத்து விடலாம். காத்திருப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.