காற்றிலிருந்து நீர்!
"தூய்மையான நீர் உலகின் 78 கோடி மக்களுக்குக் கிடைப்பதில்லை; 34 லட்சம் மக்கள் ஒவ்வோராண்டும் மாசுள்ள நீரால் பலவித நோய்களுக்கு உள்ளாகிறார்கள்' என்று சொல்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை.


"தூய்மையான நீர் உலகின் 78 கோடி மக்களுக்குக் கிடைப்பதில்லை; 34 லட்சம் மக்கள் ஒவ்வோராண்டும் மாசுள்ள நீரால் பலவித நோய்களுக்கு உள்ளாகிறார்கள்' என்று சொல்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை.
தூய்மையான நீர் கிடைப்பதை எளிதானதாக மாற்றியிருக்கிறது இஸ்ரேல் நாட்டில் உள்ள வாட்டர் ஜென் நிறுவனம். அது "ஜீனியஸ் ஹீட் எக்ஸ்சேஞ்சர்' என்ற இயந்திரம் ஒன்றைத் தயாரித்து உள்ளது. அந்த இயந்திரம் ஈரப்பதமுள்ள காற்றில் உள்ள நீரைப் பிரித்து, இயந்திரத்தில் உள்ள ஒரு சிறிய டேங்கில் சேமிக்கிறது. பிறகு எக்ஸ்டென்சிவ் வாட்டர் ஃபில்ட்ரேஷன் சிஸ்டத்தின் மூலமாக நீரைத் தூய்மைப்படுத்தி நல்ல நீராக மாற்றிவிடுகிறது. ""மழை பெய்யவில்லையே... நிலத்தடி நீர் 300 அடிக்கும் கீழே போய்விட்டதே'' என்று இனிமேல் கவலைப்படத் தேவையில்லை.
""காற்றில் உள்ள ஈரப்பதத்தைப் பிரித்து நீராக மாற்றுவது ஒன்றும் புதிய விஷயமில்லை. எல்லா குளிர்சாதனப் பெட்டிகளும் அந்த வேலையைத்தான் செய்து வருகின்றன. என்றாலும், மிகக் குறைந்த செலவில் காற்றிலிருந்து நீரைப் பிரித்து எடுத்துத் தூய்மையான நீராக மாற்றுவது இந்த இயந்திரம் மட்டும்தான்'' என்கிறார் இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆர்யே கோஹவி.
1 லிட்டர் தூய்மையான தண்ணீர் தயாரிக்க ரூ.10 இப்போது செலவாகிறது என்றால், இந்த இயந்திரத்தின் மூலம் பத்து மடங்கு குறைவாக அதாவது ரூ.1 செலவில் தூய்மையான நீரைத் தயாரிக்க முடியும் என்கிறார்கள் வாட்டர் ஜென் நிறுவனத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...