ஆலோசனை பெற...!
இன்று சட்டப் பிரச்னையா? வக்கீலிடம் ஆலோசனை. உடல் நலமின்மையா? டாக்டரிடம் ஆலோசனை. கல்வி பயில துறை சார்ந்தவர்களிடம் ஆலோசனை என்று வாழ்வில் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஆலோசனை அவசியம்.


இன்று சட்டப் பிரச்னையா? வக்கீலிடம் ஆலோசனை. உடல் நலமின்மையா? டாக்டரிடம் ஆலோசனை. கல்வி பயில துறை சார்ந்தவர்களிடம் ஆலோசனை என்று வாழ்வில் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஆலோசனை அவசியம். அதுபோல் தொழில் தொடங்க, மார்க்கெட் செய்ய, ஏற்றுமதி செய்ய ஆலோசனை பெறுவது அவசியத் தேவை. 1960-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய அரசின் ஆலோசனை மேம்பாட்டு மையத்தின் நோக்கங்கள்:
1. தொழில் ஆலோசனை வழங்குதல்; தொழில் வளர பணிபுரிதல்
2. அரசு நிறுவனங்கள், ஆலோசனை நிறுவனங்களில் ஆலோசனைகளைக் கேட்டு முடிவு செய்ய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
3. தொழில் ஆலோசகர்கள் / வல்லுநர்கள் / ஆலோசனை நிறுவன புள்ளிவிவரங்களைத் தொகுத்தல்
4. தகவல் களஞ்சியமாக "மார்க்கெட்' துறைக்கு உதவுதல்
5. இண்டர்நேஷனல் நிதி நிறுவனத் தகவல்களைத் தொகுத்தல்
6. புதிய துறைகளை, தேவைகளைக் கண்டறிந்து ஆலோசகர்களை உருவாக்குதல்.
7. ஆலோசனை நிறுவனங்களுக்கு உதவிகள்
8. தேசிய, மாநில அளவில் ஆலோசனைத் துறையை வளர்த்தல்
9. இந்திய ஆலோசகர்களுக்குப் பயிற்சி அளித்தல்
10. விஞ்ஞான / தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை மேம்படுத்துதல்
இதன் திட்டங்கள்:
1. ஆலோசனைத் துறையை பயிலும் மாணவர்களுக்கு நிதி உதவி (ரூ.20,000)
2. பல்துறை ஆராய்ச்சிகளுக்கு உதவி வழங்குதல்.
இது கல்லூரிபோல் செயல்பட்டு M.B.A. (ஆலோசனை நிர்வாகம்), சான்றிதழ் (நிர்வாக கன்ஸல்டன்ஸி / தொழில்நுட்ப கன்ஸல்டன்ஸி) என இரு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஏராளமான புத்தகங்களை, ஆலோசனை எனும் மாத இதழை வெளியிடுகிறது. பல நாட்டு பெரிய நிறுவன சேவைகளைப் பயன்படுத்துகிறது. இந்திய அரசின் முக்கிய இலாகா அனைத்தும் இந் நிறுவன ஆலோசனைகளைப் பெறுகின்றன.
பிர்லா தொழில் நுட்ப நிறுவனத்துடன் 1995ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்து, ங.ந. (ஆலோசனை நிர்வாகம்) எனும் படிப்பைக் கற்றுத் தருகிறது. மாநில அரசுகளின் ஆலோசனை நிறுவனங்களுக்கு உதவுகிறது.
ஏன் ஆலோசனை பெற வேண்டும்? என்ன விஷயத்திற்கு யாரை அணுக வேண்டும்? என ஆலோசனைத் துறை பல விளக்கங்களை மக்களுக்கு அளிக்கிறது.
புதுதில்லியில் 4 நாள்கள் (குறுகிய கால) பயிற்சிகளை நடத்துகிறது. "நிர்வாக ஆலோசனை' எனும் சான்றிதழ் வழங்கப்படும். இந்நிறுவனம் பற்றி அறிய http://www.cdc.org.in என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
முகவரி:
Consultancy Development centre (Govt.of India)
Core 4B 2nd Floor,
Habitat Centre Lodhi Road,
New Delhi 110 003, New Delhi.
Tel: 91 11 24602601
Fax: 91 11 24602602.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...