புதிது புதிதாய் வடிவமைக்கலாம்!
தற்போது இந்த ஆடை தயாரிப்பது என்பது, துணியை வெட்டி ஆடை உருவாக்குவது என்பதிலிருந்து விலகி, அதாவது தையல் தொழில் என்பதிலிருந்து விலகி, வடிவமைப்பு என்ற நிலைக்கு வந்துவிட்டது.


தற்போது இந்த ஆடை தயாரிப்பது என்பது, துணியை வெட்டி ஆடை உருவாக்குவது என்பதிலிருந்து விலகி, அதாவது தையல் தொழில் என்பதிலிருந்து விலகி, வடிவமைப்பு என்ற நிலைக்கு வந்துவிட்டது. வெட்டி, தைப்பது என்பதே ஆடை தயாரிப்பில் அடிப்படையாக இருந்த நிலை மாறி வடிவமைப்பிற்காக வெட்டுவதும் தைப்பதுமாக மாறிவிட்டது. எனவே தற்போது ஆடை வடிவமைப்பு என்பதில் கற்பனை வளம், தற்போதைய நிலை மற்றும் தேவை போன்றவையே அடிப்படையாக மாறிவிட்டது.
நிகழ்வு,காலம், நேரம், ஆட்கள் போன்ற பல்வேறு நிலைகளுக்கு ஏற்ப இந்த ஆடை வடிவமைப்பு மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, ஆண்கள் ஆடை, பெண்கள் ஆடை என்று குறிப்பிடப்பட்டாலும் அதில் பல பிரிவுகள் வந்துவிட்டன. காலையில் அணிவதும், மாலையில் அணிவது, இரவில் அணிவது, என்று ஒருநாளின் பல நேரங்களில் அணிவதற்கான ஆடைகள் மட்டுமல்லாது, அணிபவரின் வயதுக்கு ஏற்றாற்போல, செயல்படும் தன்மைக்கு ஏற்பவும் ஆடைகள் வடிவமைக்கப்
படுகின்றன. படிக்கச் செல்லும்போது அணிவது, விளையாடுவதற்கான ஆடைகள், நீச்சலுக்கான ஆடை, நடைபயிற்சிக்கான ஆடை என்று பல்வேறு வகைகளில் ஆடை வடிவமைப்பு மேற்கொள்ளப்படுகிறது.
இவை தவிர, சிறப்பு அலங்காரங்கள், நிகழ்வுகளுக்காகத் தனித்துவமான வடிவமைப்பில் ஆடைகள் உருவாக்கப்படுகின்றன. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, மணமக்கள் அலங்காலம், விளம்பரங்களில் நடிப்பதற்கான ஆடை, நடன நிகழ்வு, நாடகம் போன்றவற்றிற்கான ஆடை வடிவமைப்பு என்று பல்வேறு நிலைகள் வந்துவிட்டன.
இப்படி ஒவ்வொரு நிலைக்கும் ஏற்றபடியான ஆடைகள் அணிவது அதிகரித்து வருவதால், ஆயத்த ஆடை விற்பனை புதிய பரிமாணம் பெற்றுள்ளது. அத்துடன் தனித்துவமான ஆடைகளைத் தயாரித்துக் கொடுப்பவர்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. துணி தைப்பவர் (டெய்லர்) தேவை என்ற நிலை மாறி, ஆடை வடிவமைப்பாளர் என்ற தேவையாக அது மாறிவிட்டது.
ஆடை வடிவமைப்புத்துறையில் இரண்டுவிதமான வாய்ப்புகள் கிடைக்கின்றன. பெரிய ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் தனித்துவமான ஆடைவடிவமைப்பாளர்களுக்கு நல்ல பணிகள் உள்ளன. அல்லது சொந்தமாக சிறிய அளவில் ஆடை வடிவமைப்பாளராக சொந்தத் தொழிலாகத் துவங்கி நடத்தலாம். இரண்டு நிலைகளிலுமே அதிக ஈடுபாடு, அன்றன்றைய நிலையினை அறிந்து வைத்திருப்பது, துணிகளின் தன்மை, தேவை போன்றவை பற்றிய அறிவு, வண்ணங்கள் பற்றிய முழுமையான செயல்முறை பட்டறிவு போன்றவை தகுதிகளாக உள்ளன. ஒரு சிறந்த ஆடை வடிவமைப்பாளராகச் செயல்படுவது எப்படி? என்பதை
இவை தவிர, சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல நகரங்களில் ஃபேஷன் டிசைனிங் என்பதைச் சொல்லிக் கொடுக்கும் பல தனியார் நிறுவனங்களும்,பயிலகங்களும்,பள்ளிகளும், கல்லூரிகளும் செயல்படுகின்றன. இங்கு ஃபேஷன் டிசைனிங் என்பது சான்றிதழ், பட்டயம், பட்டம், பொறியியல் பட்டம் போன்ற பல்வேறு படிப்புகளாகச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. பயிலகங்கள் பற்றிய மேலதிகத் தகவல்களை tamil-nadu-state/ என்ற வலைத்தளத்தில் காணலாம். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் இளம் அறிவியல் மற்றும் முது அறிவியல் படிப்பாக (B.Sc., & M.Sc., in Apparel and Fashion Design) சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஆடை வடிவமைப்பு என்பது குறிப்பாக பெண்களுக்கான நல்ல படிப்பாகவும், துறையாகவும் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...