வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

நெசவாளர்களுக்குப் பயிற்சி!

இன்று தமிழ்நாடு விசைத்தறி, கைத்தறி துணிகள் உற்பத்தியில் நாட்டின் சிறந்த இடத்தைப் பிடித்துள்ளது.

News image
Updated On :9 பிப்ரவரி 2016, 12:25 pm

இன்று தமிழ்நாடு விசைத்தறி, கைத்தறி துணிகள் உற்பத்தியில் நாட்டின் சிறந்த இடத்தைப் பிடித்துள்ளது. எனவே நெசவாளர்களுக்கு வழிகாட்டிட, நவீன தொழில் நுட்பங்களைக் கற்றுத் தர, கம்ப்யூட்டர் டிசைனிங் பற்றி தறியாளர்களுக்குப் பயிற்சி தர, இந்திய அரசு இந்த சென்டரை சென்னையில் உருவாக்கியுள்ளது. உலக அரங்கில் கைத்தறியின் சிறப்பைக் கொண்டு செல்ல இது உதவுகிறது.

பணிகள்:

1. டிசைன், தொழில்நுட்பம், நெய்தல் / டையிங் / பிரிண்டிங் மேம்பாட்டுக்கு உதவுதல்.

2. டிசைன் எக்ஸிபிஷன் நடத்துதல்

3. பயிற்சிகள் அளித்தல்.

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள கைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு உதவுதல், ஏற்றுமதிக்கு ஆலோசனை வழங்குதல் ஆகிய பணிகளையும் செய்கிறது.

டிசைன் செக்ஷன், வீவிங், டையிங் லேப், பிரிண்டிங் பிரிவு, போட்டோகிராபி பிரிவு என்று பல பிரிவுகள் மூலம் தறியாளர்களுக்கு உதவுகிறது. மார்கெட்டிங் உதவி, ஆலோசனை, ஆராய்ச்சி என அனைத்து உதவிகளையும் கைத்தறித் துறைக்கு வழங்கி வருகிறது.

முழு தகவல்கள் பெற:

நெசவாளர்கள் சர்வீஸ் சென்டர், ஜவுளித் துறை, இந்திய அரசு, C.1.B, ராஜாஜி பவன், பெசன்ட் நகர், சென்னை - 90. தொலைபேசி எண்: 044 - 2491 7964.

பார்க்க வேண்டிய இணையதளங்கள்:

www.handlooms.nic.in.

texmin.nic.in

wscchnai@md5.vsnl.net.in

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.