அங்கிகளில் சேமிப்பு, நடப்புக் கணக்கு வழக்குகளைச் சரியாக மேற்கொண்டு, வங்கி அலுவலர்கள், ஊழியர்களிடம் நல்ல முறையில் நட்பை ஏற்படுத்திக் கொண்டால் எளிதாக வங்கிக் கடனைப் பெறலாம்.
நல்ல வசதியான தொழில் முனைவோர்களுக்கு முதலீடு எளிதானது. ஆனால், நடுத்தர, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும், முதலீடு என்பது சிரமம்தான்! வங்கியில் கடன் பெறத் தினம்தோறும் அலைய வேண்டியிருக்கிறது. வங்கியில் தொழில் தொடங்கக் கடன் கேட்பதற்கு முன்பு நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன.
கடன் கோரி அணுகினால் வங்கி அலுவலர்கள் கேட்கும் முதல் கேள்வி "கணக்கு தொடங்கி எத்தனை ஆண்டுகள் ஆகிறது. கணக்கு எண் சொல்லுங்கள். பார்க்கலாம்' என்பதுதான்!
எனவே, வங்கியில் கணக்குத் தொடங்கி பரிவர்த்தனை செய்யுங்கள். தொழில் முனைவோர் தொடங்க இருக்கும் தொழிலின் பெயரில் வங்கியில் கணக்கு துவங்கி, தங்களது சொந்த முதலீட்டு பங்குத் தொகையை அந்த கணக்கில் செலுத்தி தொழிலுக்கான நடவடிக்கைகளைத் தங்குத் தடையின்றித் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
அன்றாட வருவாயை வங்கியில் செலுத்தி, பணப் பரிமாற்றம் மேற்கொள்ள வேண்டும். வங்கியின் அலுவலர்களைச் சந்தித்து, தங்களது தொழில் வளர்ச்சி, மேம்பாடு, கணக்கில் இருப்பு நிலவரம் குறித்துத் தெரியப்படுத்த வேண்டும். இதுதவிர, வங்கியில் இயன்ற அளவுக்கு முதலீட்டுத் திட்டங்களில் சேமிப்பைத் தொடரலாம்.
பின்னர் கடனுதவி கோருவது நன்று. அப்போது, கடனுதவிக்கான திட்ட அறிக்கை, ஆவணங்கள், தொழில் சம்பந்தமான தகவல்கள் அளிக்கும்போது கடனுக்கு "பச்சைக் கொடி' காட்டப்படும்.
கடன் பெற்றுவிட்டு குறித்த காலத்தில் விரைவாகச் செலுத்துவது, கூடுதலாக கடன் பெறவும், மீண்டும் கடன் பெறவும் நல்ல அணுகுமுறை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் மிருணாள் தாக்குர்!
வென்று வா தலைவா... தவெக தலைவர் விஜய்க்கு நடிகர் சிபி சத்யராஜ் கடிதம்!

ஜெயிலர் - 2 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டி கொண்டாட்டம்!

தமிழ்நாட்டில் ஒன்றுமில்லாத பாஜகவுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்! கேஜரிவால்
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


