கல்லூரியில் படிப்பவர்களாகட்டும், வேலை கிடைத்து வீட்டைப் பிரிந்து வாழ்பவர்களாகட்டும் அவர்கள் விடுதியில் தங்கித்தானாக வேண்டும். விடுதியில் தங்கி வாழ நேர்ந்ததைப் பற்றி வருத்தப்படாமல், அதையும் மகிழ்ச்சிகரமானதாக மாற்றிக் கொள்வது எப்படி? இதோ சில பயனுள்ள டிப்ஸ்:
வீட்டில் இருந்த மாதிரி இனிமேல் இருக்க முடியாது. பொருட்களைக் கண்ட இடத்தில் போடுவது; துணிகளை அங்கங்கே வீசி எறிவது; நினைத்த சமயத்தில் உண்பது போன்ற பழக்க வழக்கங்களை மாற்றி, எதிலும் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடியுங்கள்.
நீங்கள் மிகவும் தனிமை விரும்பி ஆக இருந்தால், அதை மாற்றிக் கொள்ள வேண்டும். ஹாஸ்டலில் அது சரிப்பட்டு வராது. ஓரளவாவது கலகலப்பாக மாற முயற்சி செய்யுங்கள். ஒத்த ரசனையுள்ளவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள்.
இந்தக் காலத்தில், செல்போன், வங்கி அட்டைகள், பிற தொலைத்தொடர்பு சாதனங்கள் ஆகியவை நிறைய புழக்கத்தில் இருக்கின்றன. எனவே உங்கள் ஐ.டி., பாஸ்வேர்டு இவற்றில் எச்சரிக்கை தேவை.
உற்சாக மிகுதியில் பிற ஆசிரியர்கள் அல்லது மாணவ, மாணவிகள் இவர்களைப் பற்றி தேவையில்லாத வம்பு பேசாதீர்கள். ஏனெனில், அது உங்களையே திருப்பித் தாக்குவதற்கான வாய்ப்புள்ளது.
உணவுப் பழக்கவழக்கங்களைக் கண்டிப்பாக மாற்றிக் கொண்டுதானாக வேண்டும். வீட்டிலிருக்கும்போது "இன்ன காய்கறிகள்தான் பிடிக்கும். காரம் குறைவாக இருக்க வேண்டும்' என்றெல்லாம் ஆணையிடலாம். ஆனால், விடுதியில் முடியாது. சைவமோ, அசைவமோ எதுவாயிருந்தாலும் போட்டதைச் சாப்பிடப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
என்னதான் நாளாவட்டத்தில், நல்ல நண்பன் கிடைத்தாலும் எல்லா ரகசியங்களையும் (அதாவது குடும்ப சமாசாரங்களை) பகிர்ந்து கொள்ளாதீர்கள். சிலவற்றை அந்தரங்கத்தில் வைத்துக் கொள்ளப் பழகுங்கள்.
சினிமாவுக்கோ, வேற்றிடத்துக்கோ செல்ல நேர்ந்தால் விடுதிப் பொறுப்பாளரிடம் முன்னதாகத் தெரிவியுங்கள். விடுதியின் விதிகளை முழுக்கத் தெரிந்து கொண்டு அதன்படி செயல்படுங்கள்.
இந்தக் காலத்தில் ஏதாவது சொன்னாலே பற்றிக் கொள்ளுகிற நிலை ஏற்பட்டு விடுகிறது. எனவே அரசியல், மதம், எந்தக் கட்சியை ஆதரிப்பவராக இருந்தாலும் சரி; தீவிர மதப் பற்றுள்ளவராக இருந்தாலும் சரி - பிறர் மனம் புண்படும்படி ஏதும் சொல்லாதீர்கள்.
மேலே குறிப்பிட்டவை பொதுவான அம்சங்கள்தான். நிபந்தனைகளும், விதிகளும் இடத்துக்கு இடம் வேறுபடக்கூடும். அந்தந்தச் சூழ்நிலை, இடத்துக்கேற்ப கணினியின் எழுத்துருபோல மாற்றிக் கொள்ளுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புளியங்குடியை தலைமையிடமாக கொண்டு தனி வட்டம்: உதயநிதி ஸ்டாலின்

ஆலங்குளம் அருகே நாய் கடித்து 8 போ் காயம்!

தென்காசி மாவட்டத்தில் 5,914 தபால் வாக்குகள் பதிவு

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான 2 - ஆம் கட்ட பயிற்சி வகுப்புகள்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


