புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பைண்டிங் செய்யலாம்!

கணினித் தொழில்நுட்பத்தின் வரவால் கடந்த 25 ஆண்டுகளில் அச்சுத்துறையின் முதல் நிலையான பிரீபிரஸ் எனப்படும் கணினி வரைகலைப் பகுதியில் உற்பத்தி என்பது அதிகரிக்கப்பட்டுவிட்டது.

News image
Updated On :15 பிப்ரவரி 2016, 12:55 pm

ஜெ. வீரநாதன்

கணினித் தொழில்நுட்பத்தின் வரவால் கடந்த 25 ஆண்டுகளில் அச்சுத்துறையின் முதல் நிலையான பிரீபிரஸ் எனப்படும் கணினி வரைகலைப் பகுதியில் உற்பத்தி என்பது அதிகரிக்கப்பட்டுவிட்டது. அதற்கு இணையாக அச்சிடும் பகுதியான பிரஸ் என்பதிலும் உற்பத்தி அதிகரிப்பு சாத்தியப்பட்டுவிட்டது. இன்றளவும் அச்சுத்துறையின் வேகத் தடையாக உள்ள பகுதி, பைண்டிங் செய்யும் பணியே. காரணம் பைண்டிங் வேலைக்கு அதிக அளவில் மனித உழைப்பு தேவைப்படுகிறது. ஆனால் தற்போது வேலைக்கு ஆட்கள் கிடைப்பது இல்லை என்ற நிலை பெரிய பிரச்னையாக உருவாகியுள்ளது.

விரைவான வடிவமைப்பு, வேகமான அச்சடிப்பு என்பன முடிந்து பைண்டிங் பகுதிக்கு அச்சிட்ட காகிதங்கள் வந்தால், அங்கு அவை குடிசையில் தேங்கி நிற்கும் நீர்போல நகராமல் நின்றுவிடுகின்றன.

அங்கு உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், பொருட்கள் இறுதி நிலையை அடைந்து வெளியேறுவது மிகக் குறைவாக நடைபெறுகிறது.

இதனால் ஒரே இடத்தில் ஒரு கூரையின் கீழ் எல்லாவற்றையையும் செய்வது என்பது மாறிவிட்டது.

பைண்டிங் என்பது அச்சகங்களிலிருந்து பிரிக்கப்பட்டு தனி இடங்களில் குழுக்களாகவும், தனி நபர்களின் ஈடுபாட்டாலும் நடத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் அச்சகதாரர்கள் தங்களது உற்பத்திப் பொருட்களை பைண்டிங் செய்வதற்காக வெளியே செயல்பட்டுவரும் பைண்டர்களுக்கு அனுப்பி வைப்பது வழக்கமாகிவிட்டது.

இதே நிலை பெரிய நகரங்களிலும் உள்ளது. இதனால் இந்த போஸ்ட் பிரஸ் எனப்படும் பகுதியில் சிறிது பயிற்சி எடுத்துவிட்டு செயல்படத் துவங்கினால் வேலை வாய்ப்பும், சுய தொழில் வாய்ப்பும் அதிகமாக உள்ளது. மிகுந்த கவனம், தரம் மற்றும் நேரந்தவறாமை என்பன இந்தப் பகுதியின் அடிப்படையாக அமைந்துள்ளன.

துவக்கத்தில் தங்கள் வீடுகளிலிருந்தபடியே கூட பைண்டிங் செய்து கொடுக்கலாம். ஒரு பத்துக்கு பத்து அறை இருந்தால் கூட போதும். காரணம், பைண்டிங் என்பதிலும் பல்வேறு செயல்கள் உள்ளன. பில் புத்தகங்களுக்கு வரிசை எண் அச்சிடுதல், எளிதாகக் கிழிப்பதற்காக பர்பரேட்டிங் என்று சொல்லப்படும் துளையிட்டுக் கொடுத்தல், அச்சிட்ட தாள்களை

பக்கங்கள் வருமாறு மடித்துக் கொடுத்தல், புத்தகங்களாகத் தைத்துக் கொடுத்தல், பின் அடித்துக் கொடுப்பது என்பன போன்ற மிகச் சிறிய முதலீட்டில் செய்யக்கூடிய வேலைகள் உள்ளன. இவற்றைச் சரியாகச் செய்து கொடுத்தாலே ஒரு நாளைக்கு தனியொருவர் தனது வீட்டிலிருந்தபடியே 300 முதல் 500 ரூபாய் வரையிலும் சம்பாதிக்கலாம்.

கூடுதலான இடம், கட்டிங் மெஷின் போன்ற இயந்திரங்கள் போன்றவற்றை நிறுவி செயல்பட்டால், தங்கள் பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள பெண்களுக்கு வேலை வாய்ப்பு தரும் அளவிற்கு ஒரு நல்ல தொழிலாக இதனை நடத்தலாம். துவக்கத்தில் தங்கள் பகுதிகளில் உள்ள அச்சகங்கள், பதிப்பகங்கள் போன்றவற்றை அணுகி வேலைகளைப் பெற்று முடித்துத் தரலாம். பெரிய அலுவலகங்கள், வழக்கறிஞர்கள் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் போன்றவற்றிலும் பல்வேறு வகையான பைண்டிங் வேலைகள் உள்ளன. தொடர்ந்து அவர்களைத் தொடர்பு கொண்டு வந்தால் அடுத்தடுத்து வேலைகளைப் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

புத்தகக் கட்டு வேலையை குடிசைத் தொழிலாக வீட்டிலேயும் செய்யலாம், தொழில்முறையாகப் பலரை வேலைக்கு அமர்த்தியும் செய்யலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.