வளர்ந்து வரும் பேக்கேஜிங் துறை!
இன்று எந்த ஒரு பொருளையும் தரமாகத் தயாரித்து, அழகிய வண்ண அட்டைப் பெட்டி அல்லது கவரில் பேக்கிங் செய்தால்தான் பாதுகாப்பாக அனுப்பி விற்க முடியும்.


இன்று எந்த ஒரு பொருளையும் தரமாகத் தயாரித்து, அழகிய வண்ண அட்டைப் பெட்டி அல்லது கவரில் பேக்கிங் செய்தால்தான் பாதுகாப்பாக அனுப்பி விற்க முடியும். பேக்கிங் நன்கு அமையாவிடில் பொருட்கள் கெட்டுப் போகும், உடைந்து போகும், விற்க முடியாது.
உள்நாட்டு வர்த்தகத்தில் மட்டுமல்ல, ஏற்றுமதிக்கும் பேக்கேஜிங் மிக மிகச் சிறப்பாக இருக்க வேண்டும். மதுரை, திருச்சி விமான நிலையங்களில் பூக்களை எவ்வளவு அருமையாகப் பேக்கிங் செய்து நேர்த்தியாக அனுப்புகின்றார்கள் என ஒருமுறை போய் பாருங்கள்.
சாதாரண பூ முதல் இயந்திரங்கள் வரை எப்படி பேக்கேஜிங் செய்வது என்பதை அறிந்திருந்தால் மட்டுமே முன்னேற இயலும். ஏற்றுமதி வணிகத்தில் எந்த ஒரு பொருளுக்கும் தரம் என்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அந்தப் பொருள்களுக்கான பேக்கிங்கும் மிக மிக முக்கியம். இன்றைய உலகில் பேக்கிங் என்பது ஒரு கலையாகத்தான் கருதப்படுகிறது. ஆயகலைகள் அறுபத்து நான்கிலும் சேர்க்கப்படாத ஒரு கலை, இந்த பேக்கிங் கலை.
பேக்கிங் முறைகள்:
நீங்கள் ஏற்றுமதி செய்யத் தேர்ந்தெடுத்துள்ளது எந்தப் பொருளாக இருந்தாலும் சரி, இறக்குமதியாளரைத் தொடர்பு கொள்வதற்கு முன் முதலில் அந்தப் பொருளைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இதில் அனைத்து விவரங்களையும் என்பது அந்தப் பொருளுக்கான பேக்கிங் முறையையும் சேர்த்துதான். ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு வகையான பேக்கிங் முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. எவ்வளவுதான் நீங்கள் பொருள்களைத் தரத்தோடு குறிப்பிட்ட காலத்திற்குள் அனுப்பினாலும், அவை சரியான முறையில் எவ்வித சேதமுமின்றி இறக்குமதியாளரைச் சென்றடைய வேண்டும். அதற்கு உங்களுக்கு பேக்கிங் பற்றிய அடிப்படை விவரங்கள் தெரிந்திருக்க வேண்டியது மிக அவசியம்.
சேதாரம்:
கண்ணாடியை அனுப்பினால் உடையாமல் போய்ச் சேர வேண்டும். காய்கறியை அனுப்பினால் அழுகாமல் போய்ச் சேர வேண்டும். அதுதான் பேக்கிங். அப்போதுதான் உங்களுக்கு குறிப்பிட்டபடி பணம் வந்து சேரும் இல்லையெனில் நீங்கள் அனுப்பிய பொருள்கள் சேதமடைந்து விட்டதாகக் கூறி இறக்குமதியாளர் ஒப்பந்தம் செய்த பணத்தைவிட குறைத்துதான் கொடுப்பார். மேலும், நீங்கள் அனுப்பிய பொருள்கள் அதிக அளவு சேதம் அடைந்திருக்கும் பட்சத்தில் அந்தப் பொருளை அவர் நிராகரிக்கக் கூட வாய்ப்புண்டு. அவ்வாறு ஏதேனும் நிகழும் பட்சத்தில் இழப்பு என்னமோ உங்களுக்குத்தான். ஏற்றுமதி வணிகம் என்றில்லாமல் எந்த ஒரு தொழிலிலும் இறங்குமுன் முதலில் அவற்றைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அதுதான் உங்களுக்கு எப்போதும் வெற்றியைத் தேடித்தரும். மற்றதைப் போலவே பேக்கிங் விஷயத்திலும் சற்றுக் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இந்திய பேக்கேஜிங் இன்ஸ்டிட்யூட்:
பொதுவாக நீங்கள் அனுப்பிய போதும் பொருள்களுக்கான பேக்கிங் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இறக்குமதியாளரே வரையறுத்தி விடுவார். இருப்பினும் நீங்கள் எந்த முறையில் பேக்கிங் செய்யப் போகிறீர்கள் என்பதைக் கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் உங்களது பொருளை எந்தவித சேதமுமின்றி உங்களது இறக்குமதியாளருக்கு நீங்கள் அனுப்ப முடியும். நமக்கு உதவுவதற்காகவே நமது இந்திய அரசால் உருவாக்கப்பட்டிருக்கும் ஓர் அமைப்புதான் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பேக்கேஜிங். நீங்கள் ஏற்றுமதி செய்யத் தேர்ந்தெடுத்துள்ள எந்தப் பொருளானாலும் சரி, அந்தப் பொருளைச் சரியான முறையில், சரியான அளவில் எப்படி பேக்கிங் செய்வது? என்பதைப் பற்றிய அனைத்து விவரங்களையும் நீங்கள் இங்கு கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.
Indian Institute of Packaging (IIP), Plot no. 169, Industrial Estate, 2nd Main Road, Burma Colony Perungudi, Chennai - 600096, Tel : 91 - 044 - 2496 0730 / 2496 1560, Mobile : 93821 99089; website: www.iip-in.com
இங்கு பல பயிற்சிகளும் வழங்கி ஆலோசனை தருகின்றனர். இயந்திர விவரம், தகவல்களையும் பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...