ரகசிய விமானம்!
அமெரிக்க - ரஷிய நாடுகளிடையே போட்டி பல நிலைகளில் நடைபெற்று வருகிறது. இது விண்வெளித் துறையில் வெளிப்படையாகத் தெரிகிறது.


அமெரிக்க - ரஷிய நாடுகளிடையே போட்டி பல நிலைகளில் நடைபெற்று வருகிறது. இது விண்வெளித் துறையில் வெளிப்படையாகத் தெரிகிறது.
வெகு உயரத்தில் விமானம் பறந்தாலும் ராடார் கருவி மூலம் அதை அறிந்து கொள்ள முடியும். ராடார் கருவியால் கண்டுபிடிக்க முடியாத ரகசியப் போர் விமானம் ஒன்றை அமெரிக்கா தயாரித்தது. அதற்கு எஃப்-22 ரேப்டர் என்ற பெயரைச் சூட்டியது. இது 2005-ஆம் ஆண்டில் விண்ணில் பறந்தது. இதை அறிந்து உலகம் வியந்தது.
ரஷியாவும் ஆராய்ச்சியில் இறங்கியது. அதுவும் அண்மையில் முதல் ரகசிய விமானத்தை உருவாக்கியது. அதற்கு டி-50 ரகசியப் போர் விமானம் என்ற பெயரைத் தந்தது. பின்பு ரஷியாவும் இந்தியாவும் இணைந்து 2015-இல் சுகாய் டி-50 ரகசியப் போர் விமானத்தை உருவாக்கின. அமெரிக்கா அமைதியாக இருக்கவில்லை அது தற்போது எஃப் 35 இணைந்து தாக்கும் போர் விமானம் என்பதைத் தயாரிக்கும் முயற்சியில் முனைப்பாக ஈடுபட்டுள்ளது.
ராடாரின் அலைகள் விமானத்தின் மேல் பட்டுத் திரும்பி வரும். அது விமானத்தைக் கண்டறிந்து காட்டும். ஆனால் இந்த ரகசிய விமானங்களில் ராடார் அலைகளைச் சிதறடிக்கும் முறையில் மேற்புறத்தின் வடிவு அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே, அதன் இருப்பிடத்தை ராடார் கண்டு உணர்த்த முடியாது. அமெரிக்க ரகசிய விமானத்தின் நீளம் 18.9 மீட்டர் ரஷிய - இந்திய ரகசிய விமானத்தின் நீளம் 22 மீட்டர். முன்னது பறந்து செல்லக்கூடிய தூர அளவு 2960 கி.மீ. பின்னது பறந்து செல்லக்கூடிய தூர அளவு 5,500 கி.மீ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...