தமிழ்நாட்டில் திறந்தவெளிப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மணியம் பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரிகள் திட்டம் போன்ற பல நிறுவனங்கள் தொழில் முனைவோருக்கும், மாணவர்களுக்கும் கொடுத்து வரும் ஏராளமான பயிற்சிகள் பற்றி அறிந்திருக்கிறோம்.
தேசிய திறந்தவெளிப் பள்ளி (National Institute of Open School) எனும் பிரும்மாண்டமான நிறுவனம், முற்றிலும் மத்திய அரசின் மனித வளத் துறையின் கீழ் வரும் அரசு நிறுவனமாகும். உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த நிறுவனம் தொடாத பாடத் திட்டங்களே இல்லை.
1. ஹோம் சயின்ஸ், கம்ப்யூட்டர், மருத்துவம், நூலக அறிவியல் என ஏராளமான டிப்ளமோ / சான்றிதழ் படிப்புக்கள்.
2. விவசாயம், கால்நடை வளர்ப்பு, காளான், சணல் உற்பத்தி என ஏராளமான விவசாயம் சார்ந்த சான்றிதழ் படிப்புக்கள்.
3. இ - டைப்பிங், நவீன செயலாளர், இன்சூரன்ஸ் என பொதுவான பயிற்சிகள்.
4. அலுவலக நிர்வாகம், கம்ப்யூட்டர், வெப் டிசைனிங், டி.டி.பி, ஹார்டுவேர் பயிற்சிகள்.
5. வீட்டு வயரிங், எலக்ட்ரிக்கல் பொருட்கள் சர்வீஸிங், நான்கு சக்கர வாகன சர்வீஸிங் எனப் பல இன்ஜினீயரிங் சார்ந்த பயிற்சிகள்.
6. டூவீலர், ஏ.சி., ஏர்கண்டிஷன் மெக்கானிக், ரேடியோ / டேப் ரிப்பேரிங் எனப் பல எலக்ட்ரானிக் பயிற்சிகள்.
இந்நிறுவனம் அஞ்சல் வழிக் கல்வி நிறுவனமானாலும், முதலில் பாடப் புத்தகங்களை அனுப்பிய பின், நாடு முழுவதும் உள்ள அதன் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் பயிற்சி வகுப்புகள், நேரடிச் செய்முறைப் பயிற்சிகள், கருத்தரங்குகளை நடத்துகிறது. இந்திய அரசின் தொலைக்காட்சி நிலையமான தூர்தர்ஷனில் காலை 5 மணி முதல் பாடவாரியாக, பயிற்சிவாரியாக செய்முறை விளக்கப் பயிற்சியும் நடைபெறுகிறது.
இந்த மையத்தில் சேர 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு என குறைந்த படிப்பு படித்தவர்கள் சேரலாம். இங்கு தச்சுத் தொழில், வெல்டிங், இயற்கை எரிவாயு தொழில் நுட்பம், முடி வெட்டுதல், சுகாதாரம், டெய்லரிங், கேட்டரிங், குழந்தைகள் பராமரிப்பு என நூற்றுக்கணக்கான உடனே வேலை கிடைக்கக்கூடிய தரமான, அருமையான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சி பெற்று தொழில் தொடங்க விரும்புவோருக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும்.
www.nios.ac.in வலைத்தளம் மூலமும், கீழ்க்கண்ட நேரடிப் பயிற்சி மையங்களிலும் முழு விவரமும், விண்ணப்பமும் பெறலாம்.
1. முதல்வர், அகஸ்தியசாமி தொழில் பயிற்சி நிலையம்,செல்லியம்மன் தேர் தெரு, மதுராந்தகம், காஞ்சிபுரம் மாவட்டம்.
2. முதல்வர், ஸ்பாஸ்டிக் சொசைட்டி, ஐடிஐ, தரமணி, சென்னை-116. தொலைபேசி: 044-22541651
3. சென்னை மாநகராட்சி கம்யூனிட்டி சென்டர், ஐடிஐ, சேப்பாக்கம், சென்னை - 5. 044-25384510.
4. முதல்வர், சி.பி.இராமசாமி அய்யர் பவுண்டேஷன், 1, எல்டாம்ஸ்ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-18. தொலைபேசி: 044-24353176
5. மார்க் அகாடமி, அரும்பாக்கம், சென்னை - 106. 044-23632601
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்சிபிக்கு எதிரான போட்டி! குஜராத்துக்கு 156 ரன்கள் இலக்கு!

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


