தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. இத்துறையின் பயிற்சிகளைப் பெற்றவர்கள் பெரிய பதவிகளில் உள்ளனர். மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள் பல விழிப்புணர்வுப் பயிற்சிகளை மக்களுக்குத் தந்து வருகின்றன.
தமிழ்நாட்டில் 20 கூட்டுறவு மேலாண்மை நிலையங்கள் உள்ளன. இங்கு நேரடிப் பயிற்சிகளும், பணியாளர்க்கு அஞ்சல் மூலமும் கூட்டுறவு மேலாண்மை (நிர்வாக) பயிற்சியை அளிக்கின்றன.
கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையங்களில், கம்ப்யூட்டர் உதவியாளர், நகை மதிப்பீட்டாளர், சமையல் கலை, தையல் கலை, மின் பொருட்கள் சர்வீஸிங், கைவினைப் பயிற்சி என பல சுய தொழில் பயிற்சிகள் நடைபெறுகின்றன.
1. பர்கூர் கூட்டுறவு தொழிற் பயிற்சி நிலையம், மாதா பள்ளி அஞ்சல், பர்கூர் -635704; 04343-265652.
2. பட்டுக்கோட்டை கூட்டுறவு தொழிற் பயிற்சி நிலையம், தாலுகா ஆபிஸ் எதிரில், பாளையம், தஞ்சாவூர் சாலை, பட்டுக்கோட்டை-614 602; 04373-223806.
3. திருச்சுழி கூட்டுறவு தொழிற் பயிற்சி நிலையம், எண். 5/158, திருப்புவனம் சாலை, திருச்சுழி-626 129; 0456- 282514.
கூட்டுறவுப் பயிற்சி மையங்களில் சமையல் கலை கற்றுத் தரப்படுகிறது. 20பயிற்சி மையங்களிலும் "சில்லறை விற்பனையாளர் விற்பனைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்' தரப்படுகின்றன. மேலும் கூட்டுறவு வார விழா நடத்துதல் இளைஞர் ஈர்ப்பு முகாம்கள் / உறுப்பினர்களுக்குப் பயிற்சி அளித்தல் எனப் பல பணிகளில் ஈடுபட்டு வருகிறது. நகை மதிப்பிடுதல், கூட்டுறவு - மேலாண்மை, சமையல் என பல பயிற்சிகள் அளிக்கும் கூட்டுறவு பயிற்சி மையங்களின் பட்டியல்:
1. வேலூர் கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண்.2, 1வது கிழக்கு குறுக்கு சாலை, காந்தி நகர், வேலூர் - 632 006; 0416-2242464
2. பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம், வந்தவாசி சாலை (மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில்), காஞ்சிபுரம்; 044-2723 7699
3. திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண்.204, திண்டிவனம் நெடுஞ்சாலை, நாவக்கரை, கீழ்நாச்சிப்பட்டி தபால், திருவண்ணாமலை - 606 602; 04175-254793
4. தருமபுரி கூட்டுறவு மேலாண்மை நிலையம், அரூர் தாலுகா. மொரப்பூர் - 635 305; 04346-263529
5. விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண்.2/1006, எல்லீஸ் சத்திரம் சாலை, வழுதரெட்டி, விழுப்புரம் -605 401; 04146-259467
6. டாக்டர் எம்.ஜி.ஆர் கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண்.3 கடற்கரை சாலை, மே/பா.சரவணபவா நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை வளாகம், கடலூர் - 607 001; 04142-222619.
7. நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண்.516, கடலூர் பிரதான சாலை, காமராஜ் நகர் காலனி, சேலம் - 636 014; 0427-2240944
8. ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையம் எண்.11, பவானி மெயின் ரோடு, வீரப்பச்சத்திரம் தபால், எஸ்.வி.மழலையர் பள்ளி வளாகம், 1வது தளம்,ஈரோடு - 638 004; 0424-2213666
9. இராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண்.57, அழகேசன் சாலை சாய்பாபா மிஷன் அஞ்சல், கோயம்புத்தூர் -641 011; 0422-2442186.
10. நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையம், மே/பா. நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க அலுவலக கட்டிட வளாகம், திருச்செங்கோடு ரோடு, நாமக்கல் - 637 001; 04286-280908
11. திருச்சிராப்பள்ளி கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண்.1, பழைய குட்ஷெட் ரோடு, அமராவதி கூட்டுறவு சிறப்பங்காடி வளாகம், திருச்சிராப்பள்ளி - 620 002 ;0431-2715748.
12. சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையம் மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர் - 613 007; 04362-238253.
13. திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையம் எண்.130, பள்ளிவாசல் தெரு, விஜயபுரம், திருவாரூர் - 610 001; 04366-227233
14. திண்டுக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையம் 3/367, பழனி ரோடு, பைபாஸ் ரோடு அருகில், திண்டுக்கல் - 624 001 ; 0451-2441460.
15. தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையம், தேனி வைகை விசைத்தறி கூட்டுறவுச் சங்க கட்டிட வளாகம், தேனி மெயின் ரோடு, ஆண்டிபட்டி தாலுகா ஆபீஸ்
எதிரில், ஆண்டிபட்டி - 625 512; 04546-244465
16. பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை நிலையம் திருநகர், மதுரை - 625 006; 0452-2482261.
17. சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையம் வாரச்சந்தை ரோடு, நகராட்சி கட்டிட வளாகம், பாரத் ஸ்டேட் வங்கி பின்புறம், சிவகங்கை - 630 561; 04575-243995.
18. தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை நிலையம், சிவசக்தி திருமண மண்டப வளாகம், ஏஸ்.ஆர்.நாயுடு நகர், சாத்தூர் - 626 203; 04562-260293
19. மேடை தளவாய் குமாரசாமி கூட்டுறவு மேலாண்மை நிலையம், உதயா நகர், அரசுப் பணியாளர் புதிய குடியிருப்பு, திருநெல்வேலி - 627 007; 0462-2552695.
20. நாகர்கோவில் கூட்டுறவு மேலாண்மை நிலையம், நாகர்கோவில் கூட்டுறவு வீட்டுவசதி சங்க வளாகம், கிரிஸ்டோபர் தெரு, நேசமணி நகர், நாகர்கோவில்-629 002; 04652-265132.
முழு விவரம் / பயிற்சி / தகவல் பெற:
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம், என்.வி.என்.மாளிகை, 170, பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ் சாலை, கீழ்பாக்கம், சென்னை - 10. தொலைபேசி: 044-2836 4865
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்சிபிக்கு எதிரான போட்டி! குஜராத்துக்கு 156 ரன்கள் இலக்கு!

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


