உயரமான கட்டிட வடிவமைப்புப் போட்டி!
உயரமான கட்டிடங்கள் மற்றும் நகர்ப்பகுதி வாழ்விடங்களுக்கான குழு (The Council on Tall Buildings and Urban Habitat - CTBUH) எனும் அமைப்பு, பன்னாட்டு


உயரமான கட்டிடங்கள் மற்றும் நகர்ப்பகுதி வாழ்விடங்களுக்கான குழு (The Council on Tall Buildings and Urban Habitat - CTBUH) எனும் அமைப்பு, பன்னாட்டு மாணவர்களுக்கான உயரமான கட்டிட வடிவமைப்புப் போட்டியினை (5th International Student Tall Building Design Competition) அறிவித்திருக்கிறது.
கட்டிடக்கலை தொடர்புடைய பாடங்களை முதன்மைப் பாடமாகக் கொண்டு 2015 - 2016 ஆம் கல்வியாண்டில் படித்துக் கொண்டிருக்கும் கல்லூரி மாணவர்கள், தனியாகவோ அல்லது ஐந்து நபர்கள் வரையிலான குழுவாகவோ இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர் குழுவினர் www.ctbuh.orgcompetition எனும் இணையதளத்திற்குச் சென்று, கல்லூரி மாணவர் என்பதற்கான அடையாள அட்டையினைப் ஸ்கேன் செய்து சமர்ப்பித்து முன்பதிவினைச் செய்திட வேண்டும். அதன் பிறகு, போட்டிக்குழு அமைப்பால் தனித்துவப் பதிவு எண் (Unique Registration Number) ஒன்று வழங்கப்படும். பின்னர், இந்தப் பதிவெண்ணுடன் போட்டியில் பங்கேற்பவர்கள் தங்கள் வடிவமைப்புகளைச் சமர்ப்பிக்கலாம். போட்டிக்காக முன்பதிவு செய்து கொள்ளக் கடைசிநாள்: 18-7-2016. போட்டிக்கான வடிவமைப்புகளைச் சமர்ப்பிக்க கடைசிநாள்: 25-7-2016.
போட்டிக்கான விதிமுறைகள்: போட்டிக்கான வடிவமைப்புகள் குறிப்பிட்ட நாடுகளின் நகரப்பகுதிகளை மையமாகக் கொண்டு, அங்கு உயரமான கட்டிடங்கள் கட்டப்படுவதற்கான அடிப்படைத் தகவல்களைக் கொண்டு சிறந்த வடிவமைப்பை உருவாக்க வேண்டும். வடிவமைக்கப்படும் உயரமான கட்டிடத்தில் குறைந்தது 50 சதவிகித உயரம் மக்கள் பயன்பாட்டிற்கான முழுமையான பகுதிகளாக இருக்க வேண்டும்.
வடிவமைப்புகள் அனைத்தும், உள்ளூர் பருவநிலை (Local Climate), அருகாமையிலுள்ள கட்டிடங்கள் (Neighboring Building), நகரத் தேவைகள் (City Requirements), சமுதாயத் தேவைகள் (Community Requirements), சமூக நீடிப்புத்திறன் (Social Sustainability), சுற்றுச்சூழல் நீடிப்புத்திறன் (Environment Sustainability), பொருள்களின் பயன்திறன், இடைவெளி மற்றும் பயன்பாடு (Efficiency of Materials, Space and Usage),கலைநயம் (Aesthetics), விகிதசமம் (Proportion), உள்ளூர், சமூக மற்றும் பண்பாட்டுக் கட்டுப்பாடுகள் (Local, Social and Cultural Conditions), பொருட்பாடு (Materiality), புதியத் தொழில்நுட்பங்கள் (New Technologies), அமைப்பு (Structure), நெகிழ்வுத்திறன் (Adaptability), இடம்பெயராற்றல் (Mobility), உள்கட்டமைப்பு (Infrastructure) போன்றவற்றை உள்ளடக்கியதாக அமைய வேண்டும். அ1 (841mm x 594mm) அளவிலான தாளில் படுக்கைவசத்தில் (Horizontal) திட்டத்தின் பெயர் (Title of Project), திட்டத்தின் கருது கோள் (Project Concept) வரை,படம் (Diagrams), திட்டம் (Plan), குறுக்குவெட்டுத் தோற்றங்கள் (Sections), இயலுறு தோற்றங்கள் (Perspectives) போன்றவற்றை உள்ளடக்கி அமைக்கப்பட வேண்டும். இந்த அமைப்பு பிடிஎஃப் ஃபைலாக மாற்றம் செய்யப்பட்டு அனுப்பப்பட வேண்டும். இத்துடன், வடிவமைப்பு குறித்த கருத்தினை 500 சொற்களுக்கு அதிகமாகாமல் } ஒரு பக்கத்திற்கு அதிகமாகாத வேர்டு ஃபைலாக உருவாக்கி அனுப்ப வேண்டும், இந்த இரண்டைத் தவிர, வேறு எந்த விளக்கக் கோப்புகளையும் இணைக்கக் கூடாது. எண்ணிம (Digital) வடிவத்திலான கோப்புகள் மட்டுமே ஏற்கப்படும். இந்தக் கோப்புகளில் போட்டிக்குழு அமைப்பால் வழங்கப்பட்ட தனித்துவப் பதிவு எண் (Unique Registration Number)இருக்க வேண்டும்.

தேர்வு முறை: இப்போட்டியில் பங்கேற்கும் வடிவமைப்புகளில் குறிப்பிட்ட சில வடிவமைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, அரையிறுதிப் பட்டியலாக 8-8-2016 அன்று வெளியிடப்படும். அதன் பின்னர், அந்தப்பட்டியலிலிருந்து ஐந்து வடிவமைப்புகள் தேர்வு செய்யப்பட்டு 18-8-2016 அன்று வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்ட ஐந்து வடிவமைப்புகளுக்கான நபர்கள்/குழுவினர் 17-10-2016 முதல் 21-10-2016 வரை ஹாங்காங்கில் நடைபெறும் உயரமான கட்டிடங்கள் மற்றும் நகர்ப்பகுதி வாழ்விடங்களுக்கான குழுவின் Council on Tall Buildings and Urban Habitat - CTBUH) 2016 ஆம் ஆண்டுக்கான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்படுவர்.
அழைக்கப்படுபவர்களுக்கு விமானக்கட்டணம், தங்குமிடம் போன்ற செலவுகளுக்காக அமெரிக்க டாலர் 3000 மட்டும் உதவித்தொகையாக அளிக்கப்படும். இந்த மாநாட்டில் அவர்களது படைப்புகள் குறித்த விளக்கத்திற்குப் பின்னர் பரிசுக்குரிய வடிவமைப்புகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.
பரிசுகள்: இப்போட்டியில் முதலிடம் பெறுபவருக்கு 3000 அமெரிக்க டாலர், இரண்டாமிடம் பெறுபவருக்கு 2000 அமெரிக்க டாலர், மூன்றாமிடம் பெறுபவருக்கு 1000 அமெரிக்க டாலர் பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழ்களும் அளிக்கப்படும். மேலும், குறிப்பிடத்தக்கதாகக் கருதப்படும் வடிவமைப்புகளுக்கு இந்த அமைப்புப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கும்.
இப்போட்டி குறித்த கூடுதல் செய்திகளை அறிய: http:www.ctbuh.orgDefault.aspxaliaswww.ctbuh.orgcompetition எனும் இணையதள முகவரிக்குச் செல்லலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...