தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

முகநூலில் புதிய "ஸ்னூஸ்' வசதி!

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதைப்போல், இன்றைய இணையதள சேவைகளில் அளவை மிஞ்சிய தேவையில்லாத தகவல்கள் படிப்பவர்களின் நேரத்தை வீணடிக்கின்றன.

News image
Updated On :26 டிசம்பர் 2017, 2:00 pm

அ. சர்ஃப்ராஸ்

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதைப்போல், இன்றைய இணையதள சேவைகளில் அளவை மிஞ்சிய தேவையில்லாத தகவல்கள் படிப்பவர்களின் நேரத்தை வீணடிக்கின்றன. மூளையைச் சோர்வடையச் செய்கின்றன.
வாட்ஸ் அப், முகநூல்களில் (ஃபேஸ் புக்) தனி உறுப்பினர்களாக வலம் வந்த காலம் மாறி தற்போது குரூப்களாக செயல்படுகின்றனர்.
இதனால் பிறருடைய தகவல்களைத் தேடிப்போய் பார்த்த காலம்போய், ஆயிரக்கணக்கான அப்டேட்களை நொடிப்பொழுதில் காண வேண்டிய சூழ்நிலை 
ஏற்பட்டுள்ளது.
இதனால் பல தேவையில்லாத தகவல்களால் வாட்ஸ் அப், ஃபேஸ் புக் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டு விடுகிறது. தேவையில்லாத தகவல்களை வடிக்கட்ட வாட்ஸ் அப்பில் "மியூட்' ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வசதி முகநூலிலும் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. 
வழக்கமாக முகநூலில் நம்மிடம் நண்பர்களாக இருப்பவர்கள் பதிவு செய்யும் தகவல்கள், புகைப்படங்கள் ஆகியவை நாம் உள்ளே நுழைந்ததும் வரிசையாக வரும். இதில் சிலர் தினந்தோறும் நூற்றுக்கணக்கில் தகவல்களைப் பதிவிட்டால், முதலில் அவற்றை நீக்கிவிட்டு, பிறகு பிறர் பதிவிடும் முக்கிய தகவல்களின் மீது கவனம் செலுத்த முடியாமல் போகிறது. அதற்குள் அவை மறைந்துவிடும் வாய்ப்பும் உண்டு. இதைத் தடுப்பதற்காக முகநூல் நிறுவனம் "ஸ்னூஸ்' எனும் புதிய வசதியை உருவாக்கியுள்ளது. 
ஒருவரது தகவல் பெட்டியில் வலது ஓரத்தில் கொடுக்கப்பட்டுள்ள "ஸ்னூஸ்' எனும் பொத்தானைக் கிளிக் செய்தால் போதும். அந்த நபரின் தகவல்கள் ஒரு மாதத்துக்கு வராது. இதனால் அந்த நபருக்கே தெரியாமல் நாம் அவருடைய தகவல்களை வடிகட்டிவிடலாம். இந்த வசதியை ஓர் உறுப்பினருக்கோ அல்லது குழுக்களுக்கோ எதிராகப் பயன்படுத்தி கொள்ளலாம். இதனால் தேவையில்லாத பதிவுகளைப் தொடர்ந்து பதிவிடும் நபர்களை நீக்காமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம். ஒரே பதிவு பல்வேறு உறுப்பினர்களிடம் இருந்து வருவதாலும், அந்தப் பதிவுக்கு பல முறை "லைக்' போடுவதினாலும் முகநூல் உறுப்பினர்கள் மனரீதியாக பாதிக்கப்படுவதாக வெளியான ஆய்வுத் தகவலின் காரணமாக இந்த புதிய சேவையை முகநூல் நிறுவனம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.