டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வேலை... வேலை... வேலை...

சென்னை ஐ.ஐ.டி.யில் வேலை

News image
Updated On :3 ஏப்ரல் 2018, 10:43 am

பிரவீண் குமார்

கன்னியாகுமரி ஆவின் நிறுவனத்தில் வேலை

பதவி: டெக்னிஷியன் (ஆட்டோ எலெக்ட்ரிக்கல்)

காலியிடம்: 01

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஃபிட்டர், மெக்கானிக் மோட்டார் வெஹிகிள் பிரிவில் ஐ.டி.ஐ. தேர்ச்சியுடன் என்.டி.சி. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் (அல்லது) ஆட்டோமொபைல்/ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி/ எஸ்டி/ எம்பிசி, பிசி பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: http://aavinmilk.com என்ற இணையதளத்தில் சம்பந்தப்பட்ட பதவிக்கான விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, கீழ்க்காணும் முகவரிக்கு விரைவு அல்லது பதிவு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி: The General Manager, Kanyakumari District Co-operative Milk Producers Union Limited, K.P.Road, Nagercoil, Kanyakumari District - 629 003

மேலும் விவரங்களுக்கு: http://aavinmilk.com/hrkanapp 070318.pdf  என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 06-04-2018.

தேசிய அறிவுசார் மாற்றுத்திறனாளிகள் 

மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை

பதவி: சிறப்புக் கல்வி ஆசிரியர் (நிலை-6 ) (ஓ.பி.சி)

காலியிடம்: 1

தகுதி: சிறப்புக் கல்வியியல் டிப்ளமோ/ பி.எட். (அல்லது) பி.ஆர்.எஸ். (எம்.ஆர்) - சிறப்புக் கல்வி தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பதவி: ஹோம் விசிட்டர்/ டீச்சர் (நிலை-6) (எஸ்.சி)

காலியிடம்: 1

தகுதி: ஏதேனும் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். சோசியல் வொர்க்கில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும். 

பதவி: ஜூனியர் ஸ்பெஷல் எஜுகேஷன் டீச்சர் (நிலை -5)

காலியிடங்கள்: 1

கல்வித் தகுதி: சிறப்புக் கல்வியில் பட்டப்படிப்பு/ டிப்ளமோவுடன் மனநிலை சரியற்ற குழந்தைகளுடன் இரண்டாண்டுகள் பணியாற்றிய அனுபவம் (அல்லது) பி.எட். - சிறப்புக் கல்வி (அல்லது) பி.ஆர்.எஸ். (எம்.ஆர்) - சிறப்புக் கல்வி தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பதவி: சுருக்கெழுத்தாளர் (நிலை-4)

காலியிடம்: 1

தகுதி: எஸ்.எஸ்.எல்.சி முடித்திருக்க வேண்டும். ஆங்கில டைப்ரைட்டிங் நிமிடத்துக்கு 40 வார்த்தைகளும், ஆங்கில சுருக்கெழுத்து நிமிடத்துக்கு 100 வார்த்தைகளும் அடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும்.

வயது வரம்பு: 18 வயதிலிருந்து 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.niepid.nic.in/emp%20012018.php என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். 

முகவரி: Director, NIEPID, Manovikasnagar, Secunderabad - 500009. 

மேலும் விவரங்களுக்கு: http://www.niepid.nic.in/012018/DETAILED%20NOTOFICATION.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 09-04-2018.

தென்னக ரயில்வேயில் வேலை

பதவி: Act/ Trade Appretices

காலியிடங்கள்: 2,652

தகுதி: ஃபிட்டர்/ மெக்கானிஸ்ட்/ டர்னர்/ மெக்கானிக் (டீசல்) மெயின்டெனன்ஸ்/ அட்வான்ஸ் வெல்டர்/ எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்ஸ், பெயிண்டர், கார்பென்டர், பிளம்பர் உள்ளிட்ட 19 பிரிவுகளில் ஐடிஐ / என்.டி.சி. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 15 வயதிலிருந்து 24 வயதுக்குள் இருக்க வேண்டும். புதிதாக ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களின் அதிகபட்ச வயது 22. எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு அதிக பட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: http://www.sr.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 (பொது மற்றும் எம்.பி.சி. பிரிவினருக்கு). Work Shop Personnel Officer/S&T Work Shop, Southern Railway-Podanur, Coimbatore-641 023 என்ற பெயரில் கோயம்புத்தூரில் செலுத்தத்தக்க விதத்தில் இந்திய அஞ்சல் ஆணையை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

முகவரி: The Work Shop Personnel Officer, Office of the Chief Work Shop Manager, Signal & Telecommunication Work Shop, Southern Railway Podanur, Coimbatore  District, Tamil Nadu  641 023.

மேலும் விவரங்களுக்கு: http://www.sr.indianrailways.gov.in/cris//uploads/files/1521004068059-ptj-act-apprentice-notification-2018-revised-1.pdf  என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 11-04-2018.

சென்னை ஐ.ஐ.டி.யில் வேலை

பதவி: பேராசிரியர்/ இணைப் பேராசிரியர்/ உதவி பேராசிரியர்

காலியிடங்கள்: எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை

தேவைப்படும் துறைகள்: ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், உயிரி தொழில்நுட்பம், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் & இன்ஜினியரிங், இன்ஜினியரிங் டிசைன், மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஓஷியன் இன்ஜினியரிங், அப்ளைடு மெக்கானிக்ஸ், கெமிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், மானுடவியல் மற்றும் சமூக அறிவியல், கணிதம், மெட்டலர்ஜிக்கல் மற்றும் மெட்டிரியல்ஸ் இன்ஜினியரிங், இயற்பியல்.

தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் பி.எச்.டி.யில் முதல் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்ச்சியை அடைந்திருக்க வேண்டும்.

முன் அனுபவம்: உதவி பேராசிரியர்- 3 ஆண்டுகள் . இணைப் பேராசிரியர்- 6 ஆண்டுகள் அனுபவம். 

பேராசிரியர்- 10 ஆண்டுகள் முன் அனுபவம். 

விண்ணப்பிக்கும் முறை: facapp.iitm.ac.in என்ற இணையதளத்துக்குச் சென்று ஆன்லைன் மூலமாக விவரங்களைப் பதிவு செய்து, தேவையான சான்றிதழ்களையும் புகைப்படத்தையும் பதிவேற்றி விண்ணப்பிக்க வேண்டும். பின்னர், விண்ணப்பத்தை மட்டும் பிரதியெடுத்து, கையொப்பமிட்டு கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி: Dean (Administration) IIT Madras Chennai 600 036. 

மேலும் விவரங்களுக்கு: https://facapp.iitm.ac.in/2018b/sites/default/files/R218-Advertisment.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 13-04-2018.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.